Categories
டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது போராட்டத்திற்கு பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகள், அமைப்பினர் ஆதரவு தருகின்றனர். போராட்டத்தை முறியடிக்க பா.ஜ.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் செல்போன் மூலம் பேசி தமிழகத்திற்கு வருமாறு எங்களை மிரட்டுகின்றனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு போராட்டம் நடத்துங்கள் என்கின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.  திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவரும் மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண்களை வைத்து டெல்லி பாராளுமன்ற போலீசில் புகார் செய்துள்ளோம். திருச்சியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீது திருச்சி போலீசில் புகார் செய்ய உள்ளோம்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். நான் (அய்யாக்கண்ணு) ஆடி கார் முன்பு நிற்பது போன்றும், 5 ஸ்டார் ஓட்டலில் செல்போனில் பேசியவாறு சாப்பிடுவது போன்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாவே பொறுப்பு

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

 

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் போராட்டம் விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா விவசாயிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முன்வரவில்லை என்றும், எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாதி மொட்டை அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அப்போது அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா டில்லி தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை தமிழக விவசாயிகள், தேசிய நதிகள் இணைப்பு தென் இந்திய விவசாய  சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கால அவகாசம் கேட்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்தும் போராட்டத்தை  தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து தமிழகம் திரும்பினார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத  காரணத்தால் தென் இந்திய விவசாய சங்கத்தினர் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்தனர்.

டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றபோது காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதியான ஜந்தர் மந்தரைத் தாண்டி வேறு எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதுகுறித்து, தென் இந்திய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “தமிழக முதல்வர் உறுதியளித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக  விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கி தமிழகம் திரும்பினோம். ஆனால் தமிழக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்து விவசாய கடனை ரத்து செய்யாத அளவிற்கு செய்து விட்டது. இது மனித உரிமை மீறிய செயலாகும். அதனால் விவசாயிகளின்  வாழ்வாதராத்தை கருத்தில் கொண்டு மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும் தமிழக  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், போலி வாக்குறுதிகளை இனி  நம்ப மாட்டோம்” என்று தெரிவித்தார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் தடை

கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 5 ஏக்கருக்கும் அதிகமாக வைத்துள்ள  விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், 3 மாதங்களில் அரசாணை வெளியிடவும் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதின்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  மேலும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு எந்த அடிப்படையில் கடன் தள்ளுபடி கோரப்பட்டது என்பது குறித்து அய்யாகண்ணு உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் விவசாயிகள் போராட்டம்

அய்யாகண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகள் ஒரு மாதம் தொடர் போராட்டம்

முன்பு டில்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தற்போது சென்னையில் ஒரு மாதகால போரட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் இன்று காலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கினர். இப்போராட்டம் ஜூன் 9-ம் தேதி முதல் 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் உடனடியாக அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

Share
Categories
தஞ்சை தமிழகம் மாவட்டம் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் தஞ்சையில் 7-வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

 காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெட்டிப்பாயைத்தில் 7வது நாளாக ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்பு குழுவினர் கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-வது நாளான இன்று, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சை சாலியமங்கம் ரயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சாகுபடி கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மே 15 முதல் 21 வரை ஒரு வாரத்துக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் 4 இடங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பூதலூர் அருகே அய்யனாபுரத்தை அடுத்த விண்ணணூர்பட்டியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணிய ரசன் தலைமையில் திரைப்பட இயக்குநர் மு.கவுதமன், தமிழ்த் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகி யோர் தலைமையில் விவசாயி கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகளை ரயிலை மறித்தனர்.

Share
Categories
கட்சிகள் காங்கிரஸ் தமிழகம் விவசாயிகள் போராட்டம்

அய்யாக்கண்ணுவை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் இனிமேல் எச்.ராஜா நடமாட முடியாது

பாஜகவின் ஹெச்.ராஜா கண்ணியமின்றி பேசுவதாகவும், இனி தொடர்ந்தால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜகவின் எச்.ராஜா நாவடக்கம் இன்றி பேசி வருவதாக குறிப்பிட்டார். பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசினார். சோனியா காந்தியைப் பற்றி கேவலமாக பேசினார். தற்போது தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவையும் அவதூறாக பேசியுள்ளதாக கூறினார்.

டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து போராடிய அய்யாக்கண்ணுவை பேசியது ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறி கண்டனம் தெரிவித்தார். தலைவர்கள் குறித்து நாவடக்கம் இன்றி பேசினால், எச்.ராஜா தமிழகத்தில் நடமாட முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
Categories
தமிழகம் முழு அடைப்பு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பாக முழு அடைப்பு நடைபெறுகின்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் பங்கேற்கின்றன.   இதற்கு தொழிற்சங்கங்களும் வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

பஸ்கள் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முக்கிய இடங்களில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

 

Share
Categories
இந்தியா தமிழகம் விவசாயிகள் போராட்டம்

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராடிய விவசாயிகள் தமிழகம் புறப்பட்டனர்

தமிழக விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம் இன்று 41 வது நாளாக நீடித்தது. கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றால் போராட்டத்தை கைவிடுவது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறிய அவர்கள், இன்று காலை வரை பதில் கடிதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் பதில் கடிதம் வரவில்லை.
டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார்.  போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு அவரிடம் கோரிக்கை மனு அளித்ததோடு, கோரிக்கைகளையும் விளக்கினார். முதல்-அமைச்சர் பழனிசாமி பேசுகையில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும். வங்கிக் கடனை ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். வங்கி கடன் ரத்து தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வழி செய்வேன்.
வறட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்வோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்றார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு பேசுகையில் பிரதமர் எங்கள் கோரிக்கைகளை ஏற்றால் போராட்டம் கைவிடப்படும் என்றார். போராட்டத்தை முடிப்பது தொடர்பாக இன்று மாலைக்கு முடிவு எடுக்கப்படும் என்றும் அய்யாகண்ணு கூறினார்.
Share
Categories
சேலம் தமிழகம் மாவட்டம் விவசாயிகள் போராட்டம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லியில் நடந்த இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்குகொண்டனர். கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க  வேண்டும் என்றும் நதி நீர் இணைப்பு குறித்தும் கோரிக்கை வைத்தனர். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்ததுடன், தமிழக அரசும் பாரபட்சமின்றி அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரினர்.

இதுபோல புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.

 

Share