Categories
அறிவியல் செவ்வாய் கிரகம் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டம்: கோடீஸ்வரர் இலான் மஸ்க் வெளியிட்டார்

கோடீஸ்வரரும், கண்டுபிடிப்பாளரும், தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் கம்பெனியின் தலைவருமான இலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மனிதர்கள் குடிபெயர்ந்து வாழும் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

மனிதர்களை ஒரு பல-கிரக இனமாக உருவாக்குதல்” (Making Humans a Multi-Planetary Species) என்ற அவரது திட்டத்தில் இதன் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து ஒரு உலகளாவிய அழிவு நிகழும் முன்னர் மனிதகுலத்தை பூமியை விட்டு வெளியேற வைக்க வேண்டும் என்று மஸ்க் நம்புகிறார். அந்த முயற்சிக்கான சரியான தேர்வு செவ்வாய் கிரகம்தான் என்கிறார்.

இம்முயற்சிக்குத் தேவையானது மிக அதிக அளவில் உந்துபொருள்(propellant) நிரப்பப்பட்ட, கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக்கலம் (interplanetary spaceship).

மஸ்கின் திட்டப்படி விண்கப்பலைக் காலியாக பூமியிலிருந்து முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் தொடர்ச்சியாக டேங்கர் ராக்கெட்டுகளில் எரிபொருளை அனுப்பி, வழியில் ஆங்காங்கே விண்கலத்தில் நிரப்பவெண்டும். ஒரு வெற்று விண்கப்பலுக்குக் கூட, மனிதகுலம் இதற்கு முன்னர் அனுப்பிய ராக்கெட்டுகளில் நிரப்பியதைவிட அதிக அளவில்  எரிபொருள் தேவைப்படும்.

விண்வெளிக் கப்பலும், ராக்கெட் டேங்கர்களும், மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தக்கனவாக இருக்க வேண்டும். மேலும், செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தில் மீத்தேனை எரிபொருளாக நிரப்பி உபயோகித்து, மீண்டும் விண்கலத்தையும், டேங்கர் ராக்கெட்டுகளையும் பூமிக்கு அனுப்ப முடிய வேண்டும். இல்லையென்றால், செவ்வாய் கிரகம் விண்கப்பல்களின் சுடுகாடாக மாறிவிடும், என்கிறார் மஸ்க்.

 

மேலும் கிரகங்களுக்கு இடையிலான விண்வெளிக் கப்பல், 100 பேர் 80 நாள்கள்வரை வசிக்கும் அழுத்தம் ஊட்டப்பட்ட தளத்துடன் மற்றொரு 400 டன் வரையிலான சரக்கு சேமிக்கும் இடமும் கொண்டதாக இருக்கவேண்டும், என்கிறார் மஸ்க். இச்சரக்குகளில் செவ்வாயில் கட்டுமானப் பணிக்கான சாதனங்களுடன், பிரயாணிகளின் சாமான்களும், எரிபொருள் சாலை கட்டத் தேவையான பொருட்களும் அடங்கும்.

 

Share
Categories
அறிவியல் பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள்

பருவநிலை மாற்றத்தை (Climate change) எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.நிறம் தரக்கூடிய பாசி உருவாவதை தடுக்கின்றபோது, பவளப் பாறைகள் வெளுத்துப்போகிறதுஇயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று நேச்சர் இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போயிற்று என்பதை இந்த ஆய்வு காட்டியது.உடனடி நடவடிக்கைள் மூலம் அரசுகள் இந்த பவளப் பாறைகளை பாதுகாத்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பவள பாறைகளுக்கு இடையில் மீன்கள்படத்தின் காப்புரிமை   இந்த பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தலைமை ஆய்வு ஆசிரியரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் தெரிவித்திருக்கிறார்.“ஆனால், எதிர்காலத்தில் காணப்படும் இந்த பவளப் பாறைகள் மிகவும் வேறுப்பட்டதாக இருக்கப்போகின்றன” என்று அவர்பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.“ஏற்கெனவே இருக்கக்கூடியவற்றை அப்படியே மீட்டெடுப்பது நடைபெறும் காரியமல்ல.

வேறுபட்ட இனங்களின் கலவை இதில் இருக்கும்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், தற்போதைய நிலைமையில், கார்பன் வெளியேற்றம் தொடருமானால், ஆண்டுதோறும் நடைபெறும் பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போவது 2050க்குள் பல இடங்களில் தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Share
Categories
அறிவியல்

டைரனோசொரோஸ் ரெக்ஸ் பற்றிய புதிய தகவல்

டைனோசர்களின் இனம் எனக் கருதப்படும் டைரனோசொரோஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) தொடர்பில்  ஆஸ்திரேலியாவின் நியூ இங்கிலண்ட் பல்கலைகழக (University of New England)  புதைபடிவ ஆய்வாளர்கள் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அவற்றின் தோல்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்றினை அவர்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இதன்படி டைரனோசொரோஸ் ரெக்ஸ்ஸின் தோலானது செதில்களைக் கொண்டிருந்ததாகவும், அவை இறகுகளால் மூடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இத் தகவலை ஆய்வில் ஈடுபட்ட  பில் ஆர். பெல் (Phil R. Bell) என்பவர் வெளியிட்டுள்ளார்.
இவ் விலங்கின் கற்பனை வடிவம் 1918 ஆம் ஆண்டு வெளிவந்த த கோஸ்ட் ஸ்லம்பர் மவுண்டன் (The Ghost of Slumber Mountain) எனும் திரைப்படத்தில் முதன் முதலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சுருங்கிய தோலைக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 1960 ஆம் ஆண்டில் இது தவறான சித்தரிப்பு என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன் காரணமாக 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஜுராசிக் பார்க் (Jurassic Park) திரைப்படத்தில் ஓரளவுக்கு சரிசெய்த உருவத்தினைக் காண்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டைரனோசொரோஸ்  ரெக்ஸ் ஆனது 50 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினமாக கருதப்படுகின்றது.
Share