Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா,  தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும். அதனால் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.  இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடி வருகிறது. தற்போது இந்தியா 10 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி ஒருவேளை மழையால் கைவிடப்பட்டால், ரன் ரேட் விகிதப்படி, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

Share
Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஜெலீனா ஆஸ்டாபென்கோ ஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்

டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இது வரை இடம்பெறாத வீராங்கனையான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, 2017-ஆம் ஆண்டின் மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், லாத்வியா நாட்டை சேர்ந்த முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் என்ற பெருமையை ஜெலீனா ஆஸ்டாபென்கோ பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த மகளிர் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதியாட்டத்தில், 20 வயதான ஜெலீனா ஆஸ்டாபென்கோ, முதல் செட்டை இழந்து பின்தங்கி இருந்த போதிலும், பின்னர் போராடி 4-6 6-4 6-3.என்ற செட் கணக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை ஆஸ்டாபென்கோ வென்றார்.

கடந்த 1933-ஆம் ஆண்டுக்கு பிறகு, முதல்முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற தரவரிசையில் இடம்பெறாத வீராங்கனை என்ற சாதனையையும் ஜெலீனா ஆஸ்டாபென்கோ படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து பேசிய ஜெலீனா ஆஸ்டாபென்கோ, ”எனது 20 வயதில் நான் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி விட்டேன் என்று என்னால் நம்பமுடியவில்லை. இந்த மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எனது கனவு; இது நிறைவேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

Share
Categories
விளையாட்டு

அதிக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே ஒரு இந்தியர்

உலகில் மிக அதிகமாக ஊதியம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்கள் கொண்ட பட்டியலை FORBES பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

உலகின் மிக உயர்ந்த சம்பளம் வாங்கும் 100 விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியர்

89 வது இடத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி – ரூ.142 கோடி

ரூ.19 கோடி ரூபாய் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஊதியம்

ரூ.123 கோடி விளம்பரங்களின் மூலம் கிடைத்த வருமானம்

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டொ முதலிடம் – ரூ.600 கோடி

அமெரிக்காவின் குடைப்பந்து வீரர் லெப்ரான் ஜெம்ஸ் இரண்டாவது இடம் – ரூ 554 கோடி

அர்ஜெண்டினாவின் கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி மூன்றாவது இடம் – ரூ. 514 கோடி

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – இலங்கை vs இந்தியா : இந்தியா பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா vs இலங்கை போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

Share
Categories
தமிழகம் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் பணம் பறிக்க முயற்சி

கடந்தாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்ட தமிழரான மாரியப்பன் தங்கவேலுவை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று மாரியப்பன் புகார் கூறியுள்ளார். ஓமலூர் பெரியகடம்பபட்டியில் நடைபெற்ற விபத்தொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்து மாரியப்பனின் காரை இடித்த சதீஷ் என்ற வாலிபர் மரணம் அடைந்ததால். சதீஷின் மரணத்துக்கு மாரியப்பன் தான் காரணம் எனக்கூறி மாரியப்பனிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயல்வதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சதீஷ் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து தனது காரில் மோதியதில் கார் சேதமடைந்துள்ளதாக தான் முன்னரே புகார் அளித்திருப்பதாகவும். சதீஷுக்கு நடைபெற்ற விபத்து குறித்தும் அவருடைய பெற்றோருக்கு தான் முன்னதாக தெரிவித்து விட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார். மாரியப்பன்.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன் டிரோபி : பாகிஸ்தானை வென்றது இந்தியா

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில், பாகிஸ்தானை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. 33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 50, முகமது ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய இந்திய அணியில் உமேஸ் யாதவ் 3, ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.

இந்திய அணி 9.5 ஒவர்கல் முடிவில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் விளையாடி வந்தது. இந்நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஸ்வின் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 46-0 (9.5  ஓவர்) உடன் ஆட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.

Share
Categories
வாள்வீச்சு விளையாட்டு

வாள்வீச்சு உலகக்கோப்பையில் முதன்முதலாக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

ஐஸ்லாந்தில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை வாள்வீச்சு (Fencing) போட்டியில்  இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் சி.ஏ.பவானிதேவி தங்கப்பதக்கம் வென்று  உள்ளார். சர்வதேச அளவில்  வாள்வீச்சு போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

அரையிறுதிப்போட்டியில் சி.ஏ.பவானிதேவி பிரிட்டன் நாட்டு வீராங்கனை ஜெஸிகா கார்பை எதிர்கொண்டார். இதில் 15-11 என்ற புள்ளிகணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியிலும்  பிரிட்டன் நாட்டை சேர்ந்த சாரா ஜென் ஹம்ப்சன் வீராங்கனையை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 15-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் வாள்வீச்சு (Fencing)போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்தை வென்றது இந்தியா

இந்தியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 190 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடியது. 26 ஓவர்களில் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 26 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

 

Share
Categories
கிரிக்கெட்டு பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் போட்டித்தொடரில்,  இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 19 வயதான தீப்தி சர்மா அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக மட்டை வீசினார்.

முதல் விக்கெட்டாக களம் இறங்கிய தீப்தி ஷர்மாவும், பூனம் ராவத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இருவரும் இணைந்து 320 ரன்களை குவித்தனர். தீப்தி 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி தகுதிபெற்றது.

அதைத் தொடர்ந்து சில வாரங்களில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சிறப்[பை ஜூலன் கோஸ்வாமி பெற்றார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தீப்தியும், பூனமும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள்.

என்னைப் போன்ற இளைஞிகள் தற்போது கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம். இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை செய்வது அணியின் மனோபலத்தை அதிகரித்திருப்பதாக கூறும் தீப்தி, இந்த உத்வேகத்தை உலகக்கோப்பையாக மாற்றுவோம் என்கிறார்.

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இந்திய ஆண்கள் அணி அந்த நிலைமையை மாற்றுவதில் வெற்றிபெற்றது.

இனி இந்திய பெண்கள் அணி, ஆடவர் அணியைப் போல் தனக்கென கிரிக்கெட்டில் ஒரு சிறந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக முடியும் என்கிறார் பூனம்.

Share