Categories
அனுஷ்கா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா தீவிர முயற்சி

அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, தீவிரமாக யோசித்து, யோகா பயிற்சியை மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா.

பிரகாஷ் கோவலமுடி இயக்கத்தில் அனுஷ்கா, ஆர்யா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இப்படத்தின் கதைக்காக தன்னுடைய உடலை அதிகளவில் அதிகரித்திருந்தார். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனில்லை. அவரால் தன்னுடைய பழைய வடிவத்தை பெற முடியவில்லை. தற்போது உடல் எடையை குறைக்க பட வாய்ப்பை மறுத்து வருகிறார்.

பாகுபலி முதல் பாகத்தைப் போன்று 2ம் பாகத்திலும், அனுஷ்கா ஒல்லியாக இருக்க வேண்டும். ஆனால், 2ம் பாகத்தில் நடிப்பதற்கு அனுஷ்கா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமௌலி விரும்பினார். அதற்காக கால அவகாசமும் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குள் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இந்நிலையில், கிராபிக்ஸ் மூலம், அனுஷ்காவை ஒல்லியாக காண்பிக்க பல கோடி ரூபாய் செலவும் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எடையை குறைக்க டயட், உடற்பயிற்சி இப்படியெல்லாம் செய்தும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. எனவே, யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடல் எடையை குறைக்க அனுஷ்கா முடிவு செய்திருக்கிறார்.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு அழைப்பில் ரஜினி பெயர் இல்லை

ரஜினிகாந்த் – கமல் ஹாஸன் ஆகிய இரு பெரும் சிகரங்களை உருவாக்கிய, தமிழ் சினிமாவின் சாதனை இயக்குநர் பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் காலமானார். கமல் ஹாஸன் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்படாவிட்டாலும், அவரை பண்பட்ட நடிகனாக உருவாக்கிய பெருமை கே.பாலச்சந்தருக்குத்தான் சேரும்.

இந்நிலையில் பாலச்சந்தருக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவரின் பிறந்த நாளான ஜூலை 9-ம் தேதி வெண்கலச் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பிறந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இந்த சிலை திறக்கப்படுகிறது. இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலச்சந்தருக்கு புகழுரை வழங்கி பேசுகின்றனர்.

இதனிடையே விழாவுக்கான அழைப்பிதழ்களில் நடிகர் ரஜினியின் பெயர் கூட இடம்பெறவில்லை. ‘சூப்பர் ஸ்டார்’ என்று இன்றைக்கு உலகமே கொண்டாடும் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் தான்.

இந்நிலையில் அழைப்பிதழில் கூட அவரின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விழாவில் ரஜினி பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. கே.பாலச்சந்தருக்காக நடைபெறும் விழாவில் ரஜினியின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Share
Categories
இந்திய சினிமா சினிமா

சீனாவில் தங்கல் சாதனை: ரூ.1913 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் சீனாவில் வெளியான தங்கல் திரைப்படம் சுமார் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், உண்மை சம்பவத்தை தழுவிய தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து சீனாவில் மே 5ம் தேதி, வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு அங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் சீனாவில் தற்போது வரை சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாள்களில் 2000 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனாவில் வெளியான படங்களின் டாப் 20 இடத்தில் தங்கல் படம் இடம் பிடித்துள்ளது.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சூப்பர்சிங்ஙர்களுக்கு சொன்னபடி வாய்ப்பு கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா

திரையுலகத்தில் பலரும் பலருக்கு வாக்கு கொடுப்பார்கள். அடுத்த வாரம் வந்து என்னைப் பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு சான்ஸ் உண்டு என்று சொல்வார்கள். அடுத்த வாரம் வந்தால் வாக்கு கொடுத்தவர் உள்ளேயே நுழைய விட மாட்டார்.

ஆனால், திரையுலகத்தில் சொன்னபடி செய்து காட்டி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சிறப்பாகப் பாடும் மூன்று பேருக்கு தான் இசையமைத்து வரும் ‘பலூன்’ படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன் கலந்து கொண்டு பாடிய பிரியங்கா, ரிஸ்வான், பிரியா ஜெர்சன் ஆகியோர் உட்பட பலர் யுவன் முன் பாடினார்கள்.

