Categories
இந்தியா ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்

இலவச ஜியோஃபோன்: ரூ.1500 டிபாசிட், ரூ.153 மாதக்கட்டணம், வாட்ஸப் இல்லை

ரூ.1500 டிபாசிட்டுடன் இலவசமாக ஜியோ ஃபோன்  என்ற அதிரடி அறிவிக்கை ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் மூகேஷ் அம்பானியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதக்கட்டணமாக ரூ.153 செலுத்தினால் போன்கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்மார்ட் போனில் ஜியோ அப்ளிகேஷன்களான ஜியோ சினிமா, ஜியோ மியூசிக் உள்ளிட்டவை முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும், பயன்பாட்டாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் வாட்ஸப் வசதி தற்போது அந்த ஃபோனில் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் தினசரி 4G டேட்டா  500MB அளவுக்குமேல் கிடைக்காது.  இதர வசதிகளாவன :  நம்பர் கீபேடுகள், 2.4 இன்ச் டிஸ்பிளே, எஃப் எம் ரேடியோ, டார்ச் லைட்டு, ஹெட்ஃபோன் ஜேக், எஸ்டி கார்டு ஸ்லாட்டு, 4 வழி நேவிகேஷன் சிஸ்டம், தொலைபேசி எண் சேகரிப்புகள், தொலைபேசி பதிவுகள், ஜியோ செயலிகள் இடம்பெற்றிருக்கும்.

ரூ.309 மாதக்கட்டணத்தில் ஜியோ ஃபோன் கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஃபோன் கேபிள் டிவிடியை ஸ்டார்ட் டிவி மட்டுமல்லாது எந்த டிவியில் வேண்டுமானாலும் பொருத்திவிட்டு 3 முதல் 4 மணி நேரத்திற்கு பெரியத்திரையில் தங்கள் விருப்ப வீடியோவை பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பாகும்.

டிபாசிட் தொகையான ரூ.1500  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப கிடைக்கும். மேலும் இதற்கான முன்பதிவானது ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் செப்டம்பர் 2017ல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியா உலகம் ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம்

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம்

நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ்,  விசா மீறல் வழக்கில்  $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது.

அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும்,  வரி செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

நிறுவனங்கள்  நியூயார்க் மாகாணத் தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக, எங்கள் சட்டங்களை மீறி நடக்க அனுமதிக்க மாட்டோம்.  தொழிலாளர்  சந்தை  நியாயமானதாகவும், நேர்மையான போட்டித்தன்மை உடையதாகவும், அனைவருக்கும் வெளிப்படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு எனது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ல விவரப்படி, இன்போசிஸ் பணியாளர்களுக்கு B-1 விசாக்களைப் பெற்றுள்ளது. இது H-1B வேலை அனுமதிக்கு பதிலாக தற்காலிக பார்வையாளர் விசாக்கள் ஆகும். பார்வையாளர் விசாக்கள் மிகவும் எளிதாகப் பெறலாம்;  H-1B விசாக்களுக்கு  65,000 உச்ச அளவு இருப்பதுபோல B-1 விசாக்களுக்குக் கிடையாது.

 

 

Share
Categories
இந்தியா ஐ.டி. தகவல் தொழில்நுட்பம் தொழில் நுட்பம்

விப்ரோ : 2-வது முறையாக மிரட்டல் மெயில்

பெங்களூரு விப்ரோ நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாக ரூ.500 கோடி பிட்காயின் கேட்டு மிரட்டல் மெயில் வந்துள்ளது. அதில் 72 மணி நேரத்துக்குள் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் அசம்பாவிதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல் மிரட்டல் வந்த ஒரு மாதத்துக்குள்ளாக, மீண்டும் இந்த மெயில் வந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.பி. முகவரியில் இருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது போலியான முகவரியாகவும் இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைம் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 5-ம் தேதியும் அதே மெயில் ஐடியில் இருந்து மிரட்டல் வந்திருந்தது. அப்போதும் ”ரூ.500 கோடி பிட்காயின்களை அனுப்பவேண்டும். தவறினால் இயற்கை நச்சு மற்றும் ரிசின் நச்சுகளை உணவகங்கள், குடிநீர்க் குழாய்கள் வாயிலாகக் கலந்துவிடுவோம்” என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share