Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன்

பொதுவாக முற்றத்தில் வளரும் களைச் செடியான டான்டேலியன் அதன் மருத்துவ குணங்களால் பண்டைக்காலத்திலிருந்தே
ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஹோமியோ மருத்துவத்தில் இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் (Diuretic -சிறுநீர்ப் பெருக்கி)ஆக உபயோகப்படுத்தப் படுகிறது.

கல்லீரல் மற்றும் பித்த கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களையும் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த இயற்கை மூலிகையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துமூலிகை தேநீராக குடிப்பதால் மலச்சிக்கலை குணமாக்க முடியும். டன்டேலியன் தேநீர், ஒரு லேசான மலமிளக்கியாகவும், நீர்ப்பிடிப்புக்கான ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படலாம். குடலின் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கவும் பயன்படுகிறது.


Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் உடல்நலம் மூலிகைகள்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன.

சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea)

மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த,  சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து  உடனடி நிவாரணம் வழங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மருந்துக் கடைகளில் பிரஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும் இம்மூலிகையில், “சென்னா க்ளைஸ்கோசைட்ஸ் அல்லது சென்னோசைட்ஸ்” எனப்படும் சேர்மங்கள் உள்ளன. அவற்றின் வலிமையான இயற்கை மலமிளக்கி விளைவுகள் காரணமாக,  நவீன மருத்துவத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

சென்னா மூலிகை தேநீர், ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்படக்கூடாது. அப்படி இரு வாரங்களுக்கு மேலாக உட்கொள்ளப்பட்டால், பல்வேறு பக்க விளைவுகள் உருவாக வழிவகுக்கும்.

 

Share
Categories
உடல்நலம் சிறப்புச்செய்தி மருத்துவ ஆய்வு மூலிகைகள்

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

புற்றுநோய் என்பது என்ன ?

உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

செல்கள் எதனால் இயல்புக்கு மாறாக கட்டுப்பாடின்றி பிரியத் துவங்குகிறது என்பது இதுவரைத் துலக்கமாக கண்டறியப்படவில்லை. ஆனால் மரபியல், சுற்றுச்சூழல் அசுத்தங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் ஆகியன முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும். புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

பசுமை கீமோதெரப்பி

இவற்றுள், கீமோதெரப்பியில் தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த சக்திவாய்ந்த கலவைகள் பொதுவாக விரைவாக பிரியும் செல்களைத் தாக்குகின்றன. இந்த டாக்ஸின்கள் பொதுவாக புற்றுநோய் கழலைகளை இலக்காகக் கொண்டிருந்தாலும்,  சிலசமயம் முடியை உருவாக்கும் சுரப்பிகளைப் போன்ற நல்ல செல்களையும் தாக்குகின்றன, இதனால் தற்காலிக முடி இழப்பு ஏற்படுகிறது.

பசிபிக் யூ (Pacific yew) என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பக்ளிடேக்ஸெல் (Paclitaxel – Taxol) என்ற  கருப்பை புற்றுநோயைக் குணப்படுத்தப்  பயன்படுத்தப்படும் மருந்து உருவாக்கப்படுகிறது. இம்மருந்து புற்றுநோய் செல்களின் விகிதங்களை வெகுவாக குறைக்கிறது.  வட அமெரிக்காவில் கிடைக்கும், அமெரிக்கன் யூ-வும் (taxus canadensis) பக்லிடாக்சல் மருந்து உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

 

ரோசி பெரிவிங்கிள் (rosy periwinkle) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுக் வின்கிரிஸ்டைன் (Vincristine)   மற்றும் வின்பிளஸ்டைன் (vinblastine) மருந்துகள்  குழந்தை பருவ லுகேமியா (leukemia) சிகிச்சையில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

சீனாவில் வளரும் “ஹேப்பி ட்ரீ” (கேம்ப்டொத்கா அகுமினாட்டா), என்ற மரத்திலிருந்து எடுக்கப்படும்  காம்ப்டோடைசின் (Camptothecin) என்ற மருந்து சீனாவில் இரைப்பை குடல் புற்றுநோயைப் பயன்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

