Categories
Phones ஆண்டிராய்ட் சிறப்புச்செய்தி தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3

தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)– யிலும் இவ்வம்சம் மற்றொரு புதிய அம்சமான நழுவித்திரையுடன் (slider) சேர்ந்து இடம் பெற்றுள்ளது.

சிறப்புக்கூறுகள் (Features)

Chipset: Qualcomm Snapdragon 845
Memory: 6/8 GB RAM/128GB storage
Battery : 3200mAh; Fast wired charging (up to 18W);Fast wireless charging (up to 10W)
Camera: Dual 12-megapixel rear cameras; 4K video capable
Camera features: 2x telephoto, Dual Pixel AF, 4-axis OIS
OS: Android 9.0 Pie w/ MIUI 10
Other features :
Ceramic back
6.39-inch 19.5:9 1080×2340 Full HD+ AMOLED display
Slide-out dual 24/2-megapixel front cameras
Dual SIM, dual VoLTE; 2×2 MIMO Wi-Fi ac, Bluetooth 5.0 with aptX HD, dual band GPS/Galileo

மி மிக்ஸ் 3 -யின் திரை பெரிதாகவும் தெள்ளத் தெளிவாகவும் உள்ளது. விரைவாக செயலாற்றும் திறன், அதிக நேரம் செயல்படும் பேட்டரி, பின்புறமுள்ள சக்திவாய்ந்த இரு கேமராக்கள் ஆகியவை இந்த போனின் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் தடிமனாகவும் கொஞ்சம் கனமாகவும் இருப்பதாலும் சிலருக்கு இதனைப் பிடிக்காமல் போகலாம்.

இதனை வாங்க நீங்கள் முடிவு செய்யுமுன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

1) செல்ஃபி கேமரா அதிக தரம் என்று சொல்ல முடியாது

2) HDR படங்கள் எடுப்பதற்கு சிரமப் பட வேண்டியிருக்கும்

3) தற்போது வரும் செல்போன்களின் திரையிலேயே கைரேகைப் பதிவு ஸ்கேனர் வருகிறது. ஆனால், இந்த போனில் அந்த அம்சம் கிடையாது.

அடுத்த பதிவில்: ஹானர் வியூ 20

Share
Categories
English சிறப்புச்செய்தி

Happy New Year 2019 !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Happy New Year !

Share
Categories
சிறப்புச்செய்தி

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

 

Share
Categories
ஆரோக்கியம் உடல்நலம் காணொளி சிறப்புச்செய்தி மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்கும் தாவரங்கள்: 2

புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில்  இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர்.

எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse).   ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார்.

எஸ்ஸியக் தேநீர் நான்கு தாவர பொருட்களின் கலவையை கொண்டுள்ளது:

1) ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி

ஷீப் சொறல்

2) பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (slippery elm bark)

எல்ம் மரப் பட்டை

3) பர்டோக் வேர் (Burdock root)

பர்டோக் வேர்

4) வான்கோழி ரூபார்ப் (turkey rhubarb) பொடி.

டுர்கி ரூபார்ப்

இவற்றில் டுர்கி ரூபார்ப் மற்றும் வழுக்கும் எல்ம் மரப்பட்டை ஆகியன முக்கியமான பாரம்பரிய மூலிகை மருந்துகளாகும்.

ஏஸ்ஸியக் தேநீர் தயாரிக்க தேவையானவை

செய்முறை

6 ½ கப் பர்டோக் வேர் (பொடி) (மேல் இடது)

1 பவுண்டு ஷீப் சோறெல் (sheep sorrel) பொடி (மேல் வலது)

1/4 பவுண்டு, பொடிசெய்யப்பட்ட வழுக்கும் எல்ம் மரப் பட்டை (கீழ் இடது)

1 அவுன்ஸ் வான்கோழி ருபார்ப் வேரின் தூள் (கீழ் வலது)

 

இந்த பொருள்களை முழுமையாக கலந்து, இருண்ட உலர் அலமாரியில் கண்ணாடி குடுவைகளில் சேமித்து வைக்கவும்.

ஒரு அளவிடும் கப் எடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய அளவைப் பொறுத்து,  32 அவுன்ஸ் தண்ணீருக்கு 1 அவுன்ஸ்  மூலிகை கலவை என்ற விகிதத்தில் அளந்து பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக 1 கப் மூலிகைக் கலவையுடன் 8 x 32 = 256 அவுன்ஸ் தண்ணீர் பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் (மூடி) கடினமாக கொதிக்க வைத்து, பின் வெப்பத்தை அணைக்கவும். பின்னர் அந்த சூடான தட்டைல் அடுத்த நாள் காலை வரை அப்படியே மூடி வைத்திருக்கவும்.

காலையில் மீண்டும் ஆவி வரும்வரை சூடாக்கிய பின் ஒரு சில நிமிடங்கள் ஆறவிட்டு, பின்னர் சூடான சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் நன்றாக வடிகட்டி ஆறவைக்கவும். இருண்ட குளிர் அலமாரியில் சேமிக்கவும். இந்த பாட்டிலை உபயோகிக்கத் திறந்தால், பின்னர்  குளிரூட்டப்பட (refrigerated) வேண்டும். இறுதியாக இருப்பவற்றை ஒரு பெரிய ஜாடியில்  ஊற்றி, இரவு முழுவதும் ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்தபின்,  படிவுகள் ஏதும் இல்லாத திரவத்தை தனித்தனி பாட்டில்களில் ஊற்றவும்.

