Categories
காணொளி நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள் விண்கல் தாக்குதல்

2017 சூரிய கிரகணத்தை அடுத்து ‘நிபிரு’ கிரகம் பூமியை அழிக்குமா? (சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள் அப்படி நினைக்கிறார்கள்)

உலகெங்கிலும் உள்ள சதி கோட்பாட்டாளர்களில் (Conspiracy Theorists) பலர், “நிபிரு” என்ற ஒரு கிரகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியுடன் இடையில் மோதப்போவதாக கூறி வருகின்றனர். ஆகஸ்டு 21-ம் தேதி வரும் சூரிய கிரகணம், இந்த பேரழிவின் ஆரம்பத்தை அடையாளம் காணும் என்கின்றனர்.

‘பிளானட் எக்ஸ் – தி 2017 வருகை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட்  மீட், 2017 செப்டம்பர் 23 அன்று  நிபிரு என்ற கிரகம் (பிளானெட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) நமது பூமியை மோதி உடைக்கும் என்று கூறுகிறார்.

நிபிரு  என்று ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். என்றாலும், மீட் தன்னுடைய கூற்றுக்களை நிரூபிக்க பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

அக்டோபர் மாதத்தில் நிபிரு பூமியை அழிக்கும் என்று இந்த ஆண்டு துவக்கத்தில் மீட் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் தற்போது அவர் செப்டம்பரிலேயே அது நிகழும் என்கிறார்.

கிரேட் அமெரிக்கன் கிரகணம் – முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21 அன்று முழுமையான இருட்டில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கும். இச்சூரிய கிரகணம், நிபிரு கிரகத்தின்  வெளிப்படையான வருகையை குறிப்பதாக மீட் கூறுகிறார்.

 

Share
Categories
அமெரிக்கா நம்பினால் நம்புங்கள் பலவகைச் செய்திகள்

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.

மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து காப்பாற்றும் பதவி மாதிரி தோன்றினாலும், நிஜத்தில் நாசாவுக்குத் தேவைப்படுவது வேறு. அவர்களுக்குத் தேவையானவர், பூமியிலிருந்து செவ்வாய், சனி போன்ற பிற கோள்களுக்கு நாம் அனுப்பும் ராக்கெட் மற்றும் ரோபோ ஆய்வுக்கலங்களால் நமது நுண்ணுயிரிகள் அங்கே நோய்த் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கவும், மற்ற கோள்களிலிருந்து சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படும் மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகள் ஏதும் இங்கே தொற்றிவிடாமலும் இருக்கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யும் ஒருவர். இப்பதவிக்கு கிட்டத்தட்ட ரூ.7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும் என நாசா விளம்பரம் கூறுகிறது.

நியூ ஜெர்சியில் நான்காவது வகுப்பு படிக்கும் ஜேக் டேவிஸ், மேற்படி பதவிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் “ஜேக் டேவிஸ், விண்மீன் மண்டல பாதுகாவலர்” என்று கையொப்பமிட்டிருந்தார். இப்பதவி தனக்கு ஏன் சரியானதாக இருக்கும் எனச் சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார். அவற்றுள், விண்வெளி மற்றும் ஏலியன் சம்பந்தமாக பார்க்கமுடிந்த அனைத்துத் திரைப்படங்களையும் தான் பார்த்துவிட்டதாகவும், நன்றாக வீடியோ கேம்கள் விளையாடத் தெரியும் எனவும் கூறியிருந்தார். குறிப்பாக, தான் சிறுவயதினராக இருப்பதால், ஏலியன்கள் எப்படி சிந்திப்பார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறியிருந்தது பலரையும் கவர்ந்துள்ளது.

இக்கடிதம் நாசா அலுவலர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நாசாவின் கோள் ஆராய்ச்சி இயக்குனர் ஜோனத்தன் ரால், ஜேக்குடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால், நாசாவின் கோள்கள் சேவைப் பிரிவின் இயக்குனரான ஜேம்ஸ் எல். கிரீன் அனுப்பியுள்ள பதில் கடிதமே, ஜேக்கிற்கு அதிக நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜேம்ஸின் கடிதத்தில், “நாங்கள் புத்திசாலித்தனமான அறிவியல் அறிஞர்களிடம் இருந்தும், பொறியியலாளர்களிடம் இருந்தும்  வருங்காலத்தில் எங்களுக்கு உதவிகளை  எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீர் உமது பள்ளி, கல்லூரிப் படிப்பினை சிறப்பாக முடித்து, நாசாவில் எங்களுடன் சேருவீர் என எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியுள்ளார்.

