மீன்பிடிப்பது எப்படி
நீதி : தொழிலுக்கு எந்த உபகரணம் தேவை என்று கண்டறிந்து அதனை உபயோகப்படுத்து.
See the English version here
மீன்பிடிப்பது எப்படி
நீதி : தொழிலுக்கு எந்த உபகரணம் தேவை என்று கண்டறிந்து அதனை உபயோகப்படுத்து.
See the English version here
ஈசாப் கதைகள் – ஆப்பிள், மாதுளை & முட்புதர்
நீதி : ஒவ்வொருவரும் தான் மற்றவரைவிட உயர்ந்தவர் என நினைப்பது இயல்புதான். ஆனால், மற்றவருடன் சண்டையிட்டு, பின்னர் தம்மைவிட மிக மிக எளியோரால் சமாதானம் செய்துவைக்கப்பட வேண்டிய நிலைவரைச் செல்லவேண்டாம்.
See the English version here
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.
-நாலடியார் # 227
விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர்.
Lord of the cool land where the waters brightly shine! the good will not look upon the faults of others after mixing with them (in friendship), though they act disagreeably. Persons destitute of strength of mind who take up evil things and speak of them after mixing (in friendship), are themselves inferior to those of whom they speak.
தம்மை விரும்பாதவர்களைப் பின் தொடர்ந்து சென்று, எப்படியாவது அவர்களைத் தம்மை விரும்பச் செய்யுமாறு மாற்றிவிடலாம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பமான உறவு, தனது ஒரு கையால் கல்லை எடுத்து இன்னொரு கையை அடித்துப் போக்கிக் கொள்வது போலாகும்.
தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
நாலடியார் : பாடல்-336
உரை:
நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, ‘அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்’ என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.
O lord of the sea-shore where the punnei tree with fair blossoms grows! The worthless friendships of those who say, We will make them our own, while they follow those who have no friendship for them, is like losing one’s arm in striking another with a stone.
இதனை அடுத்த பாடலும் இதுபோன்ற கருத்தையே வலியுறுத்துகிறது.
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
நாலடியார் : பாடல்-337
உரை:
எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
As the ants without intermission walk round and round the outside of the pot in which there is butter, though it be impossible to get at it, so men of the world will never learn, but cleave to those rich men who never give them anything.
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை
பாடியவர்: நல்லாதனார் : திரிகடுகம் # 38
பாடுபட்டுச் சேர்த்தச் செல்வத்தைச் பாதுகாக்கவே எவரும் நினைப்பர். ஆயினும், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும். இவற்றையே ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார் திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
The man who braggs much about himself, who gets mad at others without any reason and who wants to buy whatever he sees, will lose his accumulated wealth.
-Nallathanar : Thirikadugam # 38
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
பாடியவர்: பிசிராந்தையார் – புறநானூறு # 184
உரை :
மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் கெட்டு, தன் நாட்டையும் கெடுப்பான்.
If you harvest the rice from a small area of land, make it into small bundles, and feed the elephant, it will last for several days as the elephant’s food. But, even if there are a hundred paddy fields, if the elephant enters into the field and starts eating on its own, the paddy field will be trampled with the elephant’s legs and the rice will be destroyed. Similarly, if a country’s leader collects taxes with the appropriate knowledge of economics, the country will flourish. However, if he becomes weak and on the advice of fawning kith and kin, he starts collecting taxes without any mercy on the populace, his country will become like an elephant that entered into the field. He won’t get what he wishes for, but his country too will be ruined.