 

 

 

மேலும் மேயாப்பிள்(mayapple) என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் காட்டு மலர் விரைவில் நுரையீரல் மற்றும் விரைப் புற்றுநோய்களுக்கான, தற்போது சோதனையிலுள்ள  எடோபாஸைடு (etoposide) என்ற மருந்துக்குத் தேவையான பாடோபிளைலோடாக்சினை (podophyllotoxin) உருவாக்க பயன்படுகிறது.

தொடரும்

 

Share
Categories
ஆரோக்கியம் உடல்நலம் மருத்துவ ஆய்வு

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.

தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 % குறைவாக உள்ளதாகவும், தினமும் இரண்டு கப் காபி குடிப்பவர்களுக்கு இது 18 % குறைவென்றும் மேற்படி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்விகிதங்கள் சாதாரண காபி குடிப்பவர்களுக்கும், கஃபீன் நீக்கப்பட்ட காபி (decoffeinated coffee) குடிப்பவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான ஆராய்ச்சியாளர் வெரோனிக்கா செட்டியவான் (Veronica W. Setiawan). இவர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள (USC) கெக் மருத்துவக் கல்லூரியில் (Keck School of Medicine) பேராசிரியராக பணிபுரிகிறார். இவர்களின் ஆய்வுக்கட்டுரை அன்னல்ஸ் ஆஃப் இண்டர்ணல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற மருத்துவ இதழில் ஜூலை 11 -ல் வெளியிடப்படுகிறது.

பல்வேறு மக்களினங்களைச் சார்ந்த, 45 லிருந்து 75 வயதிற்குள்ளான, ஏறத்தாழ 215,000 பேரிடம் நடத்தப் பட்ட இந்த ஆய்வில், உணவுப்பழக்கங்கள், வாழ்க்கைமுறை, குடும்பம் மற்றும் அவர்தம் மருத்துவ வரலாறு குறித்த கேள்வித்தாள்கள் கொடுக்கபட்டு அவற்றிற்கான பதில்களை அதில் குறித்தபின் ஆய்வாளர்கள் அவற்றை  திரும்பப் பெற்றனர். இதுபோல ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும்  கேள்வி-பதில் நிரப்புதல் தொடர்ந்தது. இப்படி நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நபரிடமிருந்து தோராயமாக 16 வருடம்  காலம் பதில்கள் பெறப்பட்டன. இந்த ஆய்வுக் காலத்தில், ஆய்வில் பங்கேற்றவர்களில்  58,397 பேர் இறந்திருந்தனர். அவற்றுள் இதய நோயினால் 36 % -ம் , புற்றுநோயினால் 31 % இறந்தனர்.

காபி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

“காபியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (antioxidants), ஃபினோலிக் சேர்மங்களும் (phenolic compounds) இருப்பதால், புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.” என்று ஆராஅய்ச்சியாளர் செட்டியவான் கூறினார். மேலும்,  “இந்த ஆய்வில் காபியில் உள்ள எந்த இரசாயனங்கள்  “நல்ல விளைவை” உருவாக்குகின்றன என்பதைக் காட்டவில்லையென்றாலும், காபியை ஆரோக்கியமான உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் இணைக்க முடியும் என்பது தெளிவு.” என்றும் கூறினார்.

இதுபோல வேறு சில ஆய்வாளர்கள் காபியினால் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆயினும் சூடான காபி அல்லது வேறு சூடான பானங்களால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகலாம் என உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) ஆய்வாளர்கள் முன்பு தெரிவித்திருந்தனர்.  அனால் கடந்த 25 வருடங்களாக காபி சிறுநீர்ப்பை புற்றுநோய் உருவாக்கும் காரணியாக காட்டப்பட்டிருந்தாலும்,  தற்போது உலக சுகாதார நிறுவனம், காபி  கல்லீரல் மற்றும் கருப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஆகவே காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது மிகவும் நல்லதே.

 

 

Share
Categories
ஆரோக்கியம் தமிழகம் மருத்துவ ஆய்வு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது.

2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015ம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 நாடுகளில் ஜிகா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெட்றாபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. ஜிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞர் சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறிவருகிறார். பாதிக்கப்பட்டவரின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Share
Categories
அறிவியல் ஆரோக்கியம் மருத்துவ ஆய்வு

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து  எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக  காட்ட்ப்பட்டுள்ளது.  மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது.

எது உண்மை ?

ஆஸ்திரேலியாவின் ஒரு பிராந்தியத்தில் மட்டும் காணப்படும் புஷ்வுட் பெரியிலிருந்து, EBC-46 என்ற ஒரு ரசாயனத்தை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த ரசாயனத்தை  நேரடியான ஊசி மூலம் எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் குதிரைகளில் பரிசோதித்த போது, அவற்றின்  புற்றுநோய் கட்டிகளை இந்த ரசாயனத்டினால் அழிக்கும்  திறனைப் பற்றிய முதல் படியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். தற்போது விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இந்த ரசாயனத்தை குறித்த மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன .

எது பொய் ?

புற்றுநோய் என்பது பல்வேறு வகையான நோய்களைப் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொல். எல்லா வகை புற்றுநோய்களையும் ஒரே மருந்தால் குணப்படுத்த முடியாது.   ஆஸ்திரேலிய புஷ்வுட் பெர்ரியில் காணப்படும்  குறிப்பிட்ட EBC-46 என்ற ரசாயனப்பொருள்,  ஆய்வகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, சில வகை புற்றுநோய்க் கட்டிகளை விலங்குகளில் குணப்படுத்துவதாக, ஆய்வுக்கூட  பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இதனால் புஷ்வுட் பெரியின் மருத்துவ மதிப்பு கூடுவதாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், புஷ்வுட் பெரியை சாதாரணமாக சாப்பிடுவதானால், அதிலுள்ள பிற பொருட்களால் உடல் நலம் பாதிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த EBC-46 என்ற ரசாயனப்பொருள் இன்னும் மனிதர்களிடம் முழுமையாக சோதிக்கப்படவில்லை.  இதில் மிக முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால், இந்த ஆராய்ச்சி முழுக்க முழுக்க QBiotics என்ற ஃபார்மசி நிறுவனத்தினாலெயே நடத்தப்படுகிறது. அவர்களே EBC-46 ரசாயனத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளனர்.

ஆகவே இதனை புற்றுநோய்க்கான ஒரு இயற்கை சிகிச்சையாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரப்புவது சரியாகப் படவில்லை.

 

 

Share
Categories
அறிவியல் மருத்துவ ஆய்வு

இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் புதிய மருந்து

இறக்கும் நிலையில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை  உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது.

இறக்கும் நிலையில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற  மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் கோளாறுகள்  உள்ளவர்களிடம்  மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து உள்ளனர். இதில் அதிகமான நோயாளிகள் சோல்பிடிம் மருத்து கொடுக்கபட்ட பிறகு  மேம்பட்டு உள்ளார்கள் என கண்டறியபட்டு உள்ளது. இந்த  மருத்தின் விளைவு 4 மணி நேரம் இருக்கும்.

இந்த ஆய்வு குறித்து ஜாமா நரம்பியல் என்ற மருத்த இதழிலின் உதவி ஆசிரியர் மார்க் பீட்டர்சன்  கூறும் போது   சில நோயாளிகள், “குறைந்தபட்ச உணர்வுள்ள” நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர், அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தனர். இந்த அதிசய முரண்பாடுகளில் ஒன்று, தூக்கமின்மை அல்லது நரம்பியல் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு எதிர் தூக்கமின்மை இருப்பதால், தூக்கமின்மையின் விளைவுகள் காணப்படுகின்றன.எனினும், மேம்பாடுகள் சம்பந்தப்பட்ட நோயாளிகளில் ஒரு சிறிய பகுதியிலேயே மட்டுமே கண்டறியப்பட்டது. என கூறினார்.

