Categories
இந்தியா தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் பேஸ்புக்

பேஸ்புக், பயனர்கள் அவர்தம் சுயவிவர படங்களை கட்டுப்படுத்தும் கருவிகளை வழங்குகிறது

பேஸ்புக், தமது பயனர்கள், அவர்தம் சுயவிவர படங்களை (profile pictures) பிறர் தரவிறக்காமல் கட்டுப்படுத்தும் மென்பொருள் கருவிகளை, இந்தியர்களுக்கு சோதனைமுறையில் இப்போது வழங்கத் துவங்கியுள்ளது.

நேற்று பேஸ்புக் வெளியிட்ட அறிவிப்பின்படி, தனியுரிமை உணர்வுடைய(privacy conscious) நபர்களின் பயன்பாட்டிற்காக, இந்தியாவில் புதிய மென்பொருள் கருவிகளை(software tools) சோதனை முறையில் வெளியிட்டுள்ளது. இக்கருவிகளை உபயோகித்து தனிநபர்கள் தங்கள் சுயவிவரப் படங்களை (profile pictures) யார்யார்  தரவிறக்கம் செய்யலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய அம்சங்களின் வழியாக,  கற்றுக் கொள்ளப்படும் அனுபவங்களின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கும் படிப்படியாக இவ்வம்சங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் பேஸ்புக் தகவல் கூறுகிறது.

பேஸ்புக் தயாரிப்பு மேலாளர் ஆரதி சோமன்,  சமீபத்தில் அவரது வலைப்பதிவு இடுகையில் கூறியுள்ளதாவது :

சுயவிவரப் படங்கள் பேஸ்புக்கில் சமூகத்தை கட்டியெழுப்ப உதவும் ஒரு முக்கிய பகுதியாகும். ஏனெனில் அவர்கள் நண்பர்களைக் கண்டறிந்து அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்க உதவுகின்றது. ஆனால், அனைவரும் சுயவிவரம் படத்தை சேர்த்துக்கொள்வதை பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடனான எங்கள் ஆராய்ச்சியில், சில பெண்கள் இணையத்தில் எங்கும் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள விரும்பாததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏனென்றால், அவர்கள் தங்கள் புகைப்படங்களுக்கு என்ன நேரிடும் என்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

சமூகப் ஆராய்ச்சி மையம், கற்றல் இணைப்புகள் அறக்கட்டளை, திருப்புதல் மற்றும் இளைஞர் கி ஆவாஸ் போன்ற இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த கருவிகள், மக்களுக்கு கட்டுப்படுத்தும் அனுபவத்தை அதிக அளவில் வழங்குவதற்கும் அவர்கள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர், “பூர்வாங்க சோதனைகள் அடிப்படையில்,  ஒருவர் தமது சுயவிவர படத்தில் கூடுதல் வடிவமைப்பு அடுக்கு ஒன்றை  சேர்க்கும்போது, அந்த படத்தை நகலெடுக்க 75 சதவிகிதம் குறைந்த வாய்ப்பே உள்ளது”, என்றும் தெரிவித்துள்ளார்.

Share
Categories
ஆண்டிராய்ட் தொழில் நுட்பம்

ஆண்ட்ராய்டு 8.0 ஒ : சிறப்பம்சங்கள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.ஆண்ட்ராய்டு 8.0 ஒ-இன் பீட்டா பதிப்பை அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது, கடந்த காலத்தைப் போலவே, அதன் கைபேசிகளும், கூகிள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல், நெக்ஸஸ் 5 எக்ஸ், நெக்ஸஸ் 6 பி, பிக்சல் சி மற்றும் நெக்ஸஸ் பிளேயர் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஓஎஸ் மூலம் நீங்கள் ஒரு செயலியில் இருந்து இன்னொரு செயலியில் காப்பி செய்து பேஸ்ட் செய்வது எளிதாகிவிடுகிறது. அதேபோல் நீங்கள் காப்பி செய்த விவரங்கள் வேறு எந்தெந்த இடங்களில் உள்ளது என்பதை செர்ச் இஞ்சின் மூலமும் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. இதனால் அதிக சிரமங்கள் இல்லாமல் பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.தற்போது வந்த இந்த வசதியைப் பொறுத்தமட்டில் ஒரு டெக்ஸ்ட் மெசேஜில் வந்த முகவரியை நீங்கள் க்ளிக் செய்தால் உடனே அந்த முகவரி கூகுள் மேப்பில் ஓபன் ஆகும். நீங்கள் அந்த முகவரியை காப்பி செய்து அதன் பின்னர் கூகுள் மேப் சென்று பேஸ்ட் செய்து தேட வேண்டிய அவசியம் இருக்காது.

