Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

ஜூலை மாதம் அரசியலில் இறங்குவாரா ரஜினி ?

நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தருணங்களில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக சூசகமான தகவல்களை வெளியிடுவதும், பிறகு அரசியலில் தற்போது இறங்கவில்லை என்பதுவும் நாம் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.

எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர  விரும்புகிறார். இதுதான் மக்களின் விருப்பமும் கூட. இதுகுறித்து அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். அனைவருமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார்” என கூறினார்.

இதன் மூலம், ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதில் உறுதியாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது ரஜினிகாந்தின் அடுத்த படமான “காலா”-வைப் பிரபலப்படுத்துவதற்கான உத்தியோ என்றும்  சிலர் கருதுகிறார்கள்.

Share
Categories
சத்யராஜ் சினிமா சூர்யா தமிழ் சினிமா

சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட்

நடிகர்கள் சத்யராஜ், சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் ஒன்றை நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.

தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

அவ்வாறு உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ என்பவர் தொடுத்திருந்த வழக்கு, நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில்தான் இன்றைய உத்தரவும் வெளிவந்துள்ளது.

பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், இந்த நடிகர்களை நீதிமன்றம் முன்பாக ஆஜர்ப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.

Share
Categories
சினிமா சுந்தர். சி தமிழ் சினிமா

‘சங்கமித்ரா’ படத்தை சர்வதேச அளவில் பேச வைக்கப்போகிறேன் : சுந்தர். சி

‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசப்படும். அதுதான் எங்கள் குறிக்கோள் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிடப்பட்டும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

‘சங்கமித்ரா’ குறித்து முதன் முறையாக இயக்குநர் சுந்தர்.சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “‘சங்கமித்ரா’ பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நான் எப்போதும் எடுக்க நினைத்த வகை படம் இது. கடந்த 10 வருடங்களாக இதற்கான யோசனை என்னிடம் இருந்தது. சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்பத்துக்காக காத்திருந்தேன். இப்போது நேரம் கனிந்துவிட்டது. ஆரம்பிப்பதற்கு முன் அந்த கதைக்குத் தேவையானதை தர முடியுமா என்பதை உறுதி செய்ய விரும்பினேன்.

‘பாகுபலி’ தென்னிந்திய சினிமாவை தேசிய அளவில் பேச வைத்தது. ‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேச வைக்கும். அதுதான் எங்கள் குறிக்கோள். அதனால்தான் படத்தை நாங்கள் கான் திரைப்பட விழாவில் துவக்கினோம். ’சங்கமித்ரா’ எந்த ஒரு மேற்கத்திய சாயலும் இல்லாமல் மொத்தமாக இந்தியப் படமாக இருக்கும் என்றாலும், சர்வதேச ரசிகர்களையும் மனதில் வைத்துள்ளோம்

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் சாதனைகளையும், வளத்தையும் உலகத்தின் பார்வைக்கு எடுத்து வர வேண்டும் என்பதே நோக்கம். இந்தியாவில் படம்பிடிக்கப்பட்ட மேற்கத்திய படங்கள் எல்லாம் சேரிகளையும், ஏழ்மையையும் மட்டுமே பேசின. அது இந்தியாவின் 5 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் மறுபக்கத்தை என் படம் கொண்டாடும்.

இதுவரை எனது வெற்றிகள் எல்லாமே இந்தப் படத்துக்கான ஏணிப்படிகள் தான். ‘சங்கமித்ரா’ தான் எனது இயக்குநர் வாழ்க்கையில் முக்கியப் படமாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி

Share
Categories
இந்திய சினிமா சினிமா

காதலரை மிரட்டி கைக்குள் வைத்திருக்கும் ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் சேர்ந்து ரீலோடட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள்.
சித்தார்த் மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆலியா பட்டுக்கு தெரிய இனி ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் சேர்ந்து பார்த்தேன் அவ்வளவு தான் என தனது காதலரை எச்சரித்துள்ளாராம்.
காதலியின் பேச்சை கேட்டு சித்தார்த்தும் ஜாக்குலினுடன் ஊர் சுற்றுவதை நிறுத்தியுள்ளாராம்.
Share
Categories
சினிமா சிம்பு தமிழ் சினிமா

“AAA” தயாரிப்பாளரை மிரட்டும் சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் “AAA”. படத்தில்  சில காட்சிகளும் வசனங்களும்  “AAA”  ரேட்டிங்கில்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது. “AAA” என்றால் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா  இசையமைக்கும்  இந்த படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை சிம்புவே பாடியுள்ளார். இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்க வேண்டும் என இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் சிம்பு. ஏற்கனவே பட்ஜட் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அதிகமாக செலவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

இதை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவிடம் சொல்ல, கடுப்பாகிப் போன சிம்பு, “AAA” படத்தைப் பார்க்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு ட்விட்டரில் அறிவிப்பேன் என மிரட்டுகிறாராம்.

