Categories
சினிமா பாலிவுட்

பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம்

மும்பை, அமர் அக்பர் அந்தோணி, குர்பானி, மேரே அப்னே உள்பட பல இந்திமொழி வெற்றிப்படங்களில் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான வினோத் கண்ணா நேற்று மரணமடைந்தார்.

1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர்.

1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் காலமான வினோத் கன்னாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றர்.

Share
Categories
சினிமா

பிரபல நடிகர் வினு சக்ரவர்த்தி காலமானார்

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் வினு சக்ரவர்த்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலமின்றி இருந்து வந்த அவர், வியாழக்கிழமையன்று மாலை 7 மணியளவில் காலமானார்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கன்னட பதிப்பான பரசக்கே கண்டதிம்ம படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வினு சக்கரவர்த்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 1002 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கோபுரங்கள் சாய்வதில்லை, மண் வாசனை ஆகிய படங்கள் இவரது திரையுலக வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தன.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த முனி திரைப்படம் இவரது 1000வது திரைப்படமாகும். 2014ஆம் ஆண்டில் வெளிவந்த வாயை மூடிப் பேசவும் இவரது கடைசித் திரைப்படமாகும்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது பள்ளிக் கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் சென்னையில் முடித்தார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த வினு சக்கரவர்த்தி, கண்டிப்பான அப்பா, பிடிவாதம்மிக்க உறவினர், கொடூரமான வில்லன் என பலவிதமான பாத்திரங்களில் ரசிகர்களை மகிழ்வித்தவர். குரு சிஷ்யன், சுந்தரா டிராவல்ஸ் ஆகிய படங்களில் நகைச்சுவையைத் தூண்டும் இவரது நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது.

தமிழின் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக வலம்வந்த சில்க் ஸ்மிதா வினு சக்கரவர்த்தி எடுத்த வண்டிச் சக்கரம் படத்தின் மூலமாகவே திரையுலகிற்கு அறிமுகமானார்.

Share