Categories
நீச்சல் விளையாட்டு

மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளை சுறாவுடன் போட்டியிடபோகிறார்

நீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், கடலில் மிகவும் திறமையாக வேட்டையாடும் சுறாவோடு போட்டியிட இருப்பதாக டிஸ்கவரி சானல் தொலைக்காட்சியின் செய்தி வெளியிட்டு உள்ளது.

31 வயதாகும் பெல்ப்ஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் மட்டும் 23 தங்கப்பதக்கங்களை பெற்று 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.

மைக்கேல் பெல்ப்ஸ்  நீந்துகின்றபோது, அதிகபட்சமாக மணிக்கு 6 மைல் வேகத்தில் செல்லும் திறனுடையவர்.ஆனால், மிகப் பெரிய வெள்ளை சுறா மணிக்கு 25 மைல் வேகத்தில் நீந்தக்கூடியதாகும்.

அதிக தங்கமகன் Vs பெரிய வெள்ளை சுறா” என்கிற தலைப்பிலான டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜூலை 23 ஆம் நாள் தொடங்குகின்றது  “சுறா வாரம்” நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இது அமையும்.

Share
Categories
நீச்சல் விளையாட்டு

நீச்சல் போட்டி: இங்கிலீஷ் கால்வாயை தாண்டி 66 வயது பாட்டி சாதனை

ஒவ்வொரு வருடமும்  கால்வாய் நீச்சல்  அசோசியேஷன்(Channel Swimming Association ) சர்வதேச அளவில் நீச்சல் போட்டி நடத்தி வருகிறது.  இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த வருடம் சி.எஸ்.ஏ நடத்திய நீச்சல் போட்டியில் ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பட் ஹலண்ட் ஷார்டீ  வெற்றி பெற்றுள்ளார்.66 வயதான இவர் பல தடைகளை  மீறி வென்றுள்ளார். நீரின் வெப்பம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. மேலும் அவர் முகத்தில் ஜெல்லி பிஷ் கடித்தது. இதையும் மீறி அவர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நீந்தும் வழியில் பெரிய சன் பிஷ் பார்த்ததாக கூறியுள்ளார்.

சி.எஸ்.ஏ. மூதாட்டியின் சாதனையை உறுதி செய்துள்ளது. ஓய்வு பெற்ற செவிலியரான ஷார்டீ  வெஸ்ட்புருக் பகுதியை சேர்ந்தவர். இவர்  இங்கிலாந்தில் இருந்து மார்குயே,பிரான்ஸ் வரை நீந்தி சென்று கடந்த சனிக்கிழமை தனது போட்டியை முடித்துள்ளார்.

இதனை கடக்க இவர் 18 மணி நேரம் எடுத்துக்கொண்டார். கடுமையான நீரோட்டம் காரணமாக கடைசி 3 மைலை கடக்க மூன்று மணி நேரம் ஆகியது. இதற்கு முன் 2011ஆம் ஆண்டு தனது 60 வது வயதில் இப்போட்டியில் பங்கு பெற்றார்.ஆனால் அதில் அவர் தோல்வி கண்டார்.இந்த முறை 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதான சுயி ஒல்தம் செய்த சாதனையை முறியடித்துள்ளார்.

Share
Categories
இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து, இன்று கும்ப்ளே பதவி விலகினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் கும்ப்ளே செல்லவில்லை.

சமீபத்தில் லண்டனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கமிட்டி கூடியபோது கோஹ்லி நேரில் ஆஜராகி, கும்ப்ளே குறித்து புகார் கூறினார்.

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிபோட்டியின்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் உச்சத்தைஅடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.  கும்ப்ளேவை மாற்றியே தீரவேண்டும் என்பதில் கோஹ்லி பிடிவாதமாக இருந்தார். ஆனால் இதை ஏற்பதில் கிரிக்கெட்வாரியம் மற்றும் கங்குலி குழுவினருக்கு தயக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக கும்ப்ளேவின் பதவிக்காலத்தைநீட்டிப்பதில்லை என்று கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், கும்ப்ளே தாமாகவே முன்வந்து பயிற்சியாளர் பதிவியில் இருந்து விலகி இருக்கிறார்.

Share
Categories
தலைப்புச் செய்திகள் விளையாட்டு ஹாக்கி

உலக ஹாக்கி லீகில் இந்தியா பாகிஸ்தானை வென்றது

உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி பாக்., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. லண்டனில் உலக ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவை எதிர்கொண்டது. இதில் அபாரமாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் எதிரி நாடான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய அணி. ஆட்டத்தின் முதல் பாதியில் 3 கோல் அடித்தது.

இந்தியாவின் டால்விந்தர், ஹர்மான்பிரித் ஆகியோர் தலா 2 கோல் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்தியா வரும் 20ம் தேதி கடைசி லீக் அரை இறுதி தொடரின் காலிறுதி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபி: இன்று இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பல் தோல்வி

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் – 338 ரன்கள் (4 விக்கட்)

இந்தியா – 158 ரன்களுடன் ஆல் அவுட்


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 265 ரன்கள் பெற்றுள்ளது.


எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபியின் இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கிறது.

இதில் கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு அணி  வீரர்களும் முழு திறமையையும் வெளிப்படுத்த உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதை வைத்து  சூதாட்டமும் கொடி கட்டிப் பறக்கிறது. இங்கிலாந்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், பெட் கட்டுவதற்காக ரசிகர்கள்  பணத்தை அள்ளி வீசுகின்றனர்.

 

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ்: இந்தியா வங்கதேசத்தை வென்று இறுதிபோட்டிக்குத் தகுதி

இன்று நடைபெற்ற இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா வென்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசம் முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 265 ரன் வெற்றி இலக்கோடு ஆடத்துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் தவானும் சிறப்பாக ஆடினர். ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவும் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் இணைந்து 40.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் மொத்தம் 265 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றியடையச் செய்தனர். ரோகித் சர்மா 123 ரன்களும், விராத் கொஹ்லி 96 ரன்களும் பெற்றனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.

Share
Categories
தடகளப் போட்டி விளையாட்டு

சொந்த மண்ணில் 100 மீ. ஓட்டத்தில் வெற்றியுடன் விடைபெற்றார் உசேன் போல்ட்

உலகின் அதிவேக மனிதராக 8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த உசேன் போல்ட், சொந்த மண்ணில் பங்கேற்ற கடைசி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அபாரமாக வென்று அசத்தினார்.  2008 – ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்களை வென்று  சாதனை வீரராக படைத்த ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் , சர்வதேச போட்டிகளில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ளார். லண்டனில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரே அவரது கடைசி போட்டியாக இருக்கும்.

இந்நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக சொந்த ஊரான கிங்ஸ்டனில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 30,000 ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பரிக்க, அபாரமாக ஓடிய போல்ட் 10.03 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், சர்வதேச தடகள கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டியன் கோ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, போல்ட்டுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.

Share
Categories
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் : 10வது முறையாக ரபேல் நடால் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய நடால், அதிரடியாக விளையாடி 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் ((2005 -08, 2010-14, 2017) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவர் பெறும் 15வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

Share
Categories
செஸ் விளையாட்டு

செஸ்: இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த் தோல்வி

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், 2வது தோல்வியடைந்தார் . இவர், நான்காவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் வீழ்ந்தார்.

‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், ஸ்டாவன்ஜர் நகரில் நடக்கிறது. இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 33வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். முன்னதாக 2வது சுற்றில் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கிடம் வீழ்ந்தார். மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் நகமுரா (எதிர்- வாசியர் லாக்ரேவ்), ஆர்மேனியாவின் ஆரோனியன் (எதிர்- கார்ல்சன்) வெற்றி பெற்றனர்.

நான்கு சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா (3 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை தலா 2.5 புள்ளிகளுடன் ஆர்மேனியாவின் ஆரோனியன், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், பகிர்ந்து கொண்டுள்ளனர். ஆனந்த் (1) 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Share
Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு தலைப்புச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா,  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குச் செல்ல தகுதி பெற்றது.

டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.  இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை  38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது.

ஷிகர் தவான் 78 ரன், விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். யுவராஜ் இமாலய சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

Share