Categories
அமெரிக்கா அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  செனட் சபை  ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார்.

இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் தேதி ஜேம்ஸ் கோமியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டார்.

வ்ரே நியமனம் குறித்து நாடாளுமன்ற செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபின் வாக்களிப்பில் அவருக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதையடுத்து எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரேவின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share
Categories
அதிபர் டிரம்ப் அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை தலைப்புச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் உளவு இயக்குனர் சாட்சியத்தில் வெளியான 6 விஷயங்கள்

அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, செனட் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியமளித்தார்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த சாட்சியத்தில், வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில், தமக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுமாறு அதிபர் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

மேலும் அவரது சாட்சியத்திலிருந்து வெளியாகும் 6 விஷயங்கள் :

1) டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை

செனட்டர் மார்கோ ரூபியோவின் கேள்வியொன்றுக்கு, கோமி அளித்த பதிலில் ‘டிரம்ப் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

2) ஜேம்ஸ் கோமி விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டார்

ஜேம்ஸ் கோமி அவரது நண்பர்களின் வழியாக விசாரணையின் ஆவணங்களை ஊடகங்களில் கசியவிட்டதை ஏற்றுக்கொண்டார்.

3) டிரம்ப் நீதிக்குத் தடை ஏற்படுத்தினார் என்ற வாதம் இனி எடுபடாது

குடியரசு கட்சியின் செனட்டர் ஜேம்ஸ் ரிஷ், கோமியிடம் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால், டிரம்ப் கோமியிடம் இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை என்பதை கோமி  ஒத்துக்கொண்டார்.

4) நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டது என்று கோமி கூறினார்

ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், கோமி சொல்வது :  “நான் ரகசிய செய்திகளைப் பற்றி எழுதும் நிருபர்களைக் குறை சொல்லவில்லை.. பிரச்சனை என்னவென்றால், இவைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.. தெரிந்தவர்கள் அவைகளைப் பற்றி பேசுவதில்லை..”

5) அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் அரசு வழக்கறிஞர் லொரேட்டா லின்ச், ஹிலாரியின் மீதான விசாரணையில் குறுக்கிட்டார்

6) கோமியின் குற்றச்சாட்டுகள் பொதுவாக அதிருப்தியடைந்த முன்னாள் ஊழியர்கள் சொல்வதைப் போலவே உள்ளது

 

 

 

 

Share
Categories
அமெரிக்கா உலகம் உள்நாட்டு புலனாய்வுத் துறை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரணை செய்ய ராபர்ட் முல்லர் நியமனம்

அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பரவலாக பாராட்டப்படுகிறது.

கடந்த வாரம், எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியிலிருந்து நீக்கினார் அதிபர் டிரம்ப். அதிலிருந்து, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கத்தொடங்கின.

டொனால்ட் டிரம்பின் பிரசார குழு மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான தொடர்புகள் இருந்தனவா என்பது குறித்து எஃப் பி ஐ மற்றும் நாடாளுமன்றம் ஆராய்ந்து வருகிறது.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக தேர்தலை முடுக்கிவிட ரஷ்யா முயற்சித்ததாக அமெரிக்க புலனாய்வு முகமை நம்புகிறது.

இந்தப் புதிய நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் டிரம்ப், தன்னையும் தனது அணியினரையும் இந்த புதிய விசாரணை, குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, விசாரணைக்கு வெளி நபர் ஒருவர் தலைமை வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்திருந்தது.

“எனது பிரசார அணிக்கும் எந்த ஒரு வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு இல்லை என்று எங்களுக்குத் தெரிந்த தகவலை முழுமையான விசாரணை உறுதிப்படுத்தும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் முக்கிய செனட் உறுப்பினரான சக் சூமர், முல்லர் இந்தப் பணிக்குப் பொருத்தமான நபர் என்று பாராட்டியுள்ளார்.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படப்போவதாகவும் முல்லர் தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Share
Categories
அமெரிக்கா உள்நாட்டு புலனாய்வுத் துறை

அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குனரை பதவி நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்துள்ளார்.  ஹிலாரி கிளின்டன் இ-மெயில் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

இதனை குறித்து குடியரசு கட்சியினர் பலரும் வரவேற்றுள்ள நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர், “டிரம்ப் – ரஷ்யா குறித்த புலனாய்வில் கோமி எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று வாதிடுகின்றனர்.

2013 -ல் ஜேம்ஸ் கோமி அப்போதைய அதிபர்  பராக் ஒபாமாவினால் உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார். 2016 அதிபர் தேர்தலின் போது, ஜேம்ஸ் கோமியின் சில அறிவிப்புக்களினாலேயே தான் அதிபராக இயலவில்லை என்று அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் அவ்வப்போது குற்றம்சாட்டியிருந்தார்.

சில அமெரிக்க வானொலி வர்ணனையாளர்கள்,  “ஜேம்ஸ் கோமி உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் பதவிக்கேற்ற மனோநிலை கொண்டிருக்கவில்லை. ஆகவே அவரை பதவி நீக்கியது சரியே” என்று கூறினர்.

Share