வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.
இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது.
சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அனில் கும்பிளேவின் முதல் பயணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அமைந்தது. சரியாக ஓராண்டுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அங்கு சென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை பயிற்சியாளர் பதவியில் கும்பிளே இல்லை. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பதவியை துறந்து விட்டார். இந்த விவகாரத்தை சுற்றி நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் உலா வரும் சூழலில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் வலுவான இந்திய அணியே அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய தரப்பில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத ரஹானே, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இந்த தொடரில் நிச்சயம் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.
தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஷிகர் தவானுடன் ரஹானே அல்லது ‘இளம்’ புயல் ரிஷாப் பான்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்கள். அதே போல் சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்களில் ஒருவரை கழற்றி விட்டு ‘சைனாமேன்’ வகை பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. கும்பிளே விலகிய நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கேப்டனுக்கு எதிராக எதையும் சொல்லப்போவதில்லை. அதனால் கேப்டன் விராட் கோலி, ஆடும் லெவன் அணியை தனது இஷ்டத்துக்கு தேர்வு செய்வதில் எந்த தொந்தரவும் இருக்காது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் கோஹ்லிக்கும் இடையே மோதல் முற்றியதைத் தொடர்ந்து, இன்று கும்ப்ளே பதவி விலகினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்ற இந்திய அணியுடன் கும்ப்ளே செல்லவில்லை.
சமீபத்தில் லண்டனில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் கமிட்டி கூடியபோது கோஹ்லி நேரில் ஆஜராகி, கும்ப்ளே குறித்து புகார் கூறினார்.
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிபோட்டியின்போது கும்ப்ளேவுக்கும், கோஹ்லிக்கும் இடையே மோதல் உச்சத்தைஅடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. கும்ப்ளேவை மாற்றியே தீரவேண்டும் என்பதில் கோஹ்லி பிடிவாதமாக இருந்தார். ஆனால் இதை ஏற்பதில் கிரிக்கெட்வாரியம் மற்றும் கங்குலி குழுவினருக்கு தயக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக கும்ப்ளேவின் பதவிக்காலத்தைநீட்டிப்பதில்லை என்று கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், கும்ப்ளே தாமாகவே முன்வந்து பயிற்சியாளர் பதிவியில் இருந்து விலகி இருக்கிறார்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் – 338 ரன்கள் (4 விக்கட்)
இந்தியா – 158 ரன்களுடன் ஆல் அவுட்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் 41.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 265 ரன்கள் பெற்றுள்ளது.
எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரோபியின் இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கிறது.
இதில் கோப்பையை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இரு அணி வீரர்களும் முழு திறமையையும் வெளிப்படுத்த உள்ளனர். இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பதை வைத்து சூதாட்டமும் கொடி கட்டிப் பறக்கிறது. இங்கிலாந்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், பெட் கட்டுவதற்காக ரசிகர்கள் பணத்தை அள்ளி வீசுகின்றனர்.
இன்று நடைபெற்ற இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா வென்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
வங்கதேசம் முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 265 ரன் வெற்றி இலக்கோடு ஆடத்துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் தவானும் சிறப்பாக ஆடினர். ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவும் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் இணைந்து 40.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் மொத்தம் 265 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றியடையச் செய்தனர். ரோகித் சர்மா 123 ரன்களும், விராத் கொஹ்லி 96 ரன்களும் பெற்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குச் செல்ல தகுதி பெற்றது.
டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது.
ஷிகர் தவான் 78 ரன், விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். யுவராஜ் இமாலய சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும். அதனால் இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடி வருகிறது. தற்போது இந்தியா 10 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி ஒருவேளை மழையால் கைவிடப்பட்டால், ரன் ரேட் விகிதப்படி, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா vs இலங்கை போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.
ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில், பாகிஸ்தானை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. 33.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அசார் அலி 50, முகமது ஹபீஸ் 33 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய இந்திய அணியில் உமேஸ் யாதவ் 3, ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத், இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான், ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.
இந்திய அணி 9.5 ஒவர்கல் முடிவில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் விளையாடி வந்தது. இந்நிலையில், மைதானத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஸ்வின் இந்த போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 46-0 (9.5 ஓவர்) உடன் ஆட்டம் மீண்டும் துவங்கியுள்ளது.