நோக்கியா 3, நோக்கியா 5,மற்றும் நோக்கியா 6 ஆகியவற்றுடன் அண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் கிடைக்கும் என்று எச்எம்டி குளோபல் அறிவித்துள்ளது. இது விண்டோஸ் ஒஎஸ்-இல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மொபைல்போன்களில் இந்த ஆண்ட்ராய்டு 8.0 ஒ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share
Categories
ஆண்டிராய்ட் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம்

கூகுளின் மொபைல் இயக்க முறைமை இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. தற்போது அண்ட்ராய்டு ஓ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மாநாடு கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருவதனை ஒட்டி ஆண்ட்ராய்டு 8.0 அல்லது ஆண்ட்ராய்டு ஓ பீட்டா நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 8ல் பல்வேறு புதிய வசதிகளுடன் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பீடுகையில் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்பட ஸ்மார்ட் அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு என் எனப்படும் நௌகட் இயங்குதளத்தை தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த புதிய பதிப்பில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் மிகப்பெரிய வருமானம் வரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இதில் பிக்சர் முறை மற்றும் ஆப்பிளின் 3டி டச் அம்சம் ஆகியவை உள்ளடங்கும். இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், அது அண்ட்ராய்டு ஓ ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பு இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 8.0 வாயிலாக சிறப்பான பேட்டரி பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த பதிப்பில் பல்வேறு வகையில் பின்புல ஆப் பயன்பாட்டை குறைப்பதுடன், கிராபிக்ஸ் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். இந்த பதிப்பில் டெக்ஸ்ட்களை இலகுவாக காப்பி செய்யும் வகையில் ஸ்மார்ட் டெஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 படம்-இன்-பிக்சர் முறையில், அண்ட்ராய்டு ஒ பயனர்கள் ஒரே நேரத்தில் மற்ற பணிகளைச் செய்யும்போது வீடியோக்களைப் பார்க்க முடியும். இந்த மாநாட்டில் புதிய ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம் உள்பட கூகுள் லென்ஸ், ஐபோன் மொபைலுக்கு கூகுள் ஆசிஸ்டன்ஸ்,ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோவில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் அண்ட்ராய்டு ஓ-ல் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
Share
Categories
தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக ‘தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்’ (ட்ராய்) பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதை, மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில், ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அத்துடன் அந்த திட்டமானது அதிக அளவு டேட்டா பயன்பாடு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் தொலை தொடர்பு சேவையை விரிவு படுத்தும் பொருட்டும், டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும், ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்;என்று எதிர்பார்க்கிறோம்.
ட்ராய் அமைப்பானது இது தொடர்பாக விரைவில் மொபைல் சேவை நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. அலைபேசி நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தினை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share
Categories
இந்தியா ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

விப்ரோ : 2-வது முறையாக மிரட்டல் மெயில்

பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாக ரூ.500 கோடி பிட்காயின் கேட்டு மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் 72 மணி நேரத்துக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் அசம்பாவிதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் மிரட்டல் வந்த ஒரு மாதத்துக்குள்ளாக, மீண்டும் இந்த மெயில் வந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.பி. முகவரியில் இருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது போலியான முகவரியாகவும் இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 5-ம் தேதியும் அதே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்திருந்தது. அப்போதும் ”ரூ.500 கோடி பிட்காயின்களை அனுப்பவேண்டும். தவறினால் இயற்கை நச்சு மற்றும் ரிசின் நச்சுகளை உணவகங்கள், குடிநீர்க் குழாய்கள் வாயிலாகக் கலந்துவிடுவோம்” என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

உங்கள் கணினி இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது ?

உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும்.

இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வான்னாகிரை வைரஸால் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இதற்கு முன்னர் நடைபெறாதது ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை அமைப்பான யூரோபோல் தெரிவித்திருக்கிறது.

எனது கணினி பாதிக்கப்பட்டுள்ளதா?

வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது.

விண்டோஸ் இயங்குத்தளம் வழங்குகின்ற மென்பொருட்களின் மேம்பாடுகளை பயன்படுத்தாமலோ, மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கின்றபோது கவனமாக இல்லாமலோ இருந்தால் நீங்களும் பாதிப்படையும் ஆபத்து நிலவுகிறது.

இருப்பினும், இந்த இணைய தாக்குதலை பொறுத்த வரை வீட்டில் கணினி பயன்படுத்துவோர் மிக குறைவான ஆபத்தையே சந்திப்பதாக நம்பப்படுகிறது.

மென்பொருட்களின் மேம்பாட்டு மென்பொருட்களை, ஃபயர்வயர்கள் மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை தரவிறக்கி கணினியில் செயல்பட வையுங்கள். மின்னஞ்சல் செய்திகளை வாசிக்கின்றபோது கவனமாக இருங்கள்.

உங்களுடைய கோப்புக்களின் இன்னொரு பதிப்பை எடுத்து வைத்துகொள்ளுங்கள். அப்படியானால், உங்களுடைய கோப்புகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், மீட்புத்தொகை செலுத்தாமலேயே உங்களுடைய கோப்புக்களை திறந்துவிட முடியும்.

மீட்புத்தொகை செலுத்தினாலும் உங்களுடைய கோப்புக்களை திறக்க முடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், இன்னொரு பதிப்பை வைத்திருப்பது நல்லது.

ரான்சம்வேரின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கும், அது நடக்க முடியாமல் போனால் செய்ய வேண்டியது என்ன? என்பதற்கான ஆலோசனைககள் (எம்எஸ்17-010) ஐக்கிய ராஜ்ஜியத்தின் இணைய பாதுகாப்பு இணையதளத்தில் உள்ளன.

Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

திங்களன்று மீண்டும் இணைய தாக்குதல் இருக்குமா ?

கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகளவில் நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள் பாதிப்படைந்த நிலையில், அடுத்து ஒரு மிகப்பெரிய இணைய தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த கணினி பாதுகாப்பு வல்லுநரான ”மால்வேர் டெக்” என்பவர், ”மற்றொரு இணைய தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமையன்று தாக்கலாம்” என்று எச்சரித்துள்ளார்.

ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தை கட்டுப்படுத்த இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினியில் பயன்பாட்டாளர்களின் தரவுகளை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இந்த வைரஸ் ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட 100 நாடுகளுக்கு பரவியது.

கணினிகளை கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், தகவல்களை கட்டுப்படுத்தும் இந்த வைரஸ், கணினியில் உள்ள தரவுகளை மீண்டும் பயன்படுத்த சுமார் 300டாலர்கள் வரை மெய்நிகர் பணமான பிட்காயின் பணத்தை செலுத்துமாறு கணினி பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று கணக்குகளை பிபிசி ஆராய்ந்த போது, அவை ஏற்கனவே கணினியை ஊடுருவியவர்களுக்கு சுமார் 22,080 பவுண்டிற்கு ஈடான தொகையை கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பெயர் வெளியிடாமல் ரகசியமாக செயல்படும் மால்வேர் டெக் எனப்படும் தீய மென்பொருள் வல்லுநர் ஒருவர், வைரஸின் பரவலை அறிய இணைய தளத்தை பதிவு செய்தததை தொடர்ந்து வைரஸ் பரவல் முடிவுக்கு வந்தது.

அந்த வல்லுநரை ‘ ஆபத்து கால நாயகன்’ என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

22 வயது நிரம்பிய வல்லுநர் பிபிசியிடம் பேசுகையில்,”தற்போது பொதுமக்கள் தங்களுடைய கணினிகளில் பேட்ச் எனப்படும் அப்டேட் மென்பொருளை உடனடியாக நிறுவ வேண்டும்.

”நாங்கள் இதை ஒருமுறை நிறுத்திவிட்டோம், ஆனால் மீண்டும் மற்றொன்று விரைவில் வரும். அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.

”இதில் நிறைய பணம் புழங்குகிறது. இதை நிறுத்துவதற்கு அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. வைரஸின் கோட்டை மாற்றி மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க பெரிய முயற்சிகள் தேவைப்படாது” என்றார்.

Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

உலகளாவிய இணையதாக்குதல்: பல முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் முடங்கின

உலகளாவிய மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.

பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது.

பிரிட்டனின் முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்த தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் ransomware attack என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இணைய சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று இந்த மென்பொருள் கேட்கும்.

பிரிட்டனின் சில மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பு முழுமையாக செயலிழந்துபோனதால் பல இடங்களில் நோயாளிகள் அவசரகால சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஸ்பெய்ன் நாட்டில் பெருமளவிலான அந்நாட்டு நிறுவனங்களின் இணைய கட்டமைப்பும் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share