 

Share
Categories
நம்பினால் நம்புங்கள்

கர்நாடக கிராமத்தில் ஏலியன் நடமாட்டமா ?

கர்நாடகா மாகாணத்திலிருக்கும் அன்டுர் என்ற கிராமத்தில்  ஒரு விவசாயப் பண்ணைக்கு அருகே, சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்தன. இதைப் பார்த்த மக்கள் இது எந்த விலங்கின் கால்தடமோ என்று வியந்தனர்.  எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் அது வேற்றுகிரகவாசிகளின் காலதடங்களாக இருக்கலாம் என அச்சம் அடைந்து உள்ளனர்.

ஞாயிறன்று அதிகாலையில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அமெரிக்கா காணொளி செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் நம்பினால் நம்புங்கள்

செவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்

அமெரிக்காவில் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் குழந்தைகளைக் கடத்திச் சென்று செவ்வாய் கிரகத்தில்  அடிமைக் குடியிருப்பில் வைத்திருப்பதாக ஒரு புதிய சதி கோட்பாட்டை (Conspiracy Theory) வெளியிட்டனர். இது யாராலும் நம்பமுடியாததாக இருந்தாலும்,  நாசா அதற்கு அமைதியாக,  அப்படி எந்த அடிமைக் குடியிருப்பும் செவ்வாயில் இல்லை என மறுத்திருக்கிறது.

வியாழனன்று (ஜூன் 29) அலெக்ஸ் ஜோன்ஸின் ரேடியோ நிகழ்ச்சியில், ராபர்ட் டேவிட் ஸ்டீல் என்பவர் கூறியதாவது :

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.  கடந்த 20 வருடங்களாக பூமியிலிருந்து கடத்தப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குழந்தைகளால் அக்காலனி நிரப்பப் பட்டுள்ளது. செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தபின்,  அந்த காலனியில் அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வெறு வழியில்லை.

இதனைப் பற்றி அலெக்ஸ் ஜோன்ஸ் கருத்துக் கூறுகையில்,

நாசாவின்  90 சதவிகித பயணங்கள் இரகசியமானவை என்று எனக்குத் தெரியும். உயர் மட்ட நாசா பொறியியலாளர்கள் சிலர் என்னிடம் சொல்வது என்னவென்றால், “உங்களுக்கு அங்கே நடக்கும் விஷயங்கள் எதுவுமே தெரியாது; என்னென்னவோ  நடக்கின்றன”. என்று ஜோன்ஸ் ஸ்டீலிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், “அங்கே என்ன நடக்கிறது என்று நாம் பார்க்க நாசா விரும்பவில்லை. ஆகவே ஒவ்வொரு முறையும் நாசாவின் ஆய்வுக்கலங்கள் (probes) அந்த பக்கமாகப் போகையில், அவர்கள் அவற்றை பதிவுசெய்யவிடாமல் அணைத்துவிடுகிறார்கள்”, என்றார்.

டெய்லி பீஸ்ட் என்ற பத்திரிகை இது குறித்து நாசாவின் கருத்தைக் கேட்டபோது, கலிபோர்னியாவிலுள்ள நாசா ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தின் பேச்சாளரான கய் வெப்ஸ்டர், அதற்கு பதிலளித்தார்.

“செவ்வாயில் நாங்கள் அனுப்பிய ரோவர் ஆய்வுக்கலங்களே உள்ளன. மனிதர்கள் யாரும் இல்லை. சென்ற வாரம் சில வதந்திகள் வந்தன. ஆனால், கண்டிப்பாக அங்கே மனிதர்கள் இல்லை.”

என்று அவர் கூறினார்.

