Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டர் தாக்குதல் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் மீண்டும் பகிர பிரிட்டன் ஒப்புதல்

மான்செஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐக்கிய ராஜ்யத்தின் காவல்துறை அதிகாரிகள் உளவுத்தகவல்களை அமெரிக்க அதிகாரிகளுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மான்செஸ்டர் சம்பவ விசாரணை விவரங்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு கசிந்ததை அடுத்து, ஐக்கிய ராஜ்யத்திற்கும் அமெரிக்காவுக்கும் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து புதிய உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, புலனாய்வு பகிர்வு மீண்டும் தொடங்கியது என பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் மூத்த அதிகாரியான மார்க் ரோலே தெரிவித்தார்.

முன்னதாக,அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் கசிவிற்கு பொறுப்பான தனி நபர்கள் மீது வழக்கு பதியப்படவேண்டும் என்றார். இந்த விவகாரத்தை நீதித்துறை மற்றும் பிற நிறுவனங்களின் பரிசீலனைக்கு உத்தரவிட்ட்டுள்ளதாக அவர் கூறினார்.

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டர் : மேலும் 3 பேர் கைது; பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை உச்சபட்சமாக அதிகரிப்பு

பிரிட்டனின்  மான்செஸ்டரில் உள்ள அதிகாரிகள், புதன்கிழமை மேலும் மூன்று பேரை கைது செய்தனர்.   திங்கள் அன்று, அரியானா கிராண்டே கச்சேரியில் நடந்த தற்கொலை குண்டுவீச்சிற்கு பின்னர், பல சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள்  இனிவரும் அச்சுறுத்தலைத்  தடுத்து நிறுத்தும் வகையில் செயல் படுகின்றன.

குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சல்மான் அபேடி ஒரு லிபிய குடும்பத்தில் பிரிட்டனில் பிறந்தவர்; மான்செஸ்டர் தெற்கு புறநகர் பகுதியில் வளர்ந்தார். மேலும்  உள்ளூர் சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். போலிஸ் அவரது வீட்டை சோதனை செய்தனர். அண்டை வீட்டுக்காரர்கள் அவரை ஒரு உயரமான, மெல்லிய இளைஞனாக நினைவு கூர்ந்தனர். அவர் பெரும்பாலும் பாரம்பரிய இஸ்லாமிய உடை அணிந்திருந்ததாகவும், அதிகம் பேசமாட்டார் எனவும் தெரிவித்தனர்.

சல்மான் அபேடி தனியாக செயல்பட்டார் என்பது சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர்.  அபேடியைப்பற்றி பாதுகாப்புப் படைகளுக்கு  ஓரளவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்த்து என்று உள்துறை செயலாளர் அம்பர் ரூட் கூறினார்.

பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான அளவு உச்சபட்சமாக நெருக்கடி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும், மேலும் உடனடி தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் ஏற்கனவே பிரதமர்  தெரீஸா மே கூறியிருந்தார்.

பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கு துணையாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராந்தெயின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.

ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Share
Categories
இங்கிலாந்து உலகம் மான்செஸ்டர்

மான்செஸ்டரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : அரியானா கிராந்தெ கலை நிகழ்ச்சியில் குண்டுவெடித்து 19 பேர் மரணம்; 50 பேர் காயம்

பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியானா கிராந்தெயின் கலை நிகழ்ச்சியில் தற்கொலைத் தீவிரவாதியால் குண்டுவெடித்து 19 பேர் மரணமும் 50 பேர் காயமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் போலீஸார் இதனை பயங்கரவாத தாக்குதல் என விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.

Share