Categories
இந்தியா உலகம் காஷ்மீர் பாக்கிஸ்தான்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் காஷ்மீர் மக்கள் பீதி

காஷ்மீரில் எல்லையில் விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.  பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறல் இன்றும் தொடர்வதால் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மஞ்சகோட் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தான் ராணுவத்தில் தொடர் தாக்குததால் எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

உலகளாவிய இணையதாக்குதல்: பல முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் முடங்கின

உலகளாவிய மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.

பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது.

பிரிட்டனின் முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்த தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் ransomware attack என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இணைய சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று இந்த மென்பொருள் கேட்கும்.

பிரிட்டனின் சில மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பு முழுமையாக செயலிழந்துபோனதால் பல இடங்களில் நோயாளிகள் அவசரகால சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஸ்பெய்ன் நாட்டில் பெருமளவிலான அந்நாட்டு நிறுவனங்களின் இணைய கட்டமைப்பும் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share
Categories
உலகம் தென் கொரியா

தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே பதவியேற்பு

தென் கொரியாவின் புதிய அதிபராக  மூன் ஜே  பதவியேற்று கொண்டார். அதிபராக அவர் ஆற்றிய முதல் உரையில், வட கொரியாவுடனான பொருளாதார மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மூன் ஜே தீர்க்கமான வெற்றியை பெற்றதையடுத்து அதற்கு மறுநாள் சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற கட்டட அலுவலகத்தில் தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துள்ளார்.

முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான மூன் ஜே, வட கொரிய அகதிகளின் மகன் ஆவார்.

Share
Categories
உலகம் தென் கொரியா

வடகொரியாவுடன் நட்புறவை விரும்பும் தலைவர் தென் கொரியாவின் புதிய அதிபராவாரா ?

வடகொரியாவுடன் நட்புக்கரம் நீட்ட விரும்பும் மூன் ஜயே-இனனை தென் கொரிய வாக்காளர்கள் அடுத்த அதிபராக ஒருமனதாக தெரிவு செய்யக்கூடும் என வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

மூன் 41.4 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் அவரது போட்டியாளர் ஹொங் ஜூன்-பியோ 23.3 சதவீதமே பெறுவார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார்.

தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார்.

முன்னாள் தென் கொரிய அதிபர் ஊழல் மோசடியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முன்னரே அதிபர் தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று.

தன்னுடைய நெருங்கிய தோழி நிறுவனங்களில் இருந்து பணம் பறிக்க அனுமதித்ததாக முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மூன் வெற்றி உறுதியானால், புதன்கிழமை அவர் பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

Share
Categories
ஃபிரான்ஸ் உலகம்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் அபார வெற்றி

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் மக்ரான் 66 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார். மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார். வெற்றிபெற்ற மக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள இமானுவேல் மக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா உலகம் உள்துறை அமைச்சகம் பாக்கிஸ்தான்

பாகிஸ்தான் 2 ஆண்டுகளில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது

போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பலமுறை மீறியதாக  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் 405 முறையும், 2016-ம் ஆண்டில் 449 முறையும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 1142 தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 236 பேரும், பொதுமக்கள் 90 பேரும் உயிரிழந்தன.

இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 507 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்படும் போது சமூக ஊடகங்களில் தகவல் பரவி பாதுகாப்பு படையினரை பொதுமக்கள் சூழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி ஜனநாயக கட்சி

“ஒபாமாகேர்” திட்டம் முடிவுக்கு வருகிறது

குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில்  வெற்றியடைந்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒபாமா கேர்’  திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக  தெரிவித்திருக்கிறார்.  ‘ஒபாமா கேர்’ என்பது முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவினால் முன்னர் கொண்டுவரபட்ட சுகாதர பாதுகாப்புத் திட்டமாகும்.

217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா வெற்றிபெற்றுள்ளது. தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய திட்டத்தை வகுப்பதாக அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முதல்படியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

இந்த அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் மில்லியன் கணக்கானோரை மருத்துவக் காப்பீடு இல்லாமல் ஆக்கும் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிபரின் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆறு வாரங்களுக்கு முன்னர், போதுமான ஆதரவு இல்லாததால் இந்த சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சி இயலாத ஒன்று என்று தோன்றியது.

Share
Categories
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உலகம்

தனது மரணத்தை தானே படமெடுத்த பெண் புகைப்படக் கலைஞர்

அமெரிக்க ராணுவப் புகைப்படக் கலைஞர் ஒருவர் , ஆப்கானிஸ்தானில்  குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு ஆஃப்கானியர்களுடன் கொல்லப்பட்டார். அவர் தனது மரண தருணத்தை  தானே  எடுத்த புகைப்படத்தை  அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த நான்கு படையினர் பலியானார்கள்.

புகைப்பட இதழியல் குறித்து கிளேய்டன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆஃப்கனிஸ்தானை சேர்ந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருந்தது.

பலியானவர்களில் அவரும் ஒருவர். கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த விபத்து ஏற்பட்டது.

`மிலிட்டரி ரிவ்யூ` என்ற சஞ்சிகை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிளேய்டன் குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Share
Categories
அமெரிக்கா உலகம் ஏவுகணை தாட் தென் கொரியா போர்கருவிகள் வட கொரியா

வடகொரிய ஏவுகணைகளை அழிக்க இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் `தாட்” தடுப்பு முறை

(பி.பி.சி. தமிழ்)

தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.

சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக பதிலளித்தது. மேலும், அமெரிக்கா ஓர் அணு ஆயுதப் போரை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங்- உன் னை சரியான தருணத்தில் சந்தித்தால் பெருமைப்படுவேன் என்று கூறிய அடுத்த நாள் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்கா தாட் ஏவுகணை அமைப்பை நிறுவப் போவதாக அறிவித்தது . ஆனால் இது 2017ம் ஆண்டு இறுதியில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்கவைக்கலாம் என்றும் பல உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

தனது ராணுவ செயல்பாடுகளில் அந்த அமைப்பு தலையிடுகிறது என்று சீனா நம்புகிறது. அதனால் இந்த அமைப்பை சீனாவும் கடுமையாக எதிர்க்கின்றது. செவ்வாயன்று, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு நிறுவுதல் நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று கோரியது.

”நமது நலன்களை பாதுகாக்கத் தேவையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கிம் ஜோங்- உன்னை சந்திப்பது தொடர்பாக டிரம்ப் விருப்பம் வெளியிட்டிருப்பதை வரவேற்ற அவர், அதேவேளை, ”பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள்தான் அணுவாயுதமயமாக்கலை தடுக்கும் உண்மையான மற்றும் சாத்தியமான வழி ” என்று கூறியுள்ளார்.

தாட் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானதும், வட கொரியா ”பொருத்தமான பதிலடி”தரப்போவதாகவும், அரசு ஊடகத்தில், ”இரக்கமற்ற பதில் தாக்குதல் நடத்துவதுதான் எங்களது ராணுவத்தின் தீர்க்கமான விருப்பம்,” என்று தெரிவித்தது.

தாட் ஏவுகணை தற்போது கொரியாவைப் பாதுகாக்கும் திறன் கொண்டது என்று அங்குள்ள அமெரிக்கப் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆனால் தாட் ஏவுகணை அமைப்பு “தொடக்க இடைமறிப்பு திறன்” கொண்டதாக மட்டுமே உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஏ எப் பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஏவுகணையின் பெரும்பாலான பகுதிகள் வந்து சேருவதால் அது பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சமீப வாரங்களில், ஐநா வின் ஏவுகணை சோதனை மீதான தடையை தொடர்ந்து மீறிவரும் நேரத்தில், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.

சமீப வாரங்களில் தோல்வியில் முடிந்த இரண்டு ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா சோதனை நடத்தியுள்ளது. மேலும் எந்த நேரத்திலும் தனது ஆறாவது அணு சோதனை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து, சூப்பர்சானிக் பிஒன்பி என்ற லேன்சர் குண்டு வீச்சுத்திறன் கொண்ட விமானங்களைப் பயன்படுத்தி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதை வடகொரியா கோபமாக கண்டித்துள்ளது. இது, அணுகுண்டுகளை வீசுவதற்கான ஒத்திகை நடவடிக்கை என்று வர்ணித்துள்ளது.

”கொரிய தீபகற்பத்தை அணுசக்தி யுத்தத்தின் விளிம்பிற்கு தள்ளும் விதமாக இந்த பொறுப்பற்ற ராணுவ முயற்சிகள் உள்ளன,” என்று வட கொரிய அதிகாரி கே சி என் ஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தாட் ஏவுகணை என்றால் என்ன ?

பாய்ந்து வரும் குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இயங்கும் நேரத்துக்கு முன்பு எதிர்கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது.

200 கிலோமீட்டர் வரம்பில் 150கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும்.

வட கொரியாவின் சாத்தியாமான தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னதாக குவாம் மற்றும் ஹவாய் பகுதிகளில் தாட் ஏவுகணையை நிறுவியது.

தாட் எவ்வாறு வேலை செய்கிறது?

எதிரி படை ஓப் ஏவுகணையை செலுத்தும்போது, தாட் ரேடார் அமைப்பு அதை கண்டறிந்துவிடுகிறது. கட்டளையிடப்பட்டு இயக்கப்பட்டதும் அது பறந்து சென்று எதிரியின் ஏவுகணையை எதிர்கொண்டு இயங்கும் முன்பு மோதி அழிக்கிறது. தாட் ஏவுகணை தடுப்பு ரேடார் ஏவப்படும் வாகனத்தில் இருந்து ஒரே நேரத்தில் எட்டு ஏவுகணைகளை அனுப்ப முடியும்.

Share
Categories
அமெரிக்கா உலகம் தென் கொரியா வட கொரியா

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து ஏவுகணைகள் வந்தால், அவற்றை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தவை.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்பிற்கான இடத்தை தென்கொரியா வழங்கும் நிலையில், அமெரிக்கா ஏவுகணை பொருட்களுக்கான செலவை ஏற்றுக்கொள்ளும்.

Share