அலெக்ஸ் ஜோன்ஸ் இதற்கு முன்னர் பல சதிக் கோட்பாடுகளை முன் வைத்திருக்கிறார். செவ்வாயைக் குறித்து வேறு பல சதிக் கோட்பாடுகளும் உள்ளன. அவைகளுடன் இப்புதிய சதிக் கோட்பாடும் சேருகின்றது.

Share
Categories
செவ்வாய் கிரகம் நம்பினால் நம்புங்கள்

செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி  ரோவர், 2004ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்ததற்கான தடயத்தை ரோவர் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தின் விளிம்பில் தற்போது ரோவர் உள்ளதாகவும், இந்தப் பள்ளம் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.

இது பள்ளமாக இருக்காது. மிகப்பெரிய ஏரியாக இருக்கலாம். இதில் காணப்படும் பாறைகள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டதாக இருக்கக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Share
Categories
காணொளி செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் நம்பினால் நம்புங்கள்

விசித்திரமான ‘கல் வட்டம்’ செவ்வாய் கிரகத்தில் காணப்பட்டது

ஒரு மர்மமான ‘கல் வட்டம்’ செவ்வாய் மேற்பரப்பில் காணப்பட்டது என்று வேற்றுக் கிரகவாசிகளை தேடுவதாக தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் தெரிவித்தனர்.

நாசாவின் (NASA)  செவ்வாய் கிரக கிரியோஸிட்டி ரோவரால்  (Mars curiosity rover) எடுக்கப்பட்ட இந்த படம், யுஎஃப்ஒ -வைத் தேடுபவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்,  செக்யூர்டீம்10  (secureteam10) என்ற யூட்யூப் (youtube) காணொளியில் இடம்பெற்றது.

“பாறைகளை செயற்கையாக அடுக்கி, ஒரு முழு வட்ட வடிவில், விசித்திரமாக உருவாக்கப்பட்டதைப் போல தோன்றுகிறது”, என்று செக்யூர்டீம்10-இனர் கூறுகின்றனர்.

மேலும் செக்யூர்டீம்10-இனர்  “இவ்வமைப்பு பொதுவாக செவ்வாய் கிரகத்திலோ, சந்திரன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களிலோ காணப்படும் இதர பள்ளங்களைப் போன்றதல்ல;  வட்டவடிவ அமைப்பில் இந்த பாறைகள் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டதைப்  போல் தோன்றுகிறது –  அல்லது – அது அழிந்தோ அல்லது புதைந்தோ இருக்கும் மிகப்பெரிய அமைப்பின் பகுதியாகவோ, இடிபாட்டுப் பகுதியாகவோ கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளனர்.

இந்த காணொளியைக் குறித்து  பலரும் கருத்துக்களை எழுதியுள்ளனர். சிலர், இப்பாறைகள் செயற்கையாக வட்ட வடிவில் அமைக்கப் பட்டவை என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“உண்மையில் எனக்கு ஒரு இயற்கையான பள்ளம் போல தோன்றுகிறது, “என்று ஒரு கருத்துரையாளர் குறிப்பிட்டார். “இது பொதுவாக காணப்படும், இயற்கையால் மாற்றமடைந்த ஒரு பாறையைப் போல தோன்றுகிறது” என்று மற்றொரு விமர்சகர் எழுதினார், “செவ்வாய் கிரகத்தில் காணப்படும் இந்த வட்டம் (சாப்பிடும் உணவான) பேகலின் ஒரு பகுதியாக இருக்குமோ” என்று மற்றொருவர் கேட்டுள்ளார்.

Share
Categories
நம்பினால் நம்புங்கள் விமானத்தை கண்டுபிடித்த இந்தியர்

ரைட் சகோதரர்களுக்கு முன்னரே விமானம் தயாரித்து பறந்து காட்டிய இந்தியர்

விமானத்தை கண்டுபிடித்தவர்கள் என்று போற்றப்படுபவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதர்கள். இவர்கள் 1903ஆம் ஆண்டு தாங்கள் உருவாக்கிய விமானத்தில் பறந்து உலகப் புகழ் அடைந்தனர்.

