லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவர் பெயர், டெரன் ஆஸ்பர்ன் என்றும், கார்டிஃபைச் சேர்ந்த அவரது வயது 47 என்றும் தெரியவந்துள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேன் மோதப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்தார். இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று லண்டன் காவல் துறை தலைவர் கிரெஸ்ஸிடியா டிக் தெரிவித்தார்.
மசூதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அதிகரிக்கப்படும் என்று லண்டன் நகர மேயர் சாதிக் கானும் தெரிவித்துள்ளனர்.

