இந்தியா-நியூசிலாந்து இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 190 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடியது. 26 ஓவர்களில் முடிவில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 26 ஓவர்களில் முடிவில் இந்திய அணி 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.


One reply on “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் நியுசிலாந்தை வென்றது இந்தியா”
Good Article