Categories
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா தலைப்புச் செய்திகள் வங்கி வர்த்தகம்

லாக்கரில் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் பேங்க்

வங்கிகளில் உள்ள லாக்கரில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைத்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு வேளை அவை திருட்டு போய்விட்டால், வங்கி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று விடும் என்றும் பொதுமக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மையல்ல, வங்கிகள் அதற்கு பொறுப்பு ஏற்காது என்ற கசப்பான உண்மை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வக்கீல் குஷ் கல்ரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கியும், 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை பொதுத்துறை வங்கிகள் துறப்பதையே அது காட்டியது.

இந்தப் பதில்,  வக்கீல் குஷ் கல்ராவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதையடுத்து அவர் சி.சி.ஐ. என்னும் இந்திய போட்டி ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில் அவர்,  “வங்கிக்கு வாடிக்கையாளர் வாடகை கொடுத்து லாக்கரில் விலை உயர்ந்த பொருட்களை வைத்தும், அவற்றுக்கான பொறுப்பை வங்கி ஏற்காதபோது, அதற்கு பதிலாக விலை உயர்ந்த பொருட்களை காப்பீடு செய்து விட்டு, அவற்றை வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே?  வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற வி‌ஷயங்களில் வங்கிகள் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.  லாக்கர் சேவையில் வங்கிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவது பற்றி போட்டி சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் வங்கி வர்த்தகம்

பணமதிப்பு நீக்கத்தால் வங்கித்துறைக்கு கடும் இழப்பு: பாரத ஸ்டேட் வங்கி

சென்ற ஆண்டு நவம்பர் மாத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

இந்த நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறையில் நீண்ட கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.15,000 கோடி மதிப் புள்ள பங்குகளை விற்பதற்கான நிறுவன முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஸ்டேட் வங்கி  இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக வங்கிகள் மற்றும் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு மற்றும் இதர வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பணமதிப்பு நீக்க முடிவால் நிலையில்லாத் தன்மை ஏற்பட் டுள்ளது. வங்கித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக முதலீட்டாளர்களிடம் விளக்கி யுள்ளது. மேலும் பணமதிப்பு நீக்கத்தால் தொடர்ந்து இந்திய பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இதனால் வங்கித் துறை கடுமையாக பாதிக்கப் படலாம் எனவும் கூறியுள்ளது.

Share