Categories
இந்தியா இஸ்ரோ செயற்கை கோள் தலைப்புச் செய்திகள் தொழில் நுட்பம் ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவின் சக்திவாய்ந்த ராக்கெட் ஜிஎஸ்எல்வி-MkIII செயற்கைகோள் ஜிசாட் – 19 ஐ விண்ணில் செலுத்தியது

ஜி.சாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. Mk III ராக்கெட் (GSLV Mk III), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

“ராட்சத ராக்கெட்” என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட்டாகும்.

ஏறக்குறைய 400 கோடி ரூபாய் செலவில் இந்தியா தயாரித்த, அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே இந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

இந்த ராக்கெட் ஜி.சாட்-19 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கை கோளை விண்ணுக்கு சுமந்து செல்கிறது. இந்த செயற்கை கோள் 3,136 கிலோ எடை கொண்டது. இதுவரை ஏவப்பட்ட ஏவுகணைகளை விட மிக அதிக எடை கொண்டது.

அதி நவீன வசதிகளுடன் ஆன தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *