Categories
ஐ.சி.சி. கிரிக்கெட்டு விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்தை வென்றது இந்தியா

இந்தியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 190 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடியது. 26 ஓவர்களில் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 26 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

 

Share
Categories
கிரிக்கெட்டு பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டித் போட்டித்தொடரில்,  இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 19 வயதான தீப்தி சர்மா அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக மட்டை வீசினார்.

முதல் விக்கெட்டாக களம் இறங்கிய தீப்தி ஷர்மாவும், பூனம் ராவத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இருவரும் இணைந்து 320 ரன்களை குவித்தனர். தீப்தி 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி தகுதிபெற்றது.

அதைத் தொடர்ந்து சில வாரங்களில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சிறப்[பை ஜூலன் கோஸ்வாமி பெற்றார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தீப்தியும், பூனமும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள்.

என்னைப் போன்ற இளைஞிகள் தற்போது கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம். இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை செய்வது அணியின் மனோபலத்தை அதிகரித்திருப்பதாக கூறும் தீப்தி, இந்த உத்வேகத்தை உலகக்கோப்பையாக மாற்றுவோம் என்கிறார்.

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இந்திய ஆண்கள் அணி அந்த நிலைமையை மாற்றுவதில் வெற்றிபெற்றது.

இனி இந்திய பெண்கள் அணி, ஆடவர் அணியைப் போல் தனக்கென கிரிக்கெட்டில் ஒரு சிறந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக முடியும் என்கிறார் பூனம்.

Share
Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

ஐ.பி.எல் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது.

ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக புனே அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Share
Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

இன்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி

இன்றிரவு நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் புனே அணியை எதிர்த்து மும்பை இண்டியன்ஸ் அணி விளையாட உள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் 10-வது ஐ.பி.எல். சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14ம் தேதியுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்தன. இதன் முடிவில் மும்பை 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 9 வெற்றிகளுடன் 18 புள்ளி பெற்று புனே 2வது இடத்தை பிடித்தது.

முதல் 2 இடங்களை பிடித்த மும்பை – புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின. இதில் புனே 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து நடந்த 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனிடையே, இத்தொடரின் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

 

Share
Categories
ஐ.பி.எல். கிரிக்கெட்டு விளையாட்டு

டெல்லி குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி கிரிக்கெட்

டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சில சுவாரஸ்யங்கள்:

► குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்த போட்டியில் 43 பந்துகளுக்கு 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 77 ரன்களை எடுத்ததன் மூலம் தனது 5 ஆயிரம்(5,059) ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். 5066 ரன்களுடன் பெங்களூரு அணியின் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்டிங்கில் மொத்தம் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது. அதில் ரிசப் பேண்ட் -9 சிக்சர்களும், சாம்சனின் 7 சிக்சர்களும் ஷ்ரெயாசின் 2 சிக்சர்களும், ஆண்டர்சனின் 2 சிக்சர்களும் அடக்கம்.

► இந்த போட்டியில் 37.3 ஓவர்களில் குஜராத் லயன்ஸ் பேட்ஸ்மேன்களால் 11 சிக்சர்கள், டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் என மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது. மொத்தம் எடுக்கப்பட்ட 422 ரன்களில் 186 ரன்கள் சிக்சர்கள் மூலம் பெறப்பட்டவை. அதாவது மொத்த ரன்னில் 44% சிக்சர்கள் மூலம் எடுக்கப்பட்ட ரன்களாகும்.

► இந்தப் போட்டியில் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010ம் ஆண்டில் சென்னை சூப்பர்கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் 30 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

► டெல்லி டேர்டெவில்ஸ் அணி 214 ரன்களை 17.3 ஓவரில் துரத்திப் பிடித்தது 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாகும். அதற்கு முன் 2007ம் ஆண்டில் சவுத் ஆப்பிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 17.4 ஓவரில் 208 ரன்களை துரத்திப் பிடித்து வரலாற்றை பதிவு செய்திருந்தது.

► 209 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி  துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2008ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றப் போட்டியில் 215 ரன்களை துரத்திப்பிடித்து வரலாற்றை பதிவுசெய்திருந்தது.

► சஞ்சு சாம்சன் 7 சிக்சர்களை அவரது பங்கிற்கு விளாசித்தள்ளினார். நிதிஷ் ராணாவிற்குப் பிறகு 7 சிக்சர்களை பவுண்டரிகள் ஏதும் எடுக்காமல் விளாசியது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நிதிஷ் ராணா, பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் 7 சிக்சர்களை விளாசியிருந்தார்.

► இந்த ஆட்டத்தில் ரிஷப் பேண்ட் 43 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் அடித்து 97 ரன்கள் பெற்றதன் மூலம் 225.58 ஸ்ட்ரைக் ரேட் பெற்றிருந்தார். இது இந்த சீசனில் 90+ ரன்கள் அடிக்கப்பட்டதில் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக்ரேட் ஆகும்.

► இந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் பேட்ஸ்மேன்களால் 20 சிக்சர்கள் விளாசப்பட்டது, ரன்களை சேஸ் செய்வதில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன் டெல்லிடேர்டெவில்ஸ் வீரர்களால் இரண்டு முறை 19 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. அதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் 15 சிக்சர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

► 214/3 ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி அடித்தது இரண்டாவது அதிகபட்சமாகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217/7 ரன்களை டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக துரத்தி பிடித்திருந்தது.

► 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 200+ ரன்களை டெல்லி டேர்டெவில்ஸ் அணி துரத்திப்பிடித்தது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 201 ரன்களை துரத்திப்பிடித்து வெற்றியை பதிவு செய்திருந்தது.

► இந்த போட்டியில் உள்ள மற்றொரு சுவாரஸ்யம் என்னவெனில் கடந்த வருடம் இதே நாளில் நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ரிசப் பேண்ட் 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். அந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

► இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

வார்னர் – 23 சிக்சர்கள்
உத்தப்பா – 21 சிக்சர்கள்
ரிசப் பேண்ட் – 20 சிக்சர்கள்
சாம்சன் – 19 சிக்சர்கள்

(NEWS 7)

Share