Categories
ஃபிரான்ஸ் உலகம் தலைப்புச் செய்திகள்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரானின் கட்சி முன்னிலை

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவல் மேக்ரான் சென்ற மாத்ம் வெற்றி பெற்று, அதிபராக பதவி ஏற்றார்.  தற்போது 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடந்தது.

நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. பொதுவாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.  இந்த தேர்தலில் அதிபர் இமானுவல் மேக்ரானின் எல்.ஆர்.இ.எம். கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்சு தொகுதிகளில் 10 தொகுதிகளில் மேக்ரான் கட்சி வெற்றி பெற்று விட்டது. இதே நிலைதான் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவில் எமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.

Share
Categories
உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அரபு நாடுகள் வரவேற்பு

கத்தார் மீது பிற அரபு நாடுகள் தடை விதித்தபோது, அது குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அந்நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதனிடையே அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ”தலைமைத்துவத்தை” பாராட்டியிருக்கிறது.

கத்தார் ”மற்றவர்களைக் கொல்ல மக்களுக்கு பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும்” என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

கத்தார் ”மற்ற ஒற்றுமையான நாடுகளின் மத்தியில்” மீண்டும் வரவேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க, சின்னஞ்சிறிய நாடான, கத்தார், தான் இஸ்லாமியவாத தீவிரவாதிகளை ஆதரிப்பதாகக் கூறப்படுவதை பலமாக மறுக்கிறது.

கத்தாரின் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கத்தாருக்கு ஆதரவு திரட்ட ஐரோப்பா சென்றிருக்கிறார்.

தனது நாடு ” வெற்றிகரமானதாகவும், முற்போக்கானதாகவும்” இருப்பதால் அது தனிமைப்படுத்தப்படுவதாகவும், தனது நாடு ” ஒரு அமைதிக்கான அரங்கம், பயங்கரவாதத்துக்கானது அல்ல ” என்று கத்தாரின் ஷேக் மொஹமது கூறுகிறார்.

 

 

Share
Categories
தமிழகம் தலைப்புச் செய்திகள் ம.தி.மு.க. மலேசியா

மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் மலேசியாவில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்நாட்டிற்கு ஆபத்தானவர்களின் பெயர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக கூறி, நடவடிக்கை எடுத்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள குடிவரவுத் துறை அதிகாரிகள், நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி புலிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டதாகவும் இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் குற்றம்சாட்டியதாக ம.தி.மு.க. தெரிவிக்கிறது.

வைகோ, தான் இந்தியக் குடிமகன் என்று கூறி கடவுச் சீட்டைக் காட்டியபோதும் “மலேசியாவுக்கு ஆபத்தானவர்” என்ற பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதால் அவர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, அவருடைய கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாகவும் அக்கட்சியின் அறிக்கை கூறுகிறது.

பினாங்கு மாநில முதல்வர் லிங் குவான் யங், துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பரிந்துரைத்தும் அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை திரும்பிய வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார். மலேசியாவில் தன்னை ஒரு கைதி போல் நடத்தியதாகவும், உணவு கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இதன் பின்னணியில் இலங்கை அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Share
Categories
உலகம் ஓமான் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் விமானங்களுக்கு சவுதி அரேபியா தடையால் மஸ்கட் ஏர்போர்ட் பிஸியானது

தீவிரவாதத்துக்கு துணை போவதாக கத்தார் நாட்டின் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு, பக்ரைன் மற்றும் எகிப்து ஆகிய 4 நாடுகள் கடந்த வாரம் தடை விதித்தது. இதை ெதாடர்ந்து அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் நிறுவனமும் தனது விமான போக்குவரத்தை சவுதி அரேபியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ரத்து செய்துள்ளது. இதனால் கத்தாரிலிருந்து சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும ஐக்கிய அரபு குடியரசு செல்ல வேண்டியவர்களும், இந்த நாடுகளிலிருந்து கத்தார் செல்ல வேண்டியவர்களும் ஆங்காங்கு தவித்து வருகிறார்கள்.

இதற்கு தீர்வு காணும் வகையில் மஸ்கட் வழியாக தங்கள் நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியாவில் தவித்து வரும் பயணிகள் முடிவு செய்துள்ளனர். மஸ்கட் நடுநிலை வகிப்பதால் கத்தார் மற்றும் சவுதி விமானங்கள் அங்கு தரையிறங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.

இதற்காக சிறப்பு விமானங்களை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மஸ்கட் அனுப்பியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள கத்தார் பயணிகள் ஓமன் ஏர் நிறுவனத்தின் விமானம் வழியாக மஸ்கட் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து கத்தார் விமானம் மூலம் தோகா கொண்டு வரப்பட்டனர். இதற்காக ஓமன் ஏர் நிறுவனம் தோகாவுக்கு வரும் 14ம் தேதி வரை மிகப்பெரிய விமானங்களை இயக்க இருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தவிர கத்தார் ஏர்வேசுக்கு ஓமன் ஏர் நிறுவனம் 3 விமானங்களை வாடகைக்கு கொடுத்துள்ளது. இந்த விமானங்கள் மஸ்கட்-ஜெட்டா-மஸ்கட் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் மஸ்கட் விமான நிலையம் தற்போது மிகவும் பிசியாக உள்ளது. கத்தாருக்கு உதவியாக குவைத் விமான போக்குவரத்து நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. சவுதியில் உள்ள கத்தார் நாட்டினர் குவைத் வழியாக நாடு திரும்ப குவைத் ஏர்வேஸ் விமானங்களையும் கத்தார் ஏர்வேஸ் ஏற்பாடு செய்துள்ளது.

 சவுதியில் சிக்கியுள்ள கத்தார் நாட்டினர் அனைவரும் நாடு திரும்பும் வரை கத்தார் விமான போக்குவரத்து நிறுவனம் சிறப்பு விமானங்களை இயக்கும் என கத்தார் ஏர்வேசின் தலைமை அதிகாரி அக்பர் அல் பேகர் தெரிவித்துள்ளார். அதிக அளவில் பயணிகளை ஏற்றி வருவதற்காக மிகப்பெரிய விமானங்களை கத்தார் ஏர்வேஸ் தற்போது பயன்படுத்தி வருவதாகவும், கத்தார் ஏர்வேசில் டிக்கெட் புக் செய்துவிட்டு, வேறு ஏர்வேசில் நாடு திரும்புகிறவர்களுக்கு முழு கட்டணம் திரும்ப தரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய அரபு குடியரசும் கத்தார் மீது தடை விதித்திருப்பதால் அந்நாட்டிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அந்த நாட்டிலும் அதிக பயணிகள் தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வர தொடங்கியுள்ளன.

Share
Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள்

பிரிட்டன் தேர்தல்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இழந்தது; ஆட்சியைத் தொடர முயற்சி

பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது.

ஏறக்குறைய எல்லா முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, ஆனாலும், அதுவே தனிப்பெரும் கட்சியாக இருக்கும்.

கன்சர்வேடிவ் கட்சி வட அயர்லாந்தின்  பல யூனியனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயலுகிறது. இது வெற்றி பெறவில்லை என்றால் சிறுபான்மை அரசுதான் அமைக்க முடியும். இதனால் மீண்டும் விரைவிலேயே மற்றொரு தேர்தல் வரக் கூடும்.

“நாட்டிற்கு நிலையான ஆட்சி தற்போது மிக அவசியம். நாம் அதிக இடங்களை பெறுவதாக இருந்தால், நிலையான ஆட்சியை வழங்க வேண்டியது நம் கடமை” என்று பிரதமர் தெரெசா மே கூறியிருக்கிறார்.

தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, தேறாத கட்சி என்று கைகழுவப்பட்ட தொழிற்கட்சி, எதிர்பாராத விதமாக பல இடங்களை வென்றிருக்கிறது.

பொருளாதாரத்தில் `சிக்கன நடவடிக்கை` அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் கூறியிருக்கிறார்.

தெரீசா மே பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

சில கன்சர்வேடிவ் கட்சியினர் அவர் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

கடந்த தேர்தலில் இருந்த்தை விட வாக்குப்பதிவு இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள்

அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, செனட் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியமளித்தார்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த சாட்சியத்தில், வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில், தமக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுமாறு அதிபர் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

மேலும் அவரது சாட்சியத்திலிருந்து வெளியாகும் 6 விஷயங்கள் :

1) டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை

செனட்டர் மார்கோ ரூபியோவின் கேள்வியொன்றுக்கு, கோமி அளித்த பதிலில் ‘டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

2) ஜேம்ஸ் கோமி விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டார்

ஜேம்ஸ் கோமி அவரது நண்பர்களின் வழியாக விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டதை ஏற்றுக்கொண்டார்.