ஆனால் இவர்கள் ஆகாயத்தில் விமானத்தில் பறப்பதற்கு 8 ஆண்டுகளுக்குமுன்னரே, விமானம் தயாரித்து அதில் பறந்து காட்டி அசத்தியிருக்கிறார்இந்தியர் ஒருவர்.

மும்பையைச் சேர்ந்த சிவ்கர் பாபுஜி தல்பேட் என்பவர் சமஸ்கிருதம் மற்றும் வேதங்கள் கற்று அறிந்த சிறந்த அறிஞர் ஆவார்.

இவர் வேதங்களில் உள்ள பறக்கும் இயந்திரங்களை அடிப்படையாகக் கொண்டுசுயமாகவே ஒரு விமானம் தயாரித்து அதில் பறந்தும் காட்டியுள்ளார். இதுவேமனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பறக்கும் இயந்திரம் என்று கருதப்படுகிறது.

ரைட் சகோதர்கள் ஆகாய விமானத்தில் பறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரேசிவ்கர் பாபுஜி தல்பேட், தான் தயாரித்த விமானத்தில் 1895ஆம் ஆண்டுமும்பையில் உள்ள சொளபதி பகுதியில் பறந்து காட்டியுள்ளார்.

கேப்டன் ஆனந்த் போதாஸ் மற்று அமேயா ஜாதவ் ஆகிய இருவரும் பண்டைய கால விமானப் போக்குவரத்து குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது இது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பான ஆய்வறிக்கையை இருவரும் 2015ஆம் ஆண்டு மும்பையில் நடந்த 102வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

 

சமஸ்கிருத அறிஞரான சிவ்கர் பாபுஜி தல்பேட் வேதங்களை கற்றறிந்தவர். அது குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர் ஆவார்.

இவர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறக்கும் இயந்திரங்கள், விமானங்கள் ஆகியவை குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கட்டமாக ஆராய்ந்துள்ளார். மேலும், சப்தரிஷிகளுள் முக்கியமானவர்களான அகத்தியர் மற்றும் பரத்துவாசர் மாமுனிகள் குறிப்பிட்டுள்ளவற்றை ஆராய்ந்து பார்த்தே அதன்படி விமானத்தை தயாரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த வரலாற்றை ஆங்கிலேயர்கள் மறைத்துவிட்டனர் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 

ரைட் சகோதரர்களுக்கு முன்னதாகவே விமானம் தயாரித்து அதில் பறந்து காட்டியவர் என்று கருதப்படும் சிவ்கர் பாபுஜி தல்பேட்டின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு ஹவாய்சாடா என்ற இந்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Share
Categories
செவ்வாய் கிரகம் நம்பினால் நம்புங்கள்

செவ்வாய் / பூமி இடையிலான தொடர்பு ?

மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ வழி இருக்கிறதா என்பது பற்றி பேசும்போது, சிலர் நம் சொந்த சூரியக் குடும்பத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். செவ்வாயில் உயிர்கள் வாழ்கின்றன என்றும் நாசா அதனை மறைப்பதாகவும் சில சதி கோட்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

செவ்வாய் கிரகம் சம்பந்தமான பல புகைப்படங்கள் அங்கே வேறு உயிர்களின் நாகரிகம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றன.  இந்த புகைப்படங்களையும் சதி கோட்பாடுகளையும்  புறக்கணிக்க வேண்டும் என்று  விஞ்ஞானிகள் கூறினாலும், செவ்வாய் கிரகத்தின்  காந்தப்புலம் மறைவதற்கு முன்பு, அதன் மேற்பரப்பில் திரவப்  பெருங்கடல்கள் ஒருகாலத்தில் இருந்ததாக  ஒப்புக் கொண்டுள்ளனர். முன்பொரு காலத்தில் உயிர்கள் அங்கே வாழ்ந்தனவா ? செவ்வாய் கிரகத்தில் தற்போது கியூரியோசிடி ப்ரொபினால் நடத்தப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் இதற்கான விடையைத் தேடியே அமைக்கப்பட்டுள்ளன.

Share
Categories
அதிக வயத்தானவர் நம்பினால் நம்புங்கள்

பதிவு செய்யப்பட்ட வரலாற்றின்படி உலகில் மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர் ?!

பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளின்படி, உலகில் மிக அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்தவர்  சீனாவின் லி சிங் யுவென் என்று கருதப்படுகிறார். இவர் 256 வயது வரை உயிர் வாழ்ந்திருந்தார் என கருதப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் ஏடு 1930-ல் வெளியிட்ட ஒரு கட்டுரையின்படி, வு சுங்-சியே என்ற செங்டூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், பண்டைய சீனப் பேரரசின் ஒரு ஆவணத்தைக் கண்டுபிடித்தார். 1827 – ஆம் ஆண்டைச் சார்ந்த அந்த ஆவணத்தின்படி 150 வயதான முதியவர் லி சிங் யுவெனுக்கு அப்போதைய சீன அரசாங்கம் வாழ்த்துதல் தெரிவித்திருக்கிறது. மீண்டும் அவருடைய 200-வது வயதிற்கு அரசாங்கம் வாழ்த்து தெரிவித்த , 1877 – ஆம் ஆண்டைச் சார்ந்த இன்னுமொரு ஆவணமும் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

1928 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நிருபர் எழுதிய தகவல் : லீயின் அண்டை வீட்டிலுள்ள பல முதியவர்கள், தாங்கள் சிறுவர்களாக இருந்தபோதே தங்களுடைய தாத்தாக்கள் அவரை ஒரு வளர்ந்த மனிதராக அறிந்திருந்ததாக கூறியிருக்கின்றனர்.

லி சிங் யூனின் சொந்த மானிலத்தில் நிலவும் சில பழங்கதைகளின்படி, அவர் 10 வயதில் தனது மூலிகைத் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். மலைப் பிரதேசங்களில் மூலிகைகள் சேகரித்து வருகையில்,  மூலிகைகளால் வாழ்நாள்களை அதிகரிக்கும்  ஆற்றலைப் பற்றி அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக, அவர் லிங்க்சி, கோஜி பெர்ரி, காட்டு ஜின்ஸெங், ஷூ வு, கோடு கோலா மற்றும் நெல் மது ஆகியவற்றைக் கொண்ட உணவையே உண்டார்.  இடையில் 1749 ஆம் ஆண்டில், 71 வயதில், அவர் சீன ராணுவத்தில் தற்காப்புக் கலை ஆசிரியராக சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. முதல் நூறு ஆண்டுகளுக்கு அவர் மூலிகை சேகரிப்பில் தொடர்ந்தார்.  பின்னர் அவர் மற்றவர்கள் சேகரித்த மூலிகைகளை விற்பனை செய்தார்.

லி, அவரது சமுதாயத்தில் எல்லோருக்கும் பிரியமான நபராக இருந்தாராம். 23 முறை திருமணம் செய்து 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாயும் இருக்கிறாராம்.

லி-யிடம் அவரது நீண்ட ஆயுள்காலத்தின் இரகசியம் என்னவென்று வினவப்பட்டபோது, அவர் கூறியது : “அமைதியான மனதுடன், ஒரு ஆமை போல உட்கார்ந்து, ஒரு புறாவைப்போல சுறுசுறுப்பாக நடந்து, ஒரு நாய் போல தூங்கவதே எனது இரகசியம்.”

நம்பமுடியாத நீண்ட ஆயுள் இரகசியமாக லி அமைதியுமான மனநிலையையும் மூச்சுப் பயிற்சியையும் கூறினாலும், அவரது உணவும் அதற்கான ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம்.

இச்செய்தி ஒரு போலித் தகவலாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், தொலைதூர இடங்களில் வாழ்ந்த பல சீன கிராமவாசிகள் தங்கள் மரணத்தை போலியாக ஏற்படுத்திக் காண்பித்துவிட்டு முன்பே இறந்து போன தங்கள் தாத்தா அல்லது பெற்றோரின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு புதிய அவதாரத்தில் உலவி வந்திருக்கின்றனர். இவ்வாறு செய்வதால் அரசாங்கம் அவர்களை இராணுவத்தில் சேர்த்து போரில் ஈடுபடுத்துவதை அவர்களால் தவிர்க்க முடிந்திருக்கிறது.

 

Share