 

எஸ்ஸியாக் தேநீர் பல்வேறு வகையான நாள்பட்ட புற்றுநோய் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், சிறந்த இயற்கைமுறை நச்சுநீக்கத்திற்கும்  பயன்படுகிறது.

ஆயினும், ரெனே கெய்ஸின் எஸ்ஸியாக் தேநீர் மருந்து இதுவரை எந்த FDA- அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்வுகளில் இடம் பெறவில்லை. இது புற்று நோய் அல்லது நிலைமையைத் தணிக்கிறது அல்லது தடுக்கிறது என்று முழுமையாக நிருபிக்கப் படவில்லை. ஆனால் பலரும், இதனை உபயோகித்தபின்னர் குணமடைந்திருப்பதாக கூறியுள்லனர். ஆகவே இந்த மாற்று மூலிகை மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து செய்வது நல்லது.

 

 

Share
Categories
உடல்நலம் சிறப்புச்செய்தி மருத்துவ ஆய்வு மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புற்றுநோய் என்பது என்ன ?

உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

செல்கள் எதனால் இயல்புக்கு மாறாக கட்டுப்பாடின்றி பிரியத் துவங்குகிறது என்பது இதுவரைத் துலக்கமாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், சுற்றுச்சூழல் அசுத்தங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆகியன முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

பசுமை கீமோதெரப்பி

இவற்றுள், கீமோதெரப்பியில் தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த சக்திவாய்ந்த கலவைகள் பொதுவாக விரைவாக பிரியும் செல்களைத் தாக்குகின்றன. இந்த டாக்ஸின்கள் பொதுவாக புற்றுநோய் கழலைகளை இலக்காகக் கொண்டிருந்தாலும்,  சிலசமயம் முடியை உருவாக்கும் சுரப்பிகளைப் போன்ற நல்ல செல்களையும் தாக்குகின்றன, இதனால் தற்காலிக முடி இழப்பு ஏற்படுகிறது.

பசிபிக் யூ (Pacific yew) என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பக்ளிடேக்ஸெல் (Paclitaxel – Taxol) என்ற  கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்தப்  பயன்படுத்தப்படும் மருந்து உருவாக்கப்படுகிறது. இம்மருந்து புற்றுநோய் செல்களின் விகிதங்களை வெகுவாக குறைக்கிறது.  வட அமெரிக்காவில் கிடைக்கும், அமெரிக்கன் யூ-வும் (taxus canadensis) பக்லிடாக்சல் மருந்து உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

 

ரோசி பெரிவிங்கிள் (rosy periwinkle) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுக் வின்கிரிஸ்டைன் (Vincristine)   மற்றும் வின்பிளஸ்டைன் (vinblastine) மருந்துகள்  குழந்தை பருவ லுகேமியா (leukemia) சிகிச்சையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

சீனாவில் வளரும் “ஹேப்பி ட்ரீ” (கேம்ப்டொத்கா அகுமினாட்டா), என்ற மரத்திலிருந்து எடுக்கப்படும்  காம்ப்டோடைசின் (Camptothecin) என்ற மருந்து சீனாவில் இரைப்பை குடல் புற்றுநோயைப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

 

 

 

மேலும் மேயாப்பிள்(mayapple) என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் காட்டு மலர் விரைவில் நுரையீரல் மற்றும் விரைப் புற்றுநோய்களுக்கான, தற்போது சோதனையிலுள்ள  எடோபாஸைடு (etoposide) என்ற மருந்துக்குத் தேவையான பாடோபிளைலோடாக்சினை (podophyllotoxin) உருவாக்க பயன்படுகிறது.

தொடரும்

 

Share
Categories
சிந்தனைக்கு சிறப்புச்செய்தி தமிழ்ப் பாடல்கள்

தம்மை விரும்பாதவர் பின் செல்வது எத்தகையது ?

தம்மை விரும்பாதவர்களைப் பின் தொடர்ந்து சென்று, எப்படியாவது அவர்களைத் தம்மை விரும்பச் செய்யுமாறு மாற்றிவிடலாம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பமான உறவு, தனது ஒரு கையால் கல்லை எடுத்து இன்னொரு கையை அடித்துப் போக்கிக் கொள்வது போலாகும்.

தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.

நாலடியார் : பாடல்-336

 

உரை:

நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, ‘அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்’ என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.

O lord of the sea-shore where the punnei tree with fair blossoms grows! The worthless friendships of those who say, We will make them our own, while they follow those who have no friendship for them,  is like losing one’s arm in striking another with a stone.

இதனை அடுத்த பாடலும் இதுபோன்ற கருத்தையே வலியுறுத்துகிறது.

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.

நாலடியார் : பாடல்-337

உரை: 

எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

As the ants without intermission walk round and round the outside of the pot in which there is butter, though it be impossible to get at it, so men of the world will never learn, but cleave to those rich men who never give them anything.

 

Share