Latest Posts
Aug 2, 2017
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல என்று கூறினார்.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாங்கள் வட கொரியாவின் எதிரிகள் அல்ல… ஆனால் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அவர்கள் (வட கொரியா) ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார் டில்லர்சன்.
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, வட கொரிய அரசை கவிழ்க்க நினைக்கவில்லை என்றார்.
Read More →Aug 2, 2017
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, எந்த இடத்தில் மருத்துவமனை அமைப்பது என்று டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. தமிழக அரசு சில இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான வேறு எந்த அறிவிப்பையும் மத்திய அரசு செய்யவில்லை. எந்த இடத்தில் மருத்துவமனை அமையும் என்றும் முடிவு செய்யவில்லை.
Read More →Aug 2, 2017
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நவாஸ் ஷெரீஃபின் தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, இதற்கென நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர்.
Read More →Aug 2, 2017
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இத்தொகுதில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்று பகிரங்கமாக கூறி தேர்தல் ஆணையம் தோ்தலை நிறுத்தியது.
இதனையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல் குவாரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Read More →Aug 1, 2017
அரசிதழில் அறிவிக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட மாற்றங்களிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார். “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு என்று பேசிப்பேசியே காலத்தைத் வீணடித்தது போல இதுவும் ஆகிவிடுமோ என்று தமிழக மக்கள் அஞ்சுகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள், 5 ஏக்கர் நிலம், வருமான வரி மற்றும் தொழில் வரி செலுத்துபவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் ரேஷன் சலுகைகள் வழங்கப்படாது என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More →Aug 1, 2017
சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படவில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ராஜ்யசபாவில் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து விளக்கமளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு மானியம் ரத்து தொடர்பான எம்.பி-க்களின் அமளி தேவையற்றது என்றார். சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்ற அவர், மானியம் முறைப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்றார். யார் யாருக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது என்பது குறித்து முறைப்படுத்தப்படும் என்றார்.
Read More →Aug 1, 2017
வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை உறுதி செய்யவில்லை. எனினும், தற்போது ஸ்காரமுக்கி வெளியேறியபின், ஜான் கெல்லியிடம் முழுப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்.
Read More →Aug 1, 2017
உத்தரகண்ட் – சமோலி மாவட்டத்திலுள்ள பரகோட்டில் எல்லை தாண்டி 1 கி.மீ உள்ளே புகுந்து சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், சீன அதிபர் க்ஸி ஜின்பிங்-கை இன்னும் 3 நாட்களில் சந்தித்துப் பேசுவதாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
10லிருந்து 12 சீன ராணுவ வீரர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்திலும், சீன ராணுவத்தினர் 200 மீட்டர்கள் பரகோட்டில் எல்லை கோட்டைத் தாண்டி வந்துள்ளனர். அச்சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் , எல்லை சரியாக குறிக்கப்படாததால் இரு தரப்பினருக்கும் தமது எல்லை எதுவரை என்று தெரியாமல் இருந்திருப்பதால் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
Read More →Jul 31, 2017
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள ஹாணலுலு நகரில் மொபைல் ஃபோன் குறித்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி சாலையில் செல்லும் பாதசாரிகள் மொபைல் உபயோகித்தால் அபராதம் விதிக்கப்படும். பாதசாரிகள் குறுஞ்செய்தி அல்லது போனில் பேசிக்கொண்டே செல்வதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதைக் தடுக்கவே இத்தகைய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சாலைகளில் டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தினால் 15 முதல் 35 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த உத்தரவு வரும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் நகர நிர்வாக தலைவர் கிர்க் கால்டுவெல் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலில் அபராதம் செலுத்திவிட்டு பின் தொடர்ந்து அந்த தவறை திரும்ப செய்தால் 99 டாலர்கள் வரை அபராதம் விதிக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Read More →Jul 31, 2017
அ.தி.மு.க அம்மா அணியின் துணைப்பொது செயலாளர் தினகரன் ஆக.5 முதல் மீண்டும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தினகரன் 5-ந்தேதி அன்று வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தாம் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வரவேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்று மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்செய்தி வெளியானதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Read More →