Latest Posts
Aug 7, 2017
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்களில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஆம்புலன்சில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை வசதி இல்லாததால், முருகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள திருவனந்தபுரம் மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அறை வசதி இல்லை என்று கூறி, முருகனை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது என ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார்.
Read More →Aug 7, 2017
ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமது நாட்டை “தனிமைப்படுத்தி, தடுத்து நிறுத்துவதற்கு” உருவாக்கப்பட்ட அமெரிக்க சதித்திட்டம் “அதன் இறையாண்மையின் வன்முறை மீறல்” ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More →Aug 6, 2017
டி மர எண்ணெய் (Tea Tree Oil)
ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும்.
இதனை வாயில் விழுங்கினால் விஷமாகும். ஆகவே, வெளி உபயோகத்திற்கு மட்டும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.
Read More →Aug 6, 2017
பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷாகித் ககான் அப்பாஸியின் 47 பேர் கொண்ட அமைச்சரவையில் 65 வயதான தர்ஷன் லால் என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஒரு இந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிந்து மாகாணத்தில் மிர்புர் மாதெல்லோ எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் லால். இவர் மருத்துவராக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில் சிறுபான்மையிருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து பாகிஸ்தானின் தேசிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீஃப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கின் சார்பாக போட்டியிட்டார். இப்போது அவருக்கு மாகாணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் காபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Read More →Aug 6, 2017
தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் இன்று 11 மணி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர். அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சிவகாசியில் நடைபெறும் எம். ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார். ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் வி.
Read More →Aug 6, 2017
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்றும் பதவி மாதிரி தோன்றினாலும், நிஜத்தில் நாசாவுக்குத் தேவைப்படுவது வேறு. அவர்களுக்குத் தேவையானவர், பூமியிலிருந்து செவ்வாய், சனி போன்ற பிற கோள்களுக்கு நாம் அனுப்பும் ராக்கெட் மற்றும் ரோபோ ஆய்வுக்கலங்களால் நமது நுண்ணுயிரிகள் அங்கே நோய்த் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கவும், மற்ற கோள்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படும் மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகள் ஏதும் இங்கே தொற்றிவிடாமலும் இருக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யும் ஒருவர்.
Read More →Aug 6, 2017
வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும்.
வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும். அதிபர் டிரம்ப் பதவிக்கு வந்த பின் முதல் முறையாக சீனாவும் தனது கூட்டாளி நாடான வட கொரியாவை விட்டுக் கொடுக்க வைத்து, தீர்மானத்தை நிறைவேற்ற வழி செய்துள்ளார்.
Read More →Aug 5, 2017
இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணப்பட்டபின் பாஜக வேட்பாளர் 68 வயதான முப்பவரப்பு வெங்கையா நாயுடு வெற்றி பெற்று இந்தியாவின் 12-வது உதவி ஜனாதிபதியாகும் தகுதி பெற்றுள்ளார்.
வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
Read More →Aug 5, 2017
ஆகஸ்டு 5-ம் தேதி தலைமைக் கழக கட்டிடத்தினுள் நுழையப்போவதாக கெடு விதித்திருந்த டி.டி.வி. தினகரன், அதனை செய்யப் போவதில்லை என்று கூறிய பின்னர், மீண்டும் பரபரப்பு உண்டாக்கும் நோக்கத்தில், அதிமுக அம்மா அணியில் 60 புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார். அவருடைய செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினகரன் வழங்கிய பதவியை ஏற்க மாட்டோம் என்று 3 எம்எல்ஏக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவினால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், கட்சியின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாள் கெடு விதித்திருந்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Read More →Aug 5, 2017
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.
இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.
முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார்.
எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து போராட வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் சண்டிகர், டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More →