டாக்டர் மார்ட்டின் பமலஸ்கி கூறும்போது நம் மருத்துவ நடைமுறையில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Share
Categories
ஆரோக்கியம் இயற்கை மருத்துவம்

உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு

பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாட்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன.
சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக செரிமானமடையும் தன்மை கொண்டது. இதற்குக் காரணம் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் ‘பைரேட்ஸ்’ என்ற எதிர் ஊட்டச்சத்துகள் முளைகட்டிய தானியங்களில் குறைக்கப்பட்டுவிடுவதுதான்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் என்சைம்களைவிட முளைகட்டிய தானியங்களில் அதிகமாக உள்ளன. எனினும், முளைகட்டிய பயறுகளை பச்சையாக உண்பது சுவையாக இருக்காது என்ற கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. ஆனால், “முளைகட்டிய பயறுகளை சுவையூட்டப்பட்டப் பயறுகளாக மாற்றி உண்ணலாம்’’ என்கிறார் இயற்கை உணவியல் நிபுணர் படையல் சிவக்குமார்.
எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் எப்படி முளைகட்டியப் பயறுகளை சுவை நிறைந்த உணவாக மாற்றலாம் என்பது குறித்து அவர் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.
பயறு முளைகட்டும் முறை :
* பச்சைப் பயறை நன்கு சுத்தம்செய்து அலசி 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
* 8 மணி நேரம் கழிந்ததும் நீரை நன்றாக வடித்து ஒரு பருத்தித் துணியால் கட்டிவைக்கவும்.
* அடுத்த 8 மணி நேரத்தில் பச்சைப் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.
சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு (இனிப்பு) செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
* முளைகட்டிய பச்சைப் பயறு – 100 கிராம்
* கேரட் – 2
* தேங்காய் – 1
* கரும்புச் சர்க்கரை – 100 கிராம்
* உலர் திராட்சை – 50 கிராம்
* முந்திரி – 50 கிராம்
* வெள்ளரி விதை – 50 கிராம்
* மாதுளை – 1
* ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
* கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
* தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
* மாதுளையை முத்துக்களாக உதிர்த்துக்கொள்ளவும்.
* இப்போது முளைகட்டிய பயறை ஒரு வாயகன்ற பேசினில் வைத்து துருவிய கேரட், தேங்காய், வெள்ளரி விதை, உலர் திராட்சை, ஏலக்காய்த் தூள், கரும்புச் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
* பிறகு முளைகட்டிய பயறு கலவையில் மாதுளை முத்துகளைத் தூவவும்.
இப்போது சுவையான, ஆரோக்கியமான, ஆற்றல் மிகுந்த சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு தயார் என்கிறார் படையல் சிவக்குமார். அதோடு, அதன் நன்மைகளையும் பட்டியலிடுகிறார்.
சுவையூட்டப்பட்ட முளைகட்டிய பயறு உண்பதால் ஏற்படும் பயன்கள்:
* பஞ்ச சக்திகள் நிறைந்த உணவு.
* அதிக பிராண சக்தி வாய்ந்த உணவு.
* அதிக புரதச்சத்து கொண்டது.
* வைட்டமின் பி 12 நிறைந்த உணவு.
* நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
 * உடலுக்கு வலுவும் ஆற்றலும் தரவல்லது.
Share
Categories
ஆரோக்கியம் தலைப்புச் செய்திகள் மருத்துவ ஆய்வு

