Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கா உலகம் போப் பிரான்ஸிஸ் வாட்டிகன்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிசுடன் சந்திப்பு

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கும் போப் பிரான்சிசுக்கும் இடையே கருத்து மோதல் இருந்த நிலையில் இன்று முதல் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.  இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட டிரம்ப், முதல் பயணமாக  சவூதி அரேபியா சென்றார். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன பிராந்தியங்களில் பயணம் மேற்கொண்ட டிரம்ப் தற்போது ஐரோப்பிய நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போப் பிரான்சிஸும் டிரம்பும் இதற்கு முன் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. இருப்பினும், பருவநிலை மாறுபாடு, குடியேற்ற விதிகள்  தடையற்ற  முதலாளித்துவம்  ஆகிய விவகரங்களில் டிரம்ப்- போப் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதேபோல், மரண தண்டனை, ஆயுத வியாபாரம் உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டது.

போப் பிரான்ஸிஸுடான சந்திப்பின் போது அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப்  மற்றும் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆகியோரும் உடன் இருந்தனர்.  போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் இத்தாலி அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் நுற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டமும் நடத்தினர். அவர்கள் டிரம்ப்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்து இருந்தனர்.

 

Share
Categories
அமெரிக்கா உலகம்

அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் பிடியிலிருந்த இந்தியர் மரணம்

இந்தியாவை சேர்ந்தவர் அதுல்குமார் பாபுபாய் படேல் (58). கடந்த 10-ந்தேதி இவர் ஈகுவேடார் நாட்டில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்கு விமானம் மூலம் வந்தார்.

அவரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் நுழைவதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே அவரை கைது செய்தனர்.

இதில் தேவையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை இருந்தது தெரியவந்தை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, நர்ஸ் ஒருவர் சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது பகுபாய் படேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது . இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்தார். இதயம் செயலிழப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இவரது இறப்பு குறித்து இந்தியதூதரகம் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Categories
அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணை செய்ய ராபர்ட் முல்லர் நியமனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பரவலாக பாராட்டப்படுகிறது.

கடந்த வாரம், எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். அதிலிருந்து, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத்தொடங்கின.

டொனால்ட் டிரம்பின் பிரசார குழு மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான தொடர்புகள் இருந்தனவா என்பது குறித்து எஃப் பி ஐ மற்றும் நாடாளுமன்றம் ஆராய்ந்து வருகிறது.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை முடுக்கிவிட ரஷ்யா முயற்சித்ததாக அமெரிக்க புலனாய்வு முகமை நம்புகிறது.

இந்தப் புதிய நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், தன்னையும் தனது அணியினரையும் இந்த புதிய விசாரணை, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, விசாரணைக்கு வெளி நபர் ஒருவர் தலைமை வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்திருந்தது.

“எனது பிரசார அணிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த தகவலை முழுமையான விசாரணை உறுதிப்படுத்தும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய செனட் உறுப்பினரான சக் சூமர், முல்லர் இந்தப் பணிக்குப் பொருத்தமான நபர் என்று பாராட்டியுள்ளார்.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படப்போவதாகவும் முல்லர் தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா

ரஷியாவிடம் தகவல்களை பகிர்ந்தது சரியே : அதிபர் டிரம்ப்

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில் பயங்கரவாதம் மற்றும் விமானப் பாதுகாப்பு பற்றிய முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது “முற்றிலும் சரி” என  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

“பயங்கரவாதம் மற்றும் விமான சேவை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும்” ஐ.எஸ்., மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ரஷ்யா மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோஃபை சந்தித்தார் டிரம்ப்.

விமானங்களில் மடிக்கணினியின் உபயோகம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினரின் திட்டத்தை வெளிப்படுத்தும் அதீத ரகசிய தகவல்களை டிரம்ப் பகிர்ந்துள்ளதாக `வாஷிங்டன் போஸ்ட்` தெரிவித்துள்ளது.

தனது பங்குதாரரிடம் இருந்து பெற்ற ரகசிய தகவல்களை, அனுமதி பெறாமல் பகிர்ந்து கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரகசிய தகவல்களை வெளிப்படுத்தும் உரிமை அதிபருக்கு இருப்பதால் இது சட்டப்பூர்வமற்றதல்ல.

Share
Categories
அமெரிக்கா உள்நாட்டு புலனாய்வுத் துறை

அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனரை பதவி நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்துள்ளார்.  ஹிலாரி கிளின்டன் இ-மெயில் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

இதனை குறித்து குடியரசு கட்சியினர் பலரும் வரவேற்றுள்ள நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர், “டிரம்ப் – ரஷ்யா குறித்த புலனாய்வில் கோமி எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று வாதிடுகின்றனர்.

2013 -ல் ஜேம்ஸ் கோமி அப்போதைய அதிபர்  பராக் ஒபாமாவினால் உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். 2016 அதிபர் தேர்தலின் போது, ஜேம்ஸ் கோமியின் சில அறிவிப்புக்களினாலேயே தான் அதிபராக இயலவில்லை என்று அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் அவ்வப்போது குற்றம்சாட்டியிருந்தார்.

சில அமெரிக்க வானொலி வர்ணனையாளர்கள்,  “ஜேம்ஸ் கோமி உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவிக்கேற்ற மனோநிலை கொண்டிருக்கவில்லை. ஆகவே அவரை பதவி நீக்கியது சரியே” என்று கூறினர்.

Share
Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் குடியரசு கட்சி ஜனநாயக கட்சி

“ஒபாமாகேர்” திட்டம் முடிவுக்கு வருகிறது

குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில்  வெற்றியடைந்தை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஒபாமா கேர்’  திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக  தெரிவித்திருக்கிறார்.  ‘ஒபாமா கேர்’ என்பது முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவினால் முன்னர் கொண்டுவரபட்ட சுகாதர பாதுகாப்புத் திட்டமாகும்.

217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா வெற்றிபெற்றுள்ளது. தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய திட்டத்தை வகுப்பதாக அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முதல்படியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.

இந்த அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் மில்லியன் கணக்கானோரை மருத்துவக் காப்பீடு இல்லாமல் ஆக்கும் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிபரின் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆறு வாரங்களுக்கு முன்னர், போதுமான ஆதரவு இல்லாததால் இந்த சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சி இயலாத ஒன்று என்று தோன்றியது.

Share