லண்டனில் தாக்குதல்கள்: லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதியது; அருகில் கத்திக்குத்து

லண்டனில் தாக்குதல்கள்: லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதியது; அருகில் கத்திக்குத்து
Jun 4, 2017

மத்திய லண்டனில், ஒரு வாகனம் பாதசாரிகள் மீது மோதியது மற்றும் கத்திக்குத்து சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவத்திற்குப் பின்னர் ஒன்றுக்கும் அதிகமான நபர்கள் மரணம் அடைந்தனர் என்றும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரசா மே இச்சம்பவம் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றார்.

ஆயுதம் தாங்கிய போலீசார் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

வாக்ஸ்ஹால் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.  மேலும் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அவர்கள் மற்றொரு தாக்குதல் சம்பவத்தையும் எதிர்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

லண்டன் பாலத்தில் தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் ஆறு பேர் மீது ஒரு வேன் மோதியதாகத் தெரிவித்தார்.