Categories
இந்தியா மகாராஷ்ட்ரா மாநிலங்கள்

மகாராஷ்ட்ரா : முதல்வர் பட்நாவிஸ் சென்ற விமானம் விபத்து; மயிரிழையில் உயிர் தப்பினார்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று லத்தூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். லத்தூர் அருகே சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.  முதல்வருடன் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய  அனைவரும் காயங்களின்றி உயிர்பிழைத்துள்ளனர்.

பின்னர் வேறு வாகனம் மூலம் முதலமைச்சரும் அதிகாரிகளும் லத்தூர் சென்றனர். விபத்து குறித்து முதல்வர் பட்நாவிஸ் ட்விட்டரில் “தனக்கும் குழுவினருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை” என்று பதிவு செய்துள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *