Categories
உலகம் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர அதிர்வை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸ் மிகவும் வித்தியாசமான தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுவது மிகவும் வழக்கமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டரில் 7.7 என்ற அளவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share
Categories
அமெரிக்கா உலகம் வட கொரியா

வடகொரியாவிடம் உள்ளவை டம்மி ஆயுதங்கள் ?

மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிடுவோம் என்று மார்தட்டிய வடகொரியாவிடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள் உண்மையானவை இல்லை என்றும் அவை வெறும் டம்மி ஆயுதங்கள் என்பதை அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களுடன் கண்டு பிடித்துள்ளது. எனவே வடகொரியாவை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வட கொரியாவில் நடைபெற்ற, முன்னாள் அதிபர் கிம் இல் சங்-ன் 105 -ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தின்போது மிக பிரமாண்டமாக பாரியா ராணுவ அணிவகுப்பை அதிபர் கிம் ஜாங் நடத்தினார். அமெரிக்கா உள்பட உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட அணிவகுப்பாக இது கருதப்பட்டது.

இந்த நிலையில் இந்த அணிவகுப்பு புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ நிபுணர் குழு, அணி வகுப்பில் பல ராணுவ வீரர்கள் தங்கள் கையில் வைத்திருந்தது பொம்மை ஆயுதங்கள் என்றும் அவர்களில் பலர் அணிந்திருந்த கண்ணாடி கூட போலி என கண்டறியப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம் வட கொரியா

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை நிறுவத் துவங்கியது அமெரிக்கா

அண்டை நாடான வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தென் கொரியாவில் உள்ள ஓர் இடத்தில் சர்ச்சைக்குரிய ஏவுகணைத் தடுப்பு அமைப்பை நிறுவும் நடவடிக்கையை அமெரிக்க ராணுவம் துவக்கியுள்ளது.

தாட் எனப்படும் இந்த முறை, வடகொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாகும்.

தென் கொரியாவின் தென்பகுதியில் இருக்கும் அந்த இடத்துக்கு, ஏவுகணைப் பாதுகாப்பு சாத்தனங்கள் வரத் துவங்கியவுடன், நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்தப் பிராந்தியத்தில், பாதுகாப்பு சமநிலையை சீர்குலைக்கும் என்று இந்த பாதுகாப்பு முறைக்கு சீனாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வடகொரியா இன்னும் கூடுதலாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்ற அச்சங்களுக்கிடையில், அமெரிக்கா சமீப நாட்களில் கொரிய தீபகற்பப் பகுதிக்கு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது.

வடகொரியா வாலாட்டக்கூடாது என்று எச்சரிக்குமாறு அதன் கூட்டாளி நாடான சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில், வடகொரிய நிலவரம் தொடர்பாக, அமெரிக்க செனட்டர்களுக்கு வெள்ளை மாளிகையில் புதன்கிழமை பிற்பகுதியில் ரகசிய விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலை எப்படி மாறக்கூடிய வாய்ப்பு உண்டு, அமெரிக்கா எந்தெந்த வழிகளில் எல்லாம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் விளக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Categories
அமெரிக்கா இந்திய ரிசர்வ் வங்கி உர்ஜிட் படேல் உலகம்

உலகெங்கிலும் உள்ள திறமைகள் இன்றி ஆப்பிள், ஐபிஎம் வளர்ந்திருக்க முடியுமா? – உர்ஜிட் படேல்

அமெரிக்க தற்காப்புவாதக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், உலகம் முழுதும் உள்ள திறமைகளின் பங்களிப்பின்றி ஆப்பிள், ஐபிஎம் நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூயார்க்கில் சொற்பொழிவாற்றிய பிறகு உர்ஜித் படேல் கூறியதாவது:

உலகின் மிகத்திறமை வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் உலகெங்கிலும் வந்து பங்களிப்பு செய்த திறமைகள் இன்றி உயர்ந்திருக்க முடியுமா?

உலகத்திறமைகளின் பங்களிப்பு இல்லாமல் ஆப்பிள் எங்கிருந்திருக்கும்? சிஸ்கோ எங்கு இருந்திருக்கும்? ஐபிஎம் எங்கு இருந்திருக்கும்? இதற்குத் தடை ஏற்படும் விதமாக கொள்கைகள் வகுக்கப்பட்டால், தற்காப்புவாதக் கொள்கைகளுக்கு ஆதரவளித்தால் ஒரு நாட்டின் செல்வ வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் காரணிகளே அதிகம் பாதிக்கப்படும்.

வாணிப உபகரணங்களான சுங்கத்தீர்வைகள், எல்லை வரி உள்ளிட்டவைகள் மூலம் தற்காப்புவாதத்தை திறம்பட செயல்படுத்தி விட முடியாது. மாறாக வளர்ச்சிக்கு குந்தகமே விளைவிக்கும், என்றார்.

ஜிஎஸ்டி வரி குறித்து..

“சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தின் மிகப்பெரிய உதாரணமாகும். இதில் சமரசம் செய்து கொண்டிருந்தால் ஜி.எஸ்.டி. என்பது அமைப்பு ரீதியாக வரி விதிப்பு நடைமுறைகளை பலவீனப்படுத்தியிருக்கும்” என்றார் உர்ஜித் படேல்.

(நன்றி : தி இந்து தமிழ்)

Share
Categories
அமெரிக்கா உலகம் வட கொரியா

“அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்”

(பி.பி.சி. தமிழ்)

கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை “மூழ்கடிக்க” வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை “ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்” என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது

வின்சன் கப்பலை முதன்மையாக கொண்டு சண்டைக்கு தயாராக இருக்கும் அமெரிக்க ராணுவ படை, இந்த வாரத்தில் தீபகற்பத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வட கொரியாவின் அணு சோதனைகள் குறித்து அமெரிக்கா காத்து வந்த “மூலோபாய அமைதி” முடிவடைந்துவிட்டது என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பால் அந்த போர்கப்பல் அனுப்பப்பட்டது.

வட கொரியாவின் தோல்வியடைந்த ஏவுகணை சோதனை மற்றும் சமீபத்திய ஆயுதங்களை வெளிக்காட்டிய, பிரமிக்க வைக்கும் ராணுவ அணி வகுப்பு ஆகியவற்றிற்கு பிறகு பதற்றங்கள் அதிகரித்தன.

ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் செய்தித்தாளான நோடாங் ஷின்முனில் ஞாயிறன்று வெளிவந்த இந்த செய்திக்கு பிறகு, கிம் ஜாங் உன், பன்றி பண்ணையை பார்வையிடுவது குறித்த விரிவான செய்தியும் வெளிவந்தது.

“எங்களின் புரட்சிப் படைகள் அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கியை ஒரே அடியில் வீழ்த்த தயாராக உள்ளது என்றும், ” பெரிய விலங்கு” என்று வட கொரியாவால் கருதப்படும் அதனை அழிப்பது தங்களின் ராணுவப் படையின் வலிமையை காட்டுவதற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும்” , என்று அப்பத்திரிகை கூறியது

இதே எச்சரிக்கையை மாநில செய்தித்தாளான `மிஞ்சு ஜோசன்` பத்திரிகையும் எதிரொலித்துள்ளது.

“எதிரிகள் திரும்ப எழ முடியாத அளவு ராணுவம் இரக்கமற்ற அடியை கொடுக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
ஃபிரான்ஸ் உலகம்

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மக்ரோங், லெ பென் தேர்வு

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷான் லூக் மெலாங்ஷாங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது.

இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் ஃபிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடிப்பதாக அது அமையும்.

Share
Categories
இங்கிலாந்து இந்தியா உலகம் லண்டன்

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் மல்லையாவை லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது. பின்னர், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமானச் சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இந்திய வங்கிகளிடம் இருந்து பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்த தவறிய குற்றச்சாட்டும் மல்லையாவின் மீது இருந்தது. நீதிமன்றங்களில் இவை தொடர்பான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டன் சென்றுவிட்டார்.

சிக்கலான நடைமுறைகள்

குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பவேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு காரணம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான, அயல்நாட்டிடம் ஒருவரை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் சிக்கலான செயல்முறைகள் தான்.

சர்வதேச ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் என பிரிட்டிஷ் அரசு, உலகின் சுமார் 100 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், இரண்டாவது பிரிவின் டைப் பி வகையில் இந்தியா வருகிறது.

பிரிட்டனில் இருக்கும் ஒருவரை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் குறித்த நடைமுறைகள் அடங்கிய முழு தகவல்களும் பிரிட்டிஷ் அரசின் வலைதளத்தில் உள்ளது. இந்தியா இடம்பெற்றிருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் கோரிக்கைகளை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும், நீதிமன்றங்களும் பரிசீலித்து முடிவெடுக்கும்.

Share
Categories
அமெரிக்கா உலகம்

அமெரிக்க வாழ் இந்திய சி.இ.ஓ-க்கு 1,35,000 அமெரிக்க டாலர் அபராதம்

தன்னிடம் பணிபுரிந்த பெண் ஊழியரை கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக, 1,35,000 அமெரிக்க டாலரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்ச ரூபாயை) நஷ்ட ஈடாக வழங்கக் கோரி அமெரிக்க வாழ் இந்திய தலைமை செயல் அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘ரோஸ் இன்டர்நேஷனல் அன்ட் ஐ.டி. ஸ்டாபிங்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருப்பவர், ஹிமான்சு பாட்டியா. இந்தியப் பெண். இவர் அங்கு சான்ஜூவான் கேபிஸ்டிரானோ என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இந்தியாவை சேர்ந்த ஷீலா நிங்க்வால் என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

இந்தப் பெண்ணை ஹிமான்சு பாட்டியா, ஒரு நாளில் சுமார் 15½ மணி நேரம் வேலை செய்ய வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு நாள்கூட விடுமுறை கொடுக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். உணவுடன் மாத சம்பளமாக 400 டாலர் (சுமார் ரூ.26 ஆயிரம்) மட்டுமே தந்துள்ளார்.

Share
Categories
இந்தியா உலகம் வங்காளதேசம்

இந்தோ-பங்களா பேச்சுவார்த்தை: தில்லி, டாக்கா பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்து

சீனா வங்காளத்துடன் $25 பில்லியன் மதிப்புடைய 27 ஒப்பந்தங்களை செய்துகொண்ட ஆறு மாதங்களின் பின்னர், புது தில்லி சனிக்கிழமை டாக்காவுடன் நான்கு புரிந்துணர்வு  பாதுகாப்பு உடன்படிக்கைகளை (MoUs) கையெழுத்திட்டது. இதன்மூலம் முதல்முறையாக இந்தியா $500 மில்லியன் கடனாக வங்காளத்திற்கு இராணுவத் தளவாடங்கள் வாங்க வழங்க உள்ளது.

 

 

Share