3) டிரம்ப் நீதிக்குத் தடை ஏற்படுத்தினார் என்ற வாதம் இனி எடுபடாது

குடியரசு கட்சியின் செனட்டர் ஜேம்ஸ் ரிஷ், கோமியிடம் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், டிரம்ப் கோமியிடம் இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை என்பதை கோமி  ஒத்துக்கொண்டார்.

4) நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டது என்று கோமி கூறினார்

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், கோமி சொல்வது :  “நான் ரகசிய செய்திகளைப் பற்றி எழுதும் நிருபர்களைக் குறை சொல்லவில்லை.. பிரச்சனை என்னவென்றால், இவைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.. தெரிந்தவர்கள் அவைகளைப் பற்றி பேசுவதில்லை..”

5) அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் அரசு வழக்கறிஞர் லொரேட்டா லின்ச், ஹிலாரியின் மீதான விசாரணையில் குறுக்கிட்டார்

6) கோமியின் குற்றச்சாட்டுகள் பொதுவாக அதிருப்தியடைந்த முன்னாள் ஊழியர்கள் சொல்வதைப் போலவே உள்ளது

 

 

 

 

Share
Categories
இங்கிலாந்து உலகம்

பிரிட்டன் பொதுத்தேர்தல் : யாருக்கும் பெரும்பான்மை இல்லை என கருத்துக் கணிப்பு; தற்போது லேபர் முன்னிலை

பிரிட்டன் பார்லிமென்ட் பொதுத்தேர்தல் நிறைவு பெற்றதையடுத்து தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலைவரம்:

லேபர் கட்சி – 131

கன்சர்வேட்டிவ் கட்சி – 110

ஸ்காட்லாந்து தேசிய கட்சி – 17

பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். அதன்படி கடைசியாக 2015 மே மாதம் தேர்தல் நடந்தது. பிரதமராக தெரசா மே இருந்தார். 2020 வரை பதவிக்காலம் இருந்தது.

ஆனால் இவருக்கு, பிராக்சிட் (ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு) விஷயத்தில் பார்லிமென்ட்டில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை. இதனால் தேர்தலை முன்கூட்டிய நடத்த கோரினார். அதன்படி நேற்று(ஜூன் 8) தேர்தல் நடந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

பிபிசியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

Share
Categories
ஈரான் தமிழகம் தலைப்புச் செய்திகள்

ஈரானிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

ஈரான் நாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழகஅரசின் சொந்த செலவில், சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துபாயில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.

அவர்களில் 15 பேர் ஈரான் எல்லையைத் தாண்டியதாக் கூறி, அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து 13 தமிழக மீனவர்களும்,   குஜராத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழக மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, 13 மீனவர்கள் இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர்.

 அவர்களை தமிழக அரசு சார்பில் உயரதிகாரிகள் வரவேற்றனர். இதேபோல், மேலும் 2 பேர் திருச்சி விமான நிலையம் வந்திறங்கினர். பின்னர் மீனவர்கள் அனைவரும் தமிழக அரசின் சொந்த செலவில், அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் மியான்மர்

மியான்மரில் 104 பேருடன் காணாமல்போன ராணுவ விமானம் கடலில் விழுந்ததாக தகவல்

மியான்மரில் 104 பேருடன் காணாமல் போனதாக கூறப்பட்ட ராணுவ விமானம் தற்போது கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இன்று காலை 90 வீரர்கள் மற்றும் 14 விமான ஊழியர்களையும் ஏற்றிக் கொண்டு மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் ஒன்று தெற்கில் உள்ள மியெய்க் நகரத்தில் இருந்து யாங்கூன் நகருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது, சர்வதேச நேரத்தின்படி இன்று காலை 7.05 மணிக்கு அந்த விமானம், விமானக் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. தவேய் நகருக்கு 20 கி.மீ மேற்கில் இந்த விமானம் மாயமானது.

தற்போது இந்த விமானத்தை தேடி வருவதாக ராணுவ தளபதி தெரிவித்திருந்தார். இதற்கிடையே மாயமான இந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share
Categories
ஈரான் உலகம் தலைப்புச் செய்திகள்

ஈரான் நாடாளுமன்றம், கொமெய்னி வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச்சூடு

ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். அங்கு நுழைந்த ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களான பார்ஸ், மெஹர் ஆகியவை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளன. “ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு வீரரின் காலில் குண்டு பாய்ந்தது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஈரான் புரட்சியாளர் அயதுல்லா ருஹல்லா கொமெய்னியின் வழிபாட்டுத்தலத்திலும் ஆயுதம் ஏந்திய நபர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share