Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தொழில் நுட்பம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்–2 செயற்கை கோள்

இன்று காலை ராமேசுவரம் வந்த இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று,  அப்துல் கலாமின் அண்ணன் முகமது மீராலெப்பை மரக்காயரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்துல்கலாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்தார்.பின்னர் மணி மண்டபம் சென்ற மயில்சாமி அண்ணாதுரை அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும் மயில்சாமி அண்ணாதுரை , “மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மிகச்சிறந்த மனிதர். இந்தியா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரிடமும் மாணவ-மாணவிகளிடமும் ஒரு அடையாளமாக திகழ்ந்தவர். அவர் பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது.விண்வெளி ஆராய்ச்சி பாதுகாப்பு துறை என பல்வேறு துறைகளுக்கு ஆலோசகராக இருந்தவர் அப்துல்கலாம். அவரது ஆசைப்படி கடந்த 2 மாதங்களில் 14 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 10 செயற்கை கோள்கள் விஞ்ஞானிகள் மூலமும் 4 செயற்கை கோள்கள் மாணவர்கள் மூலமும் உருவாக்கி ஏவப்பட்டுள்ளது. கலாம் ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.சந்திரயான்-2 செயற்கைகோள் 2018-ம் ஆண்டுக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது. மங்களயான்-1 ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மங்கள்யான்-2 ஏவ திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.” என்றும் கூறினார்.

Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 38 ராக்கெட் 31 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து  வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியா வெற்றிகரமாக இராணுவ கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் ஒரு செயற்கைக்கோளுடன், 30 சிறிய செயற்கைக்கோள்களை அவற்றுன் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இவற்றுள் ஒன்று மட்டும் வெளிநாட்டு செயற்கைக்கோள். இது இஸ்ரோவின் மலிவு விலை விண்வெளித் திட்டத்திற்கான முக்கியமான மைல்கல்லாகும்.

இஸ்ரோ தொடர்ச்சியாக பி. எஸ். எல். வி ராக்கெட்டுகளை கொண்டு  40 வெற்றி பயணங்களை மேற்கொண்டுள்ளது. ராக்கெட் தரையிலிருந்து புறப்பட்டு 27 நிமிட நேரத்திற்குள்ளாக அனைத்து செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக அவற்றின் சுற்றுப் பாதையில் செலுத்தியது.

கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள்  தொலை உணர்வு சேவைகளை இனிவரும் தினங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை உணரும் கேமரா மற்றும் பிற நிறங்களை உணரும் கேமராக்கள் கார்ட்டோசாட்டில் பொருத்தப்பட்டுள்ளன.  இஸ்ரோவின் சர்வதேச வாடிக்கையாளர்களான அமெரிக்காவின் 10 செயற்கைக்கோள்களும், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளின் தலா மூன்று செயற்கைக்கோள்களும், ஆஸ்திரியா, சிலி, செக் குடியரசு, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் இதில் அடங்கும்.  ஏவப்பட்ட பிற 30 செயற்கைக்கோள்களில் 15 கிலோ எடை கொண்ட நியுசாட் செயற்கைக்கோளும் ஒன்று. இது தமிழகத்தில் உள்ள நுருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவன செயற்கைக்கோள் ஆகும்.

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இஸ்ரோ: ஸ்ரீஹரிகோட்டாவில் 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அதிகம் முன் வருகின்றனர். அந்தவகையில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த 1 நானோ செயற்கைகோள் ஆக மொத்தம் 243 கிலோ எடை கொண்ட 30 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

இறுதி கட்ட பணியான 28 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று (வியாழக்கிழமை) காலை 5.29 மணிக்கு தொடங்கி நாளை காலை 9.29 மணிக்கு நிறைவடைந்த உடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்றுகிறது.  மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி-MkIII செயற்கைகோள் ஜிசாட் – 19 ஐ விண்ணில் செலுத்தியது

ஜி.சாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. Mk III ராக்கெட் (GSLV Mk III), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

“ராட்சத ராக்கெட்” என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும்.

ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

இந்த ராக்கெட் ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. இந்த செயற்கை கோள் 3,136 கிலோ எடை கொண்டது. இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளை விட மிக அதிக எடை கொண்டது.

அதி நவீன வசதிகளுடன் ஆன தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

 

 

Share
Categories
இந்தியா இஸ்ரோ தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ நிறுவனம் உருவாக்கிய, இந்தியாவின் மிகப்பெரிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது.

மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் இதுகுறித்து, “மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லும் திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று(திங்கட்கிழமை) மாலை 5.28 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. ராக்கெட் புறப்பட தயார் நிலையில் உள்ளது. இது தகவல் தொலை தொடர்புக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்தியாவுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.” என்று கூறினார்.

Share