Categories
ஆப்கானிஸ்தான் உலகம் தலைப்புச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஹெரட் நகரில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே இன்று குண்டு வெடித்தது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் 15 பேர் படுகாயம் காயமடைந்தனர்.

12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ஜமா மஸ்ஜித் அருகே உள்ள ஒரு பூங்காவில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.
இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானின் மற்றொரு பெரிய நகரமான ஹெரடில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
Share
Categories
ஆப்கானிஸ்தான் உலகம் காபூல்

காபூல் குண்டுவெடிப்பு: தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் குண்டுவெடிப்பு, 80 பேர் இறந்தனர், 350 பேர் காயமுற்றனர்

புதன்கிழமை காலையில் காபூலின் மிகவும் பாதுகாப்பான வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியை ஒரு பெரிய வெடிகுண்டு வெடிப்பு உலுக்கியது. குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்டதோடு 350 பேர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்  தற்கொலை கார் குண்டுவீச்சினால் ஏற்பட்டதாக நம்பப்படுவதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். 30 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்குதல் நடந்த இடத்தின் அருகில் சேதமாகின.

“தற்போது இத்தாக்குதலின் இலக்கு எது என்று எமக்குத் தெரியாது, ஆனால் பெரும்பாலும் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் நஜிப் டேனிஷ் தெரிவித்தார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து  அரை மைல் வரை கடைகள், உணவகங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானி இப் பாரிய தாக்குதலை கண்டனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதிகள், புனித மாதமான ரமாதானில், நன்மை, ஆசீர்வாதம், பிரார்த்தனை செய்யும் மாதம் என்றும் பாராமல் எங்கள் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்தாமல் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

Share
Categories
அமெரிக்கா ஆப்கானிஸ்தான் உலகம்

தனது மரணத்தை தானே படமெடுத்த பெண் புகைப்படக் கலைஞர்

அமெரிக்க ராணுவப் புகைப்படக் கலைஞர் ஒருவர் , ஆப்கானிஸ்தானில்  குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு ஆஃப்கானியர்களுடன் கொல்லப்பட்டார். அவர் தனது மரண தருணத்தை  தானே  எடுத்த புகைப்படத்தை  அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
2013 ஜூலை 2 ஆம் தேதியன்று, மோர்டார் ஷெல் குண்டு ஒன்று வெடித்ததில் 22 வயதான வல்லுநர் ஹில்டா கிளேய்டன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த நான்கு படையினர் பலியானார்கள்.

புகைப்பட இதழியல் குறித்து கிளேய்டன் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆஃப்கனிஸ்தானை சேர்ந்த ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருந்தது.

பலியானவர்களில் அவரும் ஒருவர். கிழக்கு மாகாணமான லக்மானில் இந்த விபத்து ஏற்பட்டது.

`மிலிட்டரி ரிவ்யூ` என்ற சஞ்சிகை இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிளேய்டன் குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Share