Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.

பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார்.

பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி நாங்கள் பேசினோம். இவ்விஷயத்தில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஒழிப்பு ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.

இச்சந்திப்பின் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவரான சையத் சலாஹூடினை ஒரு உலகளாவிய பயங்கரவாதி என்று அமெரிக்க அரசுத்துறை அறிவித்தது. இதன் மூலம், பாக்கிஸ்தானில் இருந்து வெளிவரும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நிலைப்பாட்டை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.

 

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

நேற்று காலை அமெரிக்கா வந்தடைந்த மோடிக்கு, தலைநகர் வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோடியைக் குறித்து,  ‘உண்மையான நண்பருடன் இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து பேச அவரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறேன்’ என  டிவிட்டரில் பதிவிட்டார்.


பயணத்தின் முதல் நாளான நேற்று, அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை மாநாட்டில் மோடி பங்கேற்றார். இதில், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக், வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Share
Categories
இந்தியா தலைப்புச் செய்திகள் பிரதமர் மோடி

மோடியின் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியும் இந்திராவின் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியும்

இந்தியப் பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில், நேற்று உரையாற்றும்போது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி நிலையை இந்தியர்கள் யாரும் மறக்கமாட்டார்கள் என்றும், அது கருப்பு நாள் என்றும்” தெரிவித்துள்ளார்.

மேலும், மோடி பேசுகையில், 1975ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, எமர்ஜென்சி நிலையை கொண்டுவந்தபோது, மக்கள் தான் ஜனநாயகத்தை பாதுகாத்ததாக தெரிவித்துள்ளார்.

மோடியின் இப்பேச்சுக்குப் பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாம் வேதக்கான்,  “ஆம், நாம் எமர்ஜென்சியை மறந்துவிட்டோம், ஆனால் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையானது நாட்டில் நிலவுகிறது. மீடியாக்கள் இலக்காக்கப்படுகிறது, மீடியாக்கள் மீது சோதனைகள் நடக்கிறது, இவைகளை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில்தான் பட்டியலிட முடியும்,” என தெரிவித்துள்ளார்.

Share
Categories
அ.தி.மு.க. தமிழகம் நமது எம்ஜிஆர் பிரதமர் மோடி

மோடியின் ஆட்சியைப் பற்றி அ.தி.மு.க. அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல் வெளியான கவிதை

மோடியின் மூன்று ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான “நமது எம்ஜிஆர்”-ல்  ஒரு  கவிதை வெளியானது.  அது குறித்து தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டபோது அதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார்.  ஆனால் நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் இதைப்பற்றி கூறுகையில் “ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவிரும்பலாம். ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை” என்றார்.

மோடியின் ஆட்சியைப் பற்றிய அந்த கவிதை :

 

மோடி அரசின் மூன்றாண்டு !
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?

டிஜிட்டல் இந்தியா….
மேக் இன் இந்தியா…
கிளீன் இந்தியா… என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?

சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை…
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்…
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?

ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு…
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு…
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு…
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு…

வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு !

ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு !

 

Share
Categories
இந்தியா பிரதமர்

சுற்றுப்பயணம்: ஜெர்மனி சென்றடைந்தார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு இன்று சுற்றுப் பயணம் கிளம்பினார்.

இந்தியாவின் பொருளாதார ரீதியிலான பங்கேற்புகளை அதிகரிக்கவும், நாட்டிற்கு அந்நிய முதலீடுகளைக் கொண்டுவரவும் 6 நாட்கள் அரசு முறை பயணமாக மோடி கிளம்பியுள்ளார். முதலில் ஜெர்மனி செல்லும் அவர், அந்நாட்டின் தலைவர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்து சர்வதேச மற்றும் வட்டார ரீதியிலான வளர்ச்சி குறித்து விவாதிக்கிறார். இதில் இந்தியாவுக்கு ஜெர்மனிக்கும் இடையேயான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகள் குறித்து உரையாடுகிறார். மேலும் ஜெர்மனியின் அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மெரையும் சந்திக்கிறார்.

Share