Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் ஜப்பான் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க போர்கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதல் : 7 மாலுமிகளை காணவில்லை

ஜப்பானை அடுத்த கடற்பகுதியில் அமெரிக்க போர்கப்பலான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட்  அதைவிட 4 மடங்கு பெரிய சரக்குக் கப்பலுடன் மோதிய விபத்தில் 7 மாலுமிகளை காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் ஜப்பானிய கடற்காவல் படையும் வேறு அமெரிக்க மற்றும் ஜப்பானிய கப்பல்களும் ஈடுபட்டுள்ளன.

யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்ட் ஜப்பானிலுள்ள யோகோஸ்கா கடற்படை தளத்தின் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. காணாமல் போன 7 மாலுமிகளும் சேதமான யூ.எஸ்.ஏஸ். பிட்ஸ்ஜெரால்டின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று ஜப்பானிய கடற்காவல் படை தெரிவித்தது.

காணாமல் போன மாலுமிகளின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Share
Categories
இந்தியா உலகம் சுவிட்சர்லாந்து தலைப்புச் செய்திகள் பொருளாதாரம்

கறுப்பு பணம்: இந்தியாவுடன் தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல்

இந்தியாவுடன் கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தானியங்கிப் பகிர்வு செய்ய சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. 2018-ல் இத்தானியங்கிப் பகிர்வு செயலாற்றத் துவங்கும். இருப்பினும் கறுப்புப் பணம் பற்றிய விவரங்கள் முதலாவதாக 2019 வாக்கிலே பரிமாறப்படும் என்று தெரிகிறது. தகவல் பரிமாற்றத்தின்போது  இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியன கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

வரி விஷயங்களில் தானியங்கி தகவல் பரிமாற்றத்திற்கான உலகளாவிய மாநாடு, AEOI அறிமுகப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இவ்வாறு கூறியுள்ளது.

தானியங்கிப் பகிர்வு எப்பொழுது துவங்கும் என்ற தகவலை சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் இந்திய அரசுக்கு விரைவில் தெரிவிக்கும்.

வெள்ளிக்கிழமை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இம்முடிவு, வேறெந்த வாக்கெடுப்புக்கும் உட்பட்டதல்ல. ஆகவே, இதனைச் செயல்படுத்தலில் நடைமுறை தாமதம் எதுவும் இராது என்று கருதப்படுகிறது.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் ரஷ்யா

ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியா ?

ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விசாரித்து வருவதாக தெரிகிறது.

ஐ.எஸ். அமைப்பினர் அவர்களது கவுன்சில் கூட்டத்தை ரக்காவில் நடத்தும் பொழுது, அதனைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் பாக்தாதி கொல்லப்பட்டாரா என்பதை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சிரியாவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதற்கு முன்னரும், அவர் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியாகியுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம்

சான் பிரான்சிஸ்கோவில் மற்றோரு துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் யு.பி.எஸ். மையம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சக்கர்பெர்க் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக விர்ஜ்னியா மாகாணத்தில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குடியரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீவ் ஸ்காலிஸ் பேஸ்பால் உயிரிழந்தார். இந்நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க குடியரசு கட்சி எம்பி உட்பட 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு; சுட்டவர் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், குடியரசுக் கட்சியின் மூத்த எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்ப்ட்டது. இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைச் சுட்டவர் ஜனநாயக கட்சியைச் சார்ந்தவரும், அதிபர் தேர்தல் வேட்பாளராவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸின் ஆதரவாளருமான ஜேம்ஸ் ஹாட்கின்சன் என கருதப்படுகிறது. ஜேம்ஸ் ஹாட்கின்ஸன் சம்பவ இடத்திலாயே பாதுகாப்பு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குடியரசுக் கட்சியின் லூசியானா எம்பி ஸ்டீவ் ஸ்கேலீஸ் உள்ளிட்டோர் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒரு குண்டு குடியரசுக் கட்சியின் எம்.பி.  ஸ்கேலீஸ்  இடுப்பு பகுதியில் பாய்ந்தது.  அவருடன் பேஸ்பால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.  இவர்கள் தற்போது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Share
Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன்

லண்டன் அடுக்கு மாடி கட்டிட தீ விபத்து: சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு

லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு லண்டனில்   அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தீ கட்டுக்கடங்காமல் விடாமல் எரிந்து வருவதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவது சிக்கலாக இருக்கிறது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அந்த கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இன்னமும் மொத்தமாக எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனை பேர் அங்கு சிக்கியிள்ளனர் என்ற விவரம் தெரியாத நிலை உள்ளது.

 

Share
Categories
உலகம் லண்டன்

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர்

மேற்கு லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை.

மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

லண்டனில் இன்று அதிகாலை நேரத்தில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

ரஷ்யாவுடன் இணக்கம் என்பது பொய்; கோமியின் பதவி நீக்கம் சரிதான்: ஜெஃப் செஷன்ஸ்

அமெரிக்க பெடரல் அட்டார்ணி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் இன்று செனட்டில் சாட்சியம் அளிக்கையில்,  2016 தேர்தலின் போது அவர் ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்று எதிர்கட்சியும் ஊடகங்களும் சொல்வது கொடுரமான, வெறுக்கத்தக்க பொய் என்று கூறினார்.  மேலும், எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்த விஷயத்தில் தனது பங்களிப்பு மிகவும் சரியானதே என்றார்.

மேலும் அவர் செனட் புலனாய்வுக் குழுவிடம் கூறியதாவது :

எந்தவொரு ரஷ்யருடனோ அல்லது எந்த வெளிநாட்டு அதிகாரிகளுடனோ நான் தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது தேர்தலிலோ  தலையீடு குறித்து எந்த உரையாடலையும் நடத்தவில்லை. டிரம்ப்-ன் பிரச்சாரக் குழுவைச் சார்ந்த எவரும் இது குறித்து ஏதேனும் உரையாடல் நடத்தினார்களா என்றும் எனக்குத் தெரியாது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் அரசு வழக்கறிஞர் பிரீட் பாராரா டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞரான பிரீட் பாராரா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகளை பெற்றதாகவும், மூன்றாவது தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுக்காத பிறகு, தான் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து வெள்ளை மாளிகை இன்னும் பதிலளிக்கவில்லை.

நிர்வாக கிளையையும், சுயாதீன குற்றவியல் ஆய்வாளர்களையும் பிரிக்கிற வழக்கமான எல்லைகளை டிரம்ப் தாண்டி விட்டதாக பிரீட் பாராரா தெரிவித்தார்.

பிரீட் பாராரா நியுயார்க்  தெற்கு மாவட்ட முன்னிலை பெடரல் அரசு வழக்கறிஞராக 2009-லிருந்து 2016 வரை பணியாற்றினார்.

இந்தியாவில் பிறந்த பிரீட் பாராரா, 1970-ல் அவரது பெற்றோருடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் ஜனநாயக கட்சியின் செனட்டர் சக் ஷூமரின் ஆலோசகராகவும் சிலகால பணியாற்றினார்.

பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களையும் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் பேர்பெற்றவர்.

பாராராவால் தண்டனையும் தண்டப்பணம் செலுத்தவும் வைக்கப்பட்டவர்கள் சிலர் :

  • தேவ்யானி கோப்ரகெடே – நியுயார்க் இந்திய தூதரகத்தில் உதவி கான்சலாக பணியாற்றிய இவரது வீட்டில் வேலை பார்த்த ஒருவர் வெளியேறி, தனக்கு சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு பதிவு செய்தார். இந்த வழக்கில் இந்திய அரசின் எதிர்ப்புகளை மீறி தேவ்யானிக்கு பாராராவினால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது.
  • நியுயார்க் வால் தெருவில் பங்குச் சந்தை உள் வர்த்தகம் (insider trading) என்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்னமும் அவரது கூட்டாளிகளும் பாராராவால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டனர்.
  • சிட்டி பாங்க் – ஆபத்தான கடன்கள் என்ற குற்றச் சாட்டில், சிட்டி பாங்க் பெருந்தொகையை தண்டப்பணமாக செலுத்த வைத்தார்.

 

Share
Categories
உலகம் கிரீஸ்

கிரீஸை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 10 பேர் படுகாயம்

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் கடற்கரை நகரமான ப்ளோமாரியின் தெற்கில் இருந்து 5 கி.மீ தொலைவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  துருக்கி நாட்டில் இஸ்தான்புல் மற்றும் ஏதென்சிலும் இந்த நிலநடுக்கம்உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share