Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன் லண்டன் பால தாக்குதல்

லண்டன் தாக்குதல்: குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன

லண்டனில் மூன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய வேன் தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் வைத்து நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகியுள்ளனர்.

48-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில் லண்டன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் பெயர் குரம் ஷசாட் பட் (Khuram Shazad Butt) மற்றொருவரின் பெயர் ராஷித் ரெடூவன் (Rachid Redouane) இருவரும் லண்டனில் தான் வசித்து வந்துள்ளனர்.

குரம் ஷசாட் பட் பிரித்தானியாவின் குடிமகன், ஆனால் அவன் பிறந்த இடம் பாகிஸ்தான் என்றும் அதே போன்று ராஷித் லிபியாவைச் சேர்ந்தவன் என்றும் ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில் குரம் ஷசாட் பட்-க்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும்ம் அவன் லண்டனில் உள்ள KFC நிறுவனம் மற்றும் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவரான ராஷித் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்றும் அவனைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் குரம் ஷசாட் பட் பற்றி பொலிசாருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால் அவன் இது போன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபடுவான் என்று புலனாய்வுத்துறையினர் நினைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி குரம் ஷசாட் பட் தன் வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுடன் அதிகநேரம் விளையாடுவான் எனவும் அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பான் என்று கூறப்படுகிறது. ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர்களோ கடந்த சில மாதங்களாகவே குரம் ஷசாட் பட் தங்கள் குழந்தைகளிடம் முஸ்லீம் மதத்தினைப் பற்றி கூறுவான் என்றும் முஸ்லீம் மதத்திற்கு மாறும்படி கூறுவான் என்று குற்றம் சாட்டியுள்ளனர். குரம் ஷசாட் பட்-ஐ பற்றி அவனது நண்பர்கள் கூறுகையில், மிகவும் அமைதியாக இருப்பான், அனைவரிடமும் பாசமுடன் இருப்பான். உலகில் ஏதேனும் ஒரு பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டால், நாங்கள் அதைப்பற்றி விவாதிப்போம் அப்போது அவன் தீவிரவாதிகளின் செய்வது சரி தான் என்று அவர்களுக்கு சாதகமாக பேசுவான் என்று தெரிவித்துள்ளனர்.

குரம் ஷசாட் பட் கடந்த சில மாதங்களாகவே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 அதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி செய்த ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான டாக்குமெண்டரியில் குரம் ஷசாட் பட் நடித்துள்ளான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் கத்தார் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’

‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாக அறிவித்துவிட்டன.

இந்த நிலையில்தான் ட்ரம்ப், ‘நான் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றேன். அப்போது, தீவிரவாத சிந்தனை கொண்டவர்களுக்கு இனிமேலும் நிதி வழங்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினேன். இதை நான் கூறியபோது, தலைவர்கள் கத்தாரை நோக்கி கையைக் காட்டினர். தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். கத்தாரின் நிலைமையை இப்போது பாருங்கள். இதுவே தீவிரவாதத்தின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம்.’ என்று கூறியுள்ளார்.

Share
Categories
ஆப்கானிஸ்தான் உலகம் தலைப்புச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெரட் நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் 15 பேர் படுகாயம் காயமடைந்தனர்.

12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் அருகே உள்ள ஒரு பூங்காவில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானின் மற்றொரு பெரிய நகரமான ஹெரடில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் மத்திய கிழக்கு நாடுகள்

கத்தாருடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன.

சிறிய தீபகற்பமான கத்தாரோடு நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் செயல்படும் தொடர்புகளை ரியாத் மூடியுள்ளதாக சௌதி அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) தெரிவித்திருக்கிறது.

இதனை ‘நேர்மையற்ற’ முடிவு என்று குறிப்பிட்டிருக்கும் கத்தார், இதற்கு ‘எந்த அடிப்படையும் இல்லை’ என்கிறது.

அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருக்கும் சக்தி மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடையில், முக்கியமான பிளவாக இந்த எதிர்பாராத திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

வளைகுடா நாடுகளுக்கும், அவற்றின் அருகிலிருக்கும் இரானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்திருக்கும் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இரானின் ஆதரவோடு செயல்படும் ஆயுதப்படைகளோடு கத்தார் ஒத்துழைப்பதாக சௌதியின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.

திங்கள்கிழமை அதிகாலையில் கத்தாருடனுள்ள ராஜீய உறவுகளை திரும்ப பெற பஹ்ரைன் எடுத்த நடவடிக்கைக்கு பின்னர், சௌதி அரேபியவும் ராஜீய உறவுகளைத் திரும்ப பெற்றது.

இதனை தொடர்ந்து அவற்றின் நட்பு நாடுகளும் வெகுவிரைவாகவே இதே நடவடிக்கையை எடுத்தன.

“தீவிரவாதம், கடும்போக்குவாதம் போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே” இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதை சௌதியின் அரசு செய்தி நிறுவனம் (எஸ்பிஎ) மேற்கோள்காட்டியுள்ளது.

Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிலிப்பைன்ஸ்

மணிலா தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் வேலையல்ல : பிலிப்பின்ஸ் அதிபர்

மணிலா சூதாட்டக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் வேலையல்ல என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதியில் 40 பேர் இறந்தனர்.  முன்னதாக அந்தத் தாக்குதலுக்கு ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடச் செல்லவிருப்பதாகத் தெரிவித்த திரு. டுடார்ட்டே, அது ஐ. எஸ். பயங்கரவாதிகளின் செயல் அல்ல என்பது தமக்குத் தெரியும் என்றார்.

இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 40 பேரை சுட்டுக் கொன்ற நபர் யார் என்ற விபரத்தை மணிலா போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஜெசி கார்லோஸ் ஜேவியர்(42). பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளரான இவர் ஏற்கனவே பலமுறை இங்கு சூதாடி, ஏராளமான பணத்தை இழந்த வெறியில் இந்த கொலைவெறி தாண்டவத்தில் அவர் ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

சூதாடுவதற்காக நிறைய பேரிடம் பெரும் தொகையை கடனாக பெற்று அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்த விபரீத முடிவில் அவர் இறங்கியதாக ஜெசி கார்லோஸ் ஜேவியர் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

Share
Categories
இங்கிலாந்து உலகம் தலைப்புச் செய்திகள் லண்டன் லண்டன் பால தாக்குதல்

லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி : 12 பேர் கைது

லண்டன் பாலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதலுக்குப் பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.

மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் பகுதிக்குள் கத்திகளுடன் ஓடி பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை கண்டித்துள்ள பிரதமர் தெரீசா மே “இதுவரை நடந்தது போதும் என்று கூறும் நேரமிது” என்று கூறியுள்ளார்.

7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share
Categories
இங்கிலாந்து உலகம் லண்டன் லண்டன் பால தாக்குதல்

லண்டனில் தாக்குதல்கள்: லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதியது; அருகில் கத்திக்குத்து

மத்திய லண்டனில், ஒரு வாகனம் பாதசாரிகள் மீது மோதியது மற்றும் கத்திக்குத்து சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவத்திற்குப் பின்னர் ஒன்றுக்கும் அதிகமான நபர்கள் மரணம் அடைந்தனர் என்றும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரசா மே இச்சம்பவம் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றார்.

ஆயுதம் தாங்கிய போலீசார் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வாக்ஸ்ஹால் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.  மேலும் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அவர்கள் மற்றொரு தாக்குதல் சம்பவத்தையும் எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

லண்டன் பாலத்தில் தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் ஆறு பேர் மீது ஒரு வேன் மோதியதாகத் தெரிவித்தார்.

 

Share
Categories
உலகம் வட கொரியா

வட கொரியா மீதான தடைகள் மேலும் விரிவாக்கப்பட்டன

வட கொரியா இவ்வாண்டு நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு எதிரான நடவடிக்கையாக, அந்நாட்டின் மீதான தடையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விரிவாக்கியுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வட கொரிய தலைவரின் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கைகள், பயணத்தடை,  நான்கு நிறுவனங்கள் மற்றும் 14 அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இந்த தடையில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் விதிக்கப்படும் இத்தடைகள், ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெள்ளியன்று நடைபெற்ற 15 உறுப்பு நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இந்த தடை விதிக்கும் தீர்மானம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

 

 

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உலகம்

அமெரிக்காவில் நடந்த ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய சிறுமி வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய், 12, முதலிடம் பெற்றார். இவ்வகை போட்டியில், 13-வது முறையாக தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, ‘ஸ்பெல்லிங்’ சொல்லும், ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நுாற்றுக் கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான, ‘தேசிய ஸ்பெல்லிங் பீ’ போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 291 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியாக, 15 பேர் மட்டும், இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, அனன்யா வினய் மற்றும் ரோஹன் ராஜீவ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கனடாவில் வசிக்கும் அனன்யா வினய், போட்டியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவருக்கு, 26 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடக்கும் இந்த போட்டியில், தொடர்ந்து, 13வது முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுவாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அதிகமாகப் படித்தவர்களாகையால், தங்கள் குழந்தைகளை இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கின்றனர். இருப்பினும், அமெரிக்க விளையாட்டுத் துறையில் இவர்களின் பங்கு வெகு குறைவே. இந்தியக் குழந்தைகள் கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற அமெரிக்க விளையாட்டுகளான பேஸ்பால், அமெரிக்கன் புட்பால் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
Share
Categories
அமெரிக்கா உலகம் ரஷ்யா

குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, எல்லாம் வெறும் ஊகங்களே : அமெரிக்க தேர்தலில் எவ்வித குறுக்கீடும் இல்லையென மறுக்கிறார் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். “அதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் கூறினார்.

தூய பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில், விளாடிமிர் புடின் கூறியதாவது :

ரஷ்ய தலையீடு குறித்த குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, மிஞ்சுவது வெறும் ஊகங்களேயன்றி வேறெதுவும் இல்லை.  இப்பயனற்ற, தீங்கு விளைவிக்கும்  வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் அவர் கூறுகையில் “இவ்வதந்திகள் சர்வதேச உறவுகளையும், உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியவற்றை சேதப்படுத்தும். நாம்  சரியான  ஒரு கூட்டணியைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.” என்றார்.

“ரஷிய ஹேக்கர்களுடையதாக கூறப்படும் இன்டர்னெட் ஐ.பி. முகவரிகள் மிக எளிதாக தில்லுமுல்லு செய்து மாற்றப்படக்கூடியவையாகும். ஒரு 3 வயது குழந்தையால் அதைச் செய்ய முடியும். ஆகவே, அதையெல்லாம் ஆதாரமாக ஏற்க முடியாது.” என்றும் விளாடிமிர் புடின் கூறினார்.

 

Share