புற்றுநோயை மரபணு மாற்றம் மூலம் சரி செய்யலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ‘மரபணுவை மாற்றும் முறை’ மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
உடலின் எந்தப் பாகத்தில் வரும் புற்றுநோயாக இருந்தாலும் அதன் முக்கிய கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கக் கூடிய மரபணுவை மாற்றுவது, மேற்கொண்டு புற்றுநோய் கட்டி உருவாவதை தடுக்கும். முதற்கட்டமாக எலிகளின் மீது இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டதில், இது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று உறுதிபடுத்தபட்டுள்ளது.
கரோலின்ஸ்கா நிறுவனத்தின் பேராசிரியரான ஜூஸ்ஸி டைபல் இதைப்பற்றிக் கூறுகையில், “சாதாரண மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கான உயிரணுக்கள் தனித்தனியே வளர்கிறது என்று நாங்கள் கண்டுபிடித்தவுடன் புற்றுநோய்க்கான மரபணுவை மட்டும் மாற்றுவது சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சிக்கு எந்த அபாயமும் விளைவிக்காததோடு, புற்றுநோயைத் தடுக்கவும் செய்யும் என்று தெரியவந்துக் கொண்டோம்” என்றார். மேலும் “இது மிகவும் குறைவான நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோயின் சிகிச்சைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில் மார்பக, பெருங்குடல், சிறுநீரக பை, தைராய்டு புற்றுநோய்கள் மற்றும் நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியா மற்றும் மைலோமா போன்ற பல வகையான புற்றுநோய்களுக்கு இதனால் தீர்வு காணமுடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Share
Categories
ஆரோக்கியம் மருத்துவ ஆய்வு

புதிய ஆய்வு: மதுபானம், ஷாம்பு, அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும்

நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மரபணு சேதத்தைச் சரிசெய்யும் அணுக்களின் செயல்பாடானது பாதிக்கப்பட்டு, புற்றுநோயை விளைவிக்குமாம்.

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான மரசாமான்கள், அழகுசாதனங்கள், ஷாம்பு மற்றும் மதுபானங்களில் பொதுவாக காணப்படும் ரசாயனங்கள், இயற்கையாகவே நமது உடலில் சிறிது அளவு மட்டுமே இருக்க வேண்டிய ஆல்டிஹைடின் அளவை அதிகரிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை இது அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இந்திய வழி பேராசிரியரான அசோக் வெங்கடராமன் மார்பக புற்றுநோய் மரபணுவான பி.ஆர்.சி.ஏ.2-வை வைத்து மேற்கொண்ட ஆய்வில் சாதரணமாக நம்மைச் சுற்றி காணப்படும் இந்த ஆல்டிஹைட்டின் அதிகமான வெளிப்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். நம் உடல் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் தன்மையுடையது. ஆனால் இந்த ஆல்டிஹட்டின் மிகுதியால் ஏற்படும் மரபணுக்களின் சேதமானது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட உயிரணுக்களை உடையவர்களை இது மேலும் பலவீனம் அடையச் செய்யும்.
இதைப்பற்றி பேராசிரியர் வெங்கடராமன் கூறுகையில், “இந்த ஆய்வானது நமது தினசரி வாழ்வில் இந்த வகையான ரசாயனங்களுக்கு நாம் அதிக அளவில் வெளிப்படுத்தப்படும் பொழுது அது எவ்வாறு புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கிறது என்று அறியவும், மேலும் ஏன் பலவீனமான மரபணுக்களை உடையவர்கள் சுலபமாக புற்றுநோய் வயப்படுகிறார்கள் என்பதை விளக்கவும் ஆகும்” என்றார்.
இந்த ஆல்டிஹைட்ஸிற்கு ஒரு பொதுவான ஆதாரம் மதுபானங்களே ஆகும், நாம் குடிக்கும் மதுவானது அசிடால்டிஹைட் என்னும் ஒரு ரசாயனத்தை நம் உடலில் சுரக்க செய்து இயற்கை நொதியில் முறையை உடைக்கிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதிலும் 50 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பாக ஜப்பான், சீனா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் பொதுவாக 30-60% குறைபாடுடைய மரபணுக்களை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
Share