Share
Categories
கஸ்தூரி சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி : நடிகை கஸ்தூரி

“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி” என்று நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியல் வரபோவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு.
அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறித்து பதிவிட்ட்டுள்ளார். அதில் அவர் கூறியதவது:-
நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. மேலும் போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது என்று பதிவிட்டார்.
இதற்கு ரஜினி ரசிகர் பதில் ட்வீர் செய்துள்ளார். அதில், தலைவரை தாக்கி பிரபலமாவது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர் ரசிகை என்று உலற வேண்டாம். சன் டிவியில் பாபநாசம் ப்ரமோவில் தெரிந்தது நீங்கள் யார் ரசிகையென்று, என பதிவிட்டார்.
ரஜினி ரசிகரின் இந்த ட்வீட்டுக்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், என்ன லாஜிக் பா இது? ரஜினி கூடத்தான் கமலை பாராட்டுறாரு, அப்போ அவரையும் திட்டுவியா? நீ பிறப்பதற்கு முன்பிருந்தே நான் ரஜினி ரசிகை, என்று பதிவிட்டுள்ளார்.
Share
Categories
சினிமா தமிழகம் தமிழ் சினிமா ரஜினிகாந்த்

நான் பச்சைத் தமிழன்தான் : ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கடந்த மே 15ஆம் தேதி முதல் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துவருகிறார். முதல் நாளில் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார் ரஜினி. அதற்குப் பிறகு, இன்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் பேசினார் ரஜினிகாந்த்.

கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் தான், பச்சைத் தமிழன்தான் என்றும் தமக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்த எதிர்ப்புகளின் மூலம் உதவிக்கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

“முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில், அரசியலுக்கு வருவது குறித்து நான் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகின. எதிர்ப்புகள் இருக்க வேண்டியதுதான். சமூக வலைதளங்களிலும் இது குறித்து கடுமையாகப் பேசினார்கள். அதில் எழுதியிருந்த வாசகங்களைப் பார்த்து நான் வருத்தப்படவில்லை. ஆனால், நம் தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்கள் என்று தோன்றியது” என்று குறிப்பிட்டார் ரஜினி.

மேலும், “ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுதான் நான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். கர்நாடகத்திலிருந்து, மராட்டியத்திலிருந்து வந்திருந்தாலும் நீங்கள்தான், பெயரும் புகழும் கொடுத்து அன்பைக் கொடுத்து நீங்கள் என்னைத் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சைத் தமிழன். என்னுடைய மூதாதையர்கள், அப்பா எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள்” என்று தெரிவித்த ரஜினி, “என்னை இங்கிருந்து போ என்று தூக்கிப்போட்டால் இமயமலையில்தான் போய்விழுவேன். ஏனென்றால் நல்ல மக்கள் உள்ள தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது சித்தர்கள் வாழும் இமயமலையில் இருக்க வேண்டும்” என்றார்.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க கட்டட கட்டுமான பணிகளுக்கு ஐக்கோர்ட் தடை

 

சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகர் சங்க கட்டடம் 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக, வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, வழக்கறிஞர் ஆணையராக இளங்கோ என்பவரை நியமித்து உத்தரவிட்டனர்.

ஆய்வு முடியும் வரை அவருக்கு இருதரப்பினரும் இணைந்து 1 லட்சம் ரூபாய் மாத ஊதியம் வழங்கவேண்டும் எனவும் அறிக்கையை வரும் 29ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

அதுவரை, அஸ்திவாரப் பணிகளை தவிர கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து, வழக்கு விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா

பாகுபலி-2: உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை

பாகுபலி 2-ம் பாகம் உலக அளவில் இந்திய  சினிமா கண்டிராத மாபெரும் வசூல் சாதனை புரிந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மாதம் 28-ம் தேதிக்கு திரைக்கு வந்த இந்த படம் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தினமும் 4000 திரையரங்குகளில் பாகுபலி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. பாகுபலி வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் 680 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதனிடையே பாகுபலி திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ். ராடா, அனுஷ்கா, தமணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி திரைப்படம் இந்திய திரைப்பட துறையில் சாதனையாக கருதப்படுகிறது.  4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து உருவாக்கிய  படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரை துறையினர் கருதுகின்றனர்.

Share
Categories
இந்திய சினிமா சினிமா தெலுங்கு சினிமா

ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி

அன்பு மழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு நன்றிக்கடனாக முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முயன்றுள்ளேன் என்றார். பாகுபலி பட தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நோடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பு தந்த ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share