அவர்கள் பாடியதைக் கேட்ட யுவன் நிகழ்ச்சி முடிந்ததும் பிரியங்கா, ரிஸ்வான், பிரிய ஜெர்சன் ஆகியோரைத் தன் ‘பலூன்’ படத்தில் பாட வைக்க தேர்ந்தெடுத்தார். அவர் சொன்னது போலவே சில நாட்களுக்கு முன்பு அவர்கள் மூவரையும் தன் இசையில் ‘பலூன்’ படத்தில் பாட வைத்திருக்கிறார்.

சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பலர் மத்தியில் யுவனின் இந்த செயல் அவருடைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Share
Categories
இயக்குனர் விஜய் சினிமா தமிழ் சினிமா பிரபுதேவா

இயக்குனர் விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா

பிரபல நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா கடந்த வருடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘தேவி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஹிட் ஆகியது.

‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், சாய் பல்லவி தற்போது நானி ஜோடியாக `ஃபிடா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் `கரு’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த போஸ்டரை இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா வெளியிடுகிறார். `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா – ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர்.

Share
Categories
அனுஷ்கா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர்

வரும் ஜூலை மாதம் பாகுபலி 2 சீனாவில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர். இந்த ஜோடி ரசிகர்கள் பிடித்து போக இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வேண்டுமென்று ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பின் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவியது. இதையடுத்து அனுஷ்கா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து யாரவது வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கையும் விடுத்தார்.

தற்போது சீனாவில் பாகுபலி 2 படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே தங்கல் திரைப்படம் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. அதேபோன்று பாகுபலி 2 திரைப்படமும் சீனாவில் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

Share
Categories
சினிமா தமிழ் சினிமா

35 வயது நடிகையை காதல் திருமணம் கொண்ட டைரக்டர் வேலுபிரபாகரன்

புரட்சிகருத்துகளை கூறுவதாக சினிமாபடம் எடுத்த 60 வயது இயக்குனர் வேலுபிரபாகரன் தனது படத்தில் நடித்த 35 வயது நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் என்று கூறிக் கொள்ளும் இவர் நாளைய மனிதன், அதிசயமனிதன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகவும், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி அனல் பறக்கும் வசனங்களை பேசி நடித்தவர். கடந்த சிலவருடங்களுக்கு முன்பு காதல் கதை என்ற வயது வந்தோருக்கான படத்தை தயாரித்து இயக்கினார் வேலுபிரபாகரன். உலகில் காதல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே உடல் சார்ந்த இனக்கவர்ச்சி மட்டுமே என்றும் அவர் கூறி வந்தார்.

இந்த நிலையில் தான் இயக்கிய காதல் கதை படத்தில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்த ஷெர்லி என்ற நடிகையை தற்போது காதலிப்பதாக கூறி இன்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார் வேலு பிரபாகரன்.

 

Share
Categories
இந்திய சினிமா சினிமா ஷாருக்கான்

ஷாருக்கான் இறந்ததாக வெளியான போலி செய்தியால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, பிரபல ஐரோப்பிய டிவி முக்கிய செய்தி தவறாக வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாக, ஐரோப்பிய டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த ஷாருக்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாக, தனது புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார்.

அதே சமயம், சில நாட்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்காக போடப்பட்ட அரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தை நினைவுப்படுத்தியவர், இந்த வாரம் தனக்கு சோகமான வாரமாகவே அமைந்துவிட்டது, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Categories
சினிமா சுந்தர். சி தமிழ் சினிமா ஸ்ருதி ஹாசன்

சங்கமித்ரா திரைப்படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகல்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் செலவில் வெளியாகவிருக்கும் சரித்திர பின்னனி கொண்ட படமாக அறிவிக்கப்பட்ட சங்கமித்ராவில், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

எட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக அமையவுள்ள இப்படத்தின் முதல் பார்வை கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது; அதில் ஸ்ருதி ஹாசன் உட்பட ஆர்யா, சுந்தர்.சி மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், ‘சங்கமித்ரா’ படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.

ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்துக்காக தயாராகிவருகிறார்” என்று தெரிவித்துள்ளார்கள்.

Share
Categories
அனுஷ்கா சினிமா தமிழ் சினிமா

திருமண தோஷம் நீங்க அனுஷ்கா விசேஷ பூஜை

நடிகை அனுஷ்காவிற்கு ஏற்பட்டுள்ள திருமண தோஷம் நீங்குவதற்காக கோயிலில் விசேஷ பூஜை செய்யப்பட்டது.

நடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தற்போதுவரை சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், இன்னும் திருமணம் முடிவாகவில்லை.

அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர்.

அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

Share