Categories
இந்தியா உலகம் எவெரெஸ்ட் மலைச்சிகரம்

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட ஹிலாரி ஸ்டெப் அழிந்துவிட்டது

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்ட ஹிலாரி ஸ்டெப் அழிந்துவிட்டது. இதன் காரணத்தால் உலகிலேயே மிக உயரமான மலை இனிவரும் காலங்களில் மலை ஏறுபவர்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறலாம்.

கிட்டத்தட்ட செங்குத்தாக இருக்கும் இந்த 12மீ பாறை அமைப்புக்கு எவரெஸ்ட் சிகரத்தை 1953-ம் ஆண்டு முதன் முதலில் எட்டிய எட்மண்ட் ஹிலாரியின் பெயர் சூட்டப்பட்டு ‘ஹிலாரி ஸ்டெப்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்திலிருந்த ஹிலாரி முனை சேதமடைந்திருக்கலாம் என்று மலை ஏறுபவர்கள் கூறுகின்றனர்.

மலையில் தென்கிழக்கு முனையில் சுமார் 12 மீட்டர் உயரத்திற்கு பாறைகள் உடைய பகுதியாக இது இருந்தது.

மலையின் உச்சியை அடைவதற்கு இந்தப் பகுதிதான் இறுதி பெரும் சவலாக இருந்துவந்தது.

1953 ஆம் ஆண்டில் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய சர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இந்த பகுதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டிருந்தது.

Share
Categories
உலகம் வட கொரியா

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

இன்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது.

வட கொரியா ஒருவாரத்திற்கு முன்னர் ஏவுகணை ஒன்றை பரிசோதித்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.

முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அடுத்து, இந்த ராக்கெட் பெரிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கிச்செல்லும் திறன் படைத்தது என்று வட கொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்களன்று, வட கொரியா இதுபோன்ற பரிசோதனை இனிமேல் நடத்தக்கூடாது என்று ஐ.நாவின் பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்திருந்தது.

ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் அணு ஆயுதங்களை அகற்றும் உண்மையான பொறுப்புகளை உடனடியாக வட கொரியா முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

Share
Categories
ஈரான் உலகம்

ஈரான்: மீண்டும் ஹசன் ரூஹானி அதிபரானார்

ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக  தற்போதைய அதிபர் ஹசன் ரூஹானி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவான சுமார் 40 மில்லியன் வாக்குகளில், இதுவரை எண்ணப்பட்டதில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ரூஹானி பெற்றுள்ளதாகவும், சில பகுதிகளில் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தொலைக்காட்சியில் அறிவித்தனர்.

மிதவாத தலைவராக அறியப்படும் ரூஹானி உலக முன்னணி நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி இரானின் அணு திட்டங்களை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டார்.

ரூஹானியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையங்களில் ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்று ரூஹானியின் பழமைவாத போட்டியாளரான இப்ராகிம் ரைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share
Categories
அமெரிக்கா உலகம்

அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் பிடியிலிருந்த இந்தியர் மரணம்

இந்தியாவை சேர்ந்தவர் அதுல்குமார் பாபுபாய் படேல் (58). கடந்த 10-ந்தேதி இவர் ஈகுவேடார் நாட்டில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்கு விமானம் மூலம் வந்தார்.

அவரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் நுழைவதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே அவரை கைது செய்தனர்.

இதில் தேவையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருந்தது தெரியவந்தை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, நர்ஸ் ஒருவர் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது பகுபாய் படேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது . இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்தார். இதயம் செயலிழப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இவரது இறப்பு குறித்து இந்தியதூதரகம் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணை செய்ய ராபர்ட் முல்லர் நியமனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பரவலாக பாராட்டப்படுகிறது.

கடந்த வாரம், எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். அதிலிருந்து, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத்தொடங்கின.

டொனால்ட் டிரம்பின் பிரசார குழு மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான தொடர்புகள் இருந்தனவா என்பது குறித்து எஃப் பி ஐ மற்றும் நாடாளுமன்றம் ஆராய்ந்து வருகிறது.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை முடுக்கிவிட ரஷ்யா முயற்சித்ததாக அமெரிக்க புலனாய்வு முகமை நம்புகிறது.

இந்தப் புதிய நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், தன்னையும் தனது அணியினரையும் இந்த புதிய விசாரணை, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, விசாரணைக்கு வெளி நபர் ஒருவர் தலைமை வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்திருந்தது.

“எனது பிரசார அணிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த தகவலை முழுமையான விசாரணை உறுதிப்படுத்தும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய செனட் உறுப்பினரான சக் சூமர், முல்லர் இந்தப் பணிக்குப் பொருத்தமான நபர் என்று பாராட்டியுள்ளார்.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படப்போவதாகவும் முல்லர் தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Share
Categories
ஃபிரான்ஸ் உலகம்

தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங்

பிரான்சின் புதிய அதிபர் இமான்வெல் மக்ரோங், தனது புதிய அரசியல் இயக்கத்திலிருந்து ஒருவரை பிரதமர் வேட்பாளராக, முன்னிறுத்தாமல், மத்திய-வலதுசாரி அரசியல்வாதியின் பெயரை அறிவித்திருக்கிறார்.

தாராளவாத பொருளாதார கொள்கை கொண்ட, வடமேற்கு துறைமுகமான லே ஹேவ்ரேயின் மேயரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வர்டு பிலிப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்ரோங், சில காலத்திற்கு முன்பு தொடங்கிய “லா ரிபப்ளிக் என் மார்சே” கட்சிக்கு, பிற குடியரசு கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாக்களிக்க இந்த முடிவு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்ரோங்கின் புதிய கட்சி, சிறப்பான வெற்றி பெறவேண்டும்.

Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

உங்கள் கணினி இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது ?

உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும்.

இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வான்னாகிரை வைரஸால் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் இதற்கு முன்னர் நடைபெறாதது ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை அமைப்பான யூரோபோல் தெரிவித்திருக்கிறது.

எனது கணினி பாதிக்கப்பட்டுள்ளதா?

வின்டோஸ் இயங்குத்தளத்தை பயன்படுத்தி இயங்குகிற கணினிகளை மட்டுமே வான்னாகிரை வைரஸ் தாக்கியுள்ளது.

விண்டோஸ் இயங்குத்தளம் வழங்குகின்ற மென்பொருட்களின் மேம்பாடுகளை பயன்படுத்தாமலோ, மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கின்றபோது கவனமாக இல்லாமலோ இருந்தால் நீங்களும் பாதிப்படையும் ஆபத்து நிலவுகிறது.

இருப்பினும், இந்த இணைய தாக்குதலை பொறுத்த வரை வீட்டில் கணினி பயன்படுத்துவோர் மிக குறைவான ஆபத்தையே சந்திப்பதாக நம்பப்படுகிறது.

மென்பொருட்களின் மேம்பாட்டு மென்பொருட்களை, ஃபயர்வயர்கள் மற்றும் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை தரவிறக்கி கணினியில் செயல்பட வையுங்கள். மின்னஞ்சல் செய்திகளை வாசிக்கின்றபோது கவனமாக இருங்கள்.

உங்களுடைய கோப்புக்களின் இன்னொரு பதிப்பை எடுத்து வைத்துகொள்ளுங்கள். அப்படியானால், உங்களுடைய கோப்புகளில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், மீட்புத்தொகை செலுத்தாமலேயே உங்களுடைய கோப்புக்களை திறந்துவிட முடியும்.

மீட்புத்தொகை செலுத்தினாலும் உங்களுடைய கோப்புக்களை திறக்க முடியும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், இன்னொரு பதிப்பை வைத்திருப்பது நல்லது.

ரான்சம்வேரின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கும், அது நடக்க முடியாமல் போனால் செய்ய வேண்டியது என்ன? என்பதற்கான ஆலோசனைககள் (எம்எஸ்17-010) ஐக்கிய ராஜ்ஜியத்தின் இணைய பாதுகாப்பு இணையதளத்தில் உள்ளன.

Share
Categories
இணைய தாக்குதல் உலகம் தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

திங்களன்று மீண்டும் இணைய தாக்குதல் இருக்குமா ?

கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகளவில் நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள் பாதிப்படைந்த நிலையில், அடுத்து ஒரு மிகப்பெரிய இணைய தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த கணினி பாதுகாப்பு வல்லுநரான ”மால்வேர் டெக்” என்பவர், ”மற்றொரு இணைய தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமையன்று தாக்கலாம்” என்று எச்சரித்துள்ளார்.

ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தை கட்டுப்படுத்த இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினியில் பயன்பாட்டாளர்களின் தரவுகளை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இந்த வைரஸ் ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட 100 நாடுகளுக்கு பரவியது.

கணினிகளை கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், தகவல்களை கட்டுப்படுத்தும் இந்த வைரஸ், கணினியில் உள்ள தரவுகளை மீண்டும் பயன்படுத்த சுமார் 300டாலர்கள் வரை மெய்நிகர் பணமான பிட்காயின் பணத்தை செலுத்துமாறு கணினி பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று கணக்குகளை பிபிசி ஆராய்ந்த போது, அவை ஏற்கனவே கணினியை ஊடுருவியவர்களுக்கு சுமார் 22,080 பவுண்டிற்கு ஈடான தொகையை கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பெயர் வெளியிடாமல் ரகசியமாக செயல்படும் மால்வேர் டெக் எனப்படும் தீய மென்பொருள் வல்லுநர் ஒருவர், வைரஸின் பரவலை அறிய இணைய தளத்தை பதிவு செய்தததை தொடர்ந்து வைரஸ் பரவல் முடிவுக்கு வந்தது.

அந்த வல்லுநரை ‘ ஆபத்து கால நாயகன்’ என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

22 வயது நிரம்பிய வல்லுநர் பிபிசியிடம் பேசுகையில்,”தற்போது பொதுமக்கள் தங்களுடைய கணினிகளில் பேட்ச் எனப்படும் அப்டேட் மென்பொருளை உடனடியாக நிறுவ வேண்டும்.

”நாங்கள் இதை ஒருமுறை நிறுத்திவிட்டோம், ஆனால் மீண்டும் மற்றொன்று விரைவில் வரும். அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.

”இதில் நிறைய பணம் புழங்குகிறது. இதை நிறுத்துவதற்கு அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. வைரஸின் கோட்டை மாற்றி மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க பெரிய முயற்சிகள் தேவைப்படாது” என்றார்.

Share
Categories
உலகம் வட கொரியா

வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை சோதனை

வட கொரியா தனது மேற்கு கடற்கரை பகுதிக்கு அருகிலிருந்து பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வட மேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், 700 கிலோ மீட்டர் தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரியா தொடர்ச்சியான பல ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச கண்டனங்கள் மற்றும் அமெரிக்கவுடனான உறவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இரு ஏவுகணை சோதனைகளில், ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களிலே அதன் ராக்கெட்கள் வெடித்து சிதறியதால் சோதனைகள் தோல்வியில் முடிந்தன.

இந்த சமீபத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா மற்றும் ஜப்பான் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளன.

தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே-இன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தனது பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
Categories
இந்தியா இலங்கை உலகம் சீனா

இலங்கை அனுமதி மறுப்பு: சீன நீர்மூழ்கி கப்பல் கராச்சி செல்கிறது

பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்த நிலையில், தங்கள் நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சீனா அதன் நீர் மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்க ராஜபக்சே அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கவலை தெரிவித்தது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் பாகிஸ்தானின் கராச்சியை நோக்கி செல்லவிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை முன்செலுத்த வேண்டும் என முயற்சிக்கும் சீனாவின் நகர்வுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கிறது. சீன நீர்மூழ்கி கப்பலை இந்திய பாதுகாப்பு முகமைகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Share