Category: பா.ஜ.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கமும் தொண்டர்கள் திரளாக உள்ளனர். சசிகலா ஆசியுடன் பழனிசாமி முதல்வரானபின், சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டைஇலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ளவர்களே, பல்வேறு விசாரணை வளையங்களில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. இன்னிலையில் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் டில் கொலையும், கொள்ளையும் நடந் துள்ளது. அதன் பின்னணி மர்மங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், அதில் சம்பந்தப் பட்டவர்களின் மரணங்களும் தொடர்கின்றன.

இதுபோன்ற பலசிக்கல்கள்சூழ்ந்துள்ள நிலையில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு முன், சட்டசபைக்கு தேர்தல் வரும்’ என்றார். அதிமுக இரண்டாவது அணித்தலைவரான பன்னீர் செல்வம் சமீபத்தில் தமிழக தேர்தல் என்னேரமும் வரலாம் என்றார். அதுபோலவே தமிழக பா.ஜ. தலைவர் கள் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா போன்றவர்களும் பா.ம.க. கட்சியினரும் ‘விரைவில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்து வருகின்றனர்.
மறுப்பு
இதற்கிடையே, நிதியமைச்சர், ஜெயக்குமார் ‘விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என, பன்னீர்செல்வம் கூறியிருப்பது விஷமத்தன மானது’ என்றும் கூறியுள்ளார். ஆட்சியில் உள்ள ஒரு அமைச்சரிடம் இருந்து இப்படிப்பட்ட கருத்தையே நாம் எதிர்பார்க்க முடியும். தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கவனித்தால், முன்பு ஆர். கே. நகர் தேர்தலை ரத்து செய்வோம் என்று பா.ஜ. தலைவர்கள் அறிவித்துவிட்டு அதை நடத்திக் காட்டியது போலவே, இப்போதும் “தமிழகத்திற்கு விரைவில் தேர்தல்’ என முன்னறிவிப்பு செய்கிறார்களோ என்று மனதிற்குள் தோன்றுகிறது.

