Latest Posts

உதவி ஜனாதிபதி தேர்தல் : ஓட்டுப்பதிவு முடிந்தது, வெங்கையா ஜெயிப்பார் என எதிர்பார்க்கலாம்

Aug 5, 2017

இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவுற்றது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் அடிப்படையில், பாஜக வின் வேட்பாளரான வெங்கையா நாயுடு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதலாம்.

Read More →

குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல்

Aug 4, 2017

பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பயணம் செய்த கார் மீது பா.ஜ.க. -வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடந்த இத்தாக்குதலினால், ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார். குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற பாஜகவின் வெறுப்புணர்வால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான இந்த தாக்குதல், குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Read More →

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாது: தேர்தல் ஆணையம்

Aug 4, 2017

அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து எதுவும் தீர்மானிக்கப் படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுவாமிநாதன் கல்யாண சுந்தரம் என்பவர் அதிமுக உட்கட்சி பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில பதில்களை அளிக்கக் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து, இதுவரை முடிவெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கும் இதுவரை தீர்மானிக்கப் படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சசிகலா எப்போது பதவியேற்றார் என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்கவில்லை.

Read More →

86 மாடிகளை கொண்ட துபாய் டார்ச் டவரில் தீ விபத்து

Aug 4, 2017

துபாய் நகரிலுள்ள 86 மாடிகளை கொண்ட பிரபல டார்ச் டவரில் தீ விபத்து ஏற்பட்டு சேதப்படுத்தியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள இரண்டாவது தீ விபத்து ஆகும். சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் கட்டடத்திலுள்ள 676 அபார்ட்மெண்ட்களில் வசித்திருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தியதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் டவர், 337 மீட்டர் (1105 அடி) உயரமானது.

Read More →

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது

Aug 4, 2017

40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை திருடியதை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த ஜனவரி மாதம் ‘Aadhaar e-KYC’ என்ற ஆப் மூலம் ஆதார் தகவல்கள் பலவற்றை திரட்டியுள்ளார்.

Read More →

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

Aug 3, 2017

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார். இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.

Read More →

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு வெறு இடத்திற்கு மாற்றப்படும்

Aug 3, 2017

சென்னை கடற்கரையிலுள்ள காமராஜர் சாலையிலிருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலினால் இந்த சிலை அகற்றப்பட்டதாகவும், விரைவில் அடையாறில் கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிதாக மெரினா கடற்கரையில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என சிவாஜி மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராம்குமார் மற்றும் பிரபு கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை ஏற்று, அரசு சிலையை அகற்றுகிறது. அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம். கோர்ட்டை மதிக்க வேண்டியது நமது கடமை. எனவே அரசு நடவடிக்கையை ஏற்கிறோம். மெரீனா கடற்கரையில் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள் சிலைகள், கண்ணகி சிலை, உழைப்பாளர் சிலைகள் உள்ளன.

Read More →

பரபரப்பில் அதிமுக: தினகரனின் ஆக.5 கெடுவும் எடப்பாடி தரப்பு பதிலும்

Aug 3, 2017

அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக அவர் ஆகஸ்டு 5-ம் தேதி அதிமுக தலைமைக் கழக கட்டிடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழையப் போவதாக அறிவித்திருந்த கெடு இன்னும் 2 நாட்களில் வருகிறது. இன்னிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியின் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் பழனி சாமிதான் வழிநடத்தி வருகிறார். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை” என்று கூறியுள்ளார். ஆகவே பெரும் பரபரப்பை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.

Read More →

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர்

Aug 3, 2017

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார். மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும் தெரிவித்துள்ளார். கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் போரால் பூமியைப் பாழ்படுத்தப் போவதைத் தடுத்தாக வேண்டும். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும்.

Read More →

தேடிய செல்வம் நிலைக்காமல் நீங்கும் காரணங்கள்

Aug 3, 2017

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும் செல்வம் உடைக்கும் படை பாடியவர்: நல்லாதனார் : திரிகடுகம் # 38     பாடுபட்டுச் சேர்த்தச் செல்வத்தைச் பாதுகாக்கவே எவரும் நினைப்பர். ஆயினும், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும். இவற்றையே ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார் திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.  

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »