Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்

பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியேறியது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  வியாழனன்று தன்னுடைய நிர்வாகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

“பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிக மிக நியாயமற்றது. ஆகவே நாம் வெளியேறுகிறோம்”, என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் முடிவு அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதியை பூர்த்தி செய்வதுடன், குடியரசு கட்சியினரின் உலகளாவிய காலநிலை ஒப்பந்த எதிர்ப்பினை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் உடன்பாட்டின் விமர்சகர்கள் அது பொருளாதாரத்தைப் பாதிக்குமென வாதிடுகின்றனர், ஆனால் ஆதரவாளர்கள் அது எதிர்காலத்தில் புதிதாக வேலைகளை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

“பாரிஸ் ஒப்பந்தம் நமது பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்; அது நம்மை நிரந்தரமாக அனுகூலமற்ற நிலைக்கு  உட்படுத்துகிறது.” என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் அறிவிப்பிற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.  இவ்வொப்பந்தம் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று டிரம்ப் கூறியதை மூன்று முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் மறுத்தனர்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிவை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை திரும்பப் பெற வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மற்றும் இதைத் திரும்பப் பெறுதலினால் என்ன நடக்கும் என்பது பற்றி  சில  தகவல்கள் கீழே காணலாம் :

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் என்றால் என்ன?

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்கா உட்பட ஏறக்குறைய 200 நாடுகள், 2015 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தங்கள் பசுமை இல்ல வாயு உமிழ்வை தானாக குறைப்பதற்கு ஒப்புக்கொண்டன. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் உமிழ்வு இலக்குகளை தாங்களாகவே அமைத்துக்கொள்ளலாம். எனினும், இந்த இலக்குகள் அவர்களை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாது.

அமெரிக்கா என்ன உறுதியளித்தது?

அமெரிக்கா தனது வருடாந்திர பசுமைக்குடில் வாயு உமிழ்வை 2025 – ஆம் ஆண்டில்  2005 -ல் இருந்ததைக் காட்டிலும்  26 முதல் 28 சதவிகிதம்  குறைக்க உறுதியளித்தது.  இதனால் 1.6 பில்லியன் டன் வருடாந்திர பசுமைக்குடில் வாயு உமிழ்வுகள் குறைக்கப்படும்.

உலக அளவில் கார்பன் வாயு உமிழ்வில் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், சைனா முதலிடத்திலும் இருக்கின்றன.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் எவை ?

நிகாரகுவா மற்றும் சிரியா. காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. மாநாட்டில் பங்கேற்ற 197 நாடுகளில்,   இவ்விரு நாடுகளும் கையெழுத்திடவில்லை.

இதில் டிரம்பின் நிலைப்பாடு என்ன ?

காலநிலை மாற்றம் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு சீனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு “ஏமாற்றுவித்தை” என்று பதவி ஏற்பதற்கு முன்னதாக டிரம்ப் கூறியுள்ளார். பரந்த விஞ்ஞான ஒத்துழைப்பை மீறியதாக இந்த வலியுறுத்தல் உள்ளது. டிரம்பின் கடந்த வார  வெளிநாட்டு பயணத்தின் போது, ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா இவ்வுடன்படிக்கையில் தொடரவேண்டும் என  வலியுறுத்தினர். இத்தாலியில் நடந்த G-7 உச்சி மாநாட்டின் போது, மற்ற G-7 உறுப்பினர் நாடுகளுக்கு இதுகுறித்து டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.

“அடுத்த சில நாட்களில் பாரிஸ் உடன்படிக்கையில் என் முடிவை நான் அறிவிப்பேன்,” என  டிரம்ப் புதன்கிழமை ட்வீட் செய்தார்.

அமெரிக்கா பின்வாங்கினால் என்ன அர்த்தம்?

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை நிராகரிப்பதனால் உலகின் தொழில்மயமான பொருளாதாரங்களில் ரஷ்யா மட்டுமே அமெரிக்காவுடன் இணக்கமாக காணக்கூடிய நிலை ஏற்படும் .

 

 

 

Share
Categories
ஆப்கானிஸ்தான் உலகம் காபூல்

காபூல் குண்டுவெடிப்பு: தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பு, 80 பேர் இறந்தனர், 350 பேர் காயமுற்றனர்

புதன்கிழமை காலையில் காபூலின் மிகவும் பாதுகாப்பான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை ஒரு பெரிய வெடிகுண்டு வெடிப்பு உலுக்கியது. குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்டதோடு 350 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்  தற்கொலை கார் குண்டுவீச்சினால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்குதல் நடந்த இடத்தின் அருகில் சேதமாகின.

“தற்போது இத்தாக்குதலின் இலக்கு எது என்று எமக்குத் தெரியாது, ஆனால் பெரும்பாலும் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் நஜிப் டேனிஷ் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து  அரை மைல் வரை கடைகள், உணவகங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானி இப் பாரிய தாக்குதலை கண்டனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதிகள், புனித மாதமான ரமாதானில், நன்மை, ஆசீர்வாதம், பிரார்த்தனை செய்யும் மாதம் என்றும் பாராமல் எங்கள் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்தாமல் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டர் தாக்குதல் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் மீண்டும் பகிர பிரிட்டன் ஒப்புதல்

மான்செஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐக்கிய ராஜ்யத்தின் காவல்துறை அதிகாரிகள் உளவுத்தகவல்களை அமெரிக்க அதிகாரிகளுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மான்செஸ்டர் சம்பவ விசாரணை விவரங்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு கசிந்ததை அடுத்து, ஐக்கிய ராஜ்யத்திற்கும் அமெரிக்காவுக்கும் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து புதிய உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, புலனாய்வு பகிர்வு மீண்டும் தொடங்கியது என பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் மூத்த அதிகாரியான மார்க் ரோலே தெரிவித்தார்.

முன்னதாக,அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் கசிவிற்கு பொறுப்பான தனி நபர்கள் மீது வழக்கு பதியப்படவேண்டும் என்றார். இந்த விவகாரத்தை நீதித்துறை மற்றும் பிற நிறுவனங்களின் பரிசீலனைக்கு உத்தரவிட்ட்டுள்ளதாக அவர் கூறினார்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் எகிப்து

கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கிறிஸ்துவர்கள் மீதான கொலை தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எகிப்தில் மின்யா மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் செயிண்ட் சாமுவேல் தேவலாயத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த கிறிஸ்துவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “எகிப்தில் கிறிஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டது இரக்கமற்ற தாக்குதல். ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்களுக்கு எதிராக தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகள் கிறிஸ்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களுக்கு எதிரான கொலைகள் முடிவுக்கு வர வேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும். எகிப்து மக்களுக்கு அமெரிக்கர்கள் துணை நிற்பார்கள், நமது எதிரிகளை தோற்கடிப்போம்” என்றார்.

Share
Categories
உலகம் எகிப்து

எகிப்தில் தாக்குதல் : காப்டிக் கிறிஸ்தவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்சில் துப்பாக்கிதாரிகள் சுட்டு 23 பேர் பலி

வெள்ளிக்கிழமை (இன்று) கெய்ரோவிற்கு தெற்கே காப்டிக் கிறிஸ்தவர்கள்  பயணித்துக் கொண்டிருந்த  பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன்  25 பேர் காயமடைந்தனர் என்று எகிப்திய அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

எந்தவொரு பயங்கரவாத குழுவும் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் எகிப்திய காப்டிக் கிரிஸ்துவர்கள்  ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின்  விருப்பமான இலக்காக இருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில், ஐஸிஸ் அமைப்பு வெளியிட்ட ஒரு காணொளியில்  “எகிப்திய கிறிஸ்தவர்கள்  தங்களுக்கு பிடித்த இரை” என்று கூறியிருந்தனர். டிசம்பர் மாதத்தில் கெய்ரோ தேவாலயத்தில் ஒரு 30 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரின் படத்தை இந்த வீடியோ காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் போப் பிரான்ஸிஸ் வாட்டிகன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிசுடன் சந்திப்பு

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கும் போப் பிரான்சிசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில் இன்று முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.  இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட டிரம்ப், முதல் பயணமாக  சவூதி அரேபியா சென்றார். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் தற்போது ஐரோப்பிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸும் டிரம்பும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள்  தடையற்ற  முதலாளித்துவம்  ஆகிய விவகரங்களில் டிரம்ப்- போப் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதேபோல், மரண தண்டனை, ஆயுத வியாபாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது.

போப் பிரான்ஸிஸுடான சந்திப்பின் போது அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப்  மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரும் உடன் இருந்தனர்.  போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் இத்தாலி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் நுற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிரம்ப்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

 

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டர் : மேலும் 3 பேர் கைது; பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு

பிரிட்டனின்  மான்செஸ்டரில் உள்ள அதிகாரிகள், புதன்கிழமை மேலும் மூன்று பேரை கைது செய்தனர்.   திங்கள் அன்று, அரியானா கிராண்டே கச்சேரியில் நடந்த தற்கொலை குண்டுவீச்சிற்கு பின்னர், பல சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள்  இனிவரும் அச்சுறுத்தலைத்  தடுத்து நிறுத்தும் வகையில் செயல் படுகின்றன.

குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சல்மான் அபேடி ஒரு லிபிய குடும்பத்தில் பிரிட்டனில் பிறந்தவர்; மான்செஸ்டர் தெற்கு புறநகர் பகுதியில் வளர்ந்தார். மேலும்  உள்ளூர் சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். போலிஸ் அவரது வீட்டை சோதனை செய்தனர். அண்டை வீட்டுக்காரர்கள் அவரை ஒரு உயரமான, மெல்லிய இளைஞனாக நினைவு கூர்ந்தனர். அவர் பெரும்பாலும் பாரம்பரிய இஸ்லாமிய உடை அணிந்திருந்ததாகவும், அதிகம் பேசமாட்டார் எனவும் தெரிவித்தனர்.

சல்மான் அபேடி தனியாக செயல்பட்டார் என்பது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர்.  அபேடியைப்பற்றி பாதுகாப்புப் படைகளுக்கு  ஓரளவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்த்து என்று உள்துறை செயலாளர் அம்பர் ரூட் கூறினார்.

பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் ஏற்கனவே பிரதமர்  தெரீஸா மே கூறியிருந்தார்.

பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு துணையாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராந்தெயின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.

ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : அரியானா கிராந்தெ கலை நிகழ்ச்சியில் குண்டுவெடித்து 19 பேர் மரணம்; 50 பேர் காயம்

பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியானா கிராந்தெயின் கலை நிகழ்ச்சியில் தற்கொலைத் தீவிரவாதியால் குண்டுவெடித்து 19 பேர் மரணமும் 50 பேர் காயமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் போலீஸார் இதனை பயங்கரவாத தாக்குதல் என விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Share