வத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள்

வத்திக்கான் கார்டினல்மீது பல்வேறு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள்
Jun 29, 2017

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த  மூத்த கத்தோலிக்க கார்டினல் மீது பலவேறு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண போலிசார் வியாழனன்று தெரிவித்துள்ளனர்.

போப் பிரான்சிஸின் தலைமை நிதி ஆலோசகரான கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு இப்போது ஆளாகியுள்ளார். இவர் போப்பிற்குப் பின்னால் வத்திக்கானில் மூன்றாவது மிக சக்தி வாய்ந்த நபராவார். இதுவரை கத்தோலிக்க திருச்சபையில் இவ்வளவு உயர்ந்த தரவரிசையில் உள்ள வத்திக்கான் அதிகாரி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டகளுக்கு ஆளானதில்லை.

விக்டோரியா மாநில பொலிஸ் துணை ஆணையாளர் ஷேன் பட்டன், கார்டினல் பெல்லுக்கு எதிரான  புகார்களைக் குறித்த மேலதிக விவரங்கள்  எதனையும் விவரிக்கவில்லை.

பெல் 10 சிறுவர்களை தவறாக பயன்படுத்தியதாக முன்னதாக கூறப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 20 வயதிலிருந்து 20 வயதிலிருந்து 50 வயதிற்குள் இருக்கிறார்கள்.

பெல், இவை தவறான குற்றச்சாட்டுகள் என்று மீண்டும் மீண்டும் மறுத்துள்ளார். அவர் ஜூலை 18 ம் தேதி தமது தரப்பினை விளக்கும் ஆவணங்களை தாக்கல் செய்ய மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.