Categories
இந்தியா உத்தர பிரதேசம் தலைப்புச் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி காரணம் – உ.பி.-யில் ரயில் விபத்து: 23 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியும்,  72 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதல்கட்ட விசாரணையில், விபத்திற்கான காரணம் தெரியவந்துள்லது. ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றதைக் குறித்து உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கப்படாததால், இவ்விபத்து நேரிட்டது என  தெரியவந்து உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், உத்கல் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும், ஒரு பெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. விபத்தில் 23 பேர் பலியானார்கள். மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு,  காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும்,
இந்த விபத்தில் உயிரிழந்தவரிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிதி உதவி அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *