Categories
இலங்கை விளையாட்டுத்துறை

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம்

சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்றெடுக்கப்படும் பதக்கங்களை விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார்.

வறுமை காரணமாக தான் வென்றெடுத்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயசேகர ஒலிம்பிக் பதக்கம் என்பது சுசந்திக்கா ஜயசிங்கவின் ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல என்று கூறினார்.

அது நாட்டுக்கு சொந்தமானது என்று கூறிய அமைச்சர் ஜயசேகர, அதனை விற்பனை செய்வதற்கு சுசந்திக்கா ஜெயசிங்கவிட்கு எந்த உரிமையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

எனவே எதிர் காலத்தில் நாட்டுக்கு கிடைக்கும் பாதகங்களை அதனை வென்றெடுக்கும் வீரர்கள் விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *