Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி காரணம் – உ.பி.-யில் ரயில் விபத்து: 23 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியும்,  72 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதல்கட்ட விசாரணையில், விபத்திற்கான காரணம் தெரியவந்துள்லது. ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றதைக் குறித்து உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கப்படாததால், இவ்விபத்து நேரிட்டது என  தெரியவந்து உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. விபத்தில் 23 பேர் பலியானார்கள். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு,  காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும்,
இந்த விபத்தில் உயிரிழந்தவரிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிதி உதவி அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள்

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததன் நிமித்தம், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் செய்திகளில் அடிபடும் ஒன்றாக விளங்குகிறது.

இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது தெரிந்த பின்னரும் மருத்துவமனை அதிகாரிகள் கூடுதலான ஆக்ஸிஜனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30 என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், உள்ளூர் செய்தித்தாள் இறந்தோரின் எண்ணிக்கையை 50 என்று குறிப்பிட்டுள்ளது.

இதேவேளையில், குழந்தைகளின் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுத்துள்ளது. ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானவை என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வருவதற்கு கட்டணம் செலுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் கடிதத்தை ஆக்ஸிஜன் விநியோக நிறுவனம் பிஆர்டி மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கு எழுதியுள்ளது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய அரசு அறிவிப்பின்படி, பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையின் முதல்வர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ஸிஜன் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதை அரசு ஒத்துக்கொண்டாலும்,  குழந்தைகள் இறப்பிற்கு அது காரணமில்லை என்றும் உ.பி. சுகாதார அமைச்சர் சிதார்த் நாத் சிங் கூறியுள்ளார்.  இருப்பினும், உயிர்காக்கும் ஆக்ஸிஜன் 2 மணி நேர அளவில் நிறுத்தப்பட்டால் அது செலுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள் நிலை பாதிக்கப் படாதா என்பதற்கு அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்படவில்லை.

இம்மருத்துவமனை, உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியில் அமைந்துள்ளது. முதல்வரின் தொகுதியிலுள்ள மருத்துவ மனையிலேயே இப்படியென்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என பலரும் கேட்கின்றனர்.

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள்

ரயிலில் வழங்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் பல்லி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த பூர்வா விரைவு ரெயிலில்  பரிமாறப்பட்ட உணவில் பல்லி கிடந்தது பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே உணவுகள் தரமற்றவையாக இருப்பதாக, சென்ற வாரம் கணக்குத் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் – சந்தவ்லியில், பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ரயிலில் வாங்கிய பிரிஞ்சியில் பல்லி விழுந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பயணி ரயில்வே அமைச்சருக்கு டிவிட்டர் மூலம் புகார் அனுப்பினார். அதில் அவர் அந்த உணவை கவனிக்காமல் உண்டுவிட்டதால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ரெயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டதையடுத்து ரயில்வே அதிகாரிகள் அந்தப் பெட்டிக்கு அனுப்பப்பட்டு தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள் பா.ஜனதா

உ.பி.-யில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி இடமாற்றம்

உத்தரபிரதேசத்தில் பாஜகவினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த காவல்துறை பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


உத்தரப்பிரதேச மாநிலம் சாயானா சர்க்கிள் பகுதியை சேர்ந்த, ஸ்ரேஷ்டா தாகூர், புலந்ஷாஹர் பகுதியில் காவல் அதிகாரியாக பணியாற்றினார். ஆவணங்களின்றி வாகனம் இயக்கியதாக எழுந்த புகாரில், பாஜக தொண்டர் ஒருவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

இதையடுத்து, பெண் காவல் அதிகாரியை முற்றுகையிட்ட பாஜகவினர் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்யப்பட்ட நிலையில், மேலிட உத்தரவின் பேரில் அந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சியனா சர்க்கிள் பகுதியில் பணி புரிந்து வந்த அவர் பஹ்ரைச் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட 234 அதிகாரிகளின் பட்டியலை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி தாக்கூர் கூறுகையில், “என்னுடைய இடமாற்றம் வழக்கமானது அல்லது அரசியல் என்று எதுவும் என்னால் சொல்ல முடியாது. ஆனால் உண்மை என்னவெனில், என்னுடைய சக பேஜ் அதிகாரிகள் யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் மாநிலங்கள்

யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் : காங்கிரஸ்

உத்தரப் பிரதேசத்தில், தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த சமுதாயத்திடம் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குஷிநகர் மாவட்டம் மனிப்பூர் தீனாபட்டி கிராமத்துக்கு கடந்த வியாழக்கிழமையன்று சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் முஷார் தலித் குடும்பத்தினரை அவர் சந்தித்தார். ஆனால், அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது முன்னதாக முஷார் தலித் குடும்பத்தினரிடம் சோப்பு மற்றும் ஷாம்பூ வழங்கிய  அதிகாரிகள் கூட்டத்துக்கு பங்கேற்க வருவதற்கு முன்பு குளித்து விட்டு வர வேண்டும் என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கிய விவகாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். குறைந்த பட்ச தீண்டாமை நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜ தலைவர்கள் அந்த கிராமத்தின் அனைத்து சமுதாய மக்களையும் அவமானப்படுத்தி விட்டனர். இது அதிர்ச்சியான தீண்டாமை செயல். இவ்வாறு அவர் கூறினார்.

Share
Categories
இந்தியா உத்தர பிரதேசம் மாநிலங்கள்

உத்திரபிரதேசத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

உத்திரபிரதேசத்தில் லோகமான்யா திலக் அதிவிரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உன்னாவு ரயில் நிலையம் அருகே ரயில் தடம்புண்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை இந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share