Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிலிப்பைன்ஸ் வட கொரியா

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார்.

மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும்  தெரிவித்துள்ளார்.

கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் போரால் பூமியைப் பாழ்படுத்தப் போவதைத் தடுத்தாக வேண்டும். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் இந்த அழிவால் மண் வளங்கள் வீழ்ச்சியடையும். இதனால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் கிம் ஜோங் உன்னை குறிப்பிட்டு, ரோட்ரிகோ டுடெர்டே விமர்சித்துள்ளார்.

Share
Categories
உலகம் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அரசு ஆதரவு படைகளுடன் சண்டையிட்டனர். அப்போது, அரசு ஆதரவு படைகளை திசை திருப்பும் வகையில் அங்குள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் சிலரும் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் அவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Share
Categories
உலகம் தலைப்புச் செய்திகள் பிலிப்பைன்ஸ்

மணிலா தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் வேலையல்ல : பிலிப்பின்ஸ் அதிபர்

மணிலா சூதாட்டக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஐ. எஸ். பயங்கரவாத அமைப்பின் வேலையல்ல என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து ரெசார்ட்ஸ் வேர்ல்ட் மணிலா என்னும் அந்த சூதாட்ட விடுதியில் 40 பேர் இறந்தனர்.  முன்னதாக அந்தத் தாக்குதலுக்கு ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடச் செல்லவிருப்பதாகத் தெரிவித்த திரு. டுடார்ட்டே, அது ஐ. எஸ். பயங்கரவாதிகளின் செயல் அல்ல என்பது தமக்குத் தெரியும் என்றார்.

இந்த கொடூர தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 40 பேரை சுட்டுக் கொன்ற நபர் யார் என்ற விபரத்தை மணிலா போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரின் பெயர் ஜெசி கார்லோஸ் ஜேவியர்(42). பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அதே சூதாட்ட விடுதியின் நிரந்தர வாடிக்கையாளரான இவர் ஏற்கனவே பலமுறை இங்கு சூதாடி, ஏராளமான பணத்தை இழந்த வெறியில் இந்த கொலைவெறி தாண்டவத்தில் அவர் ஈடுபட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

சூதாடுவதற்காக நிறைய பேரிடம் பெரும் தொகையை கடனாக பெற்று அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்த விபரீத முடிவில் அவர் இறங்கியதாக ஜெசி கார்லோஸ் ஜேவியர் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

Share
Categories
உலகம் பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர அதிர்வை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸ் மிகவும் வித்தியாசமான தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுவது மிகவும் வழக்கமான விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டரில் 7.7 என்ற அளவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share