மான்செஸ்டர் தாக்குதல் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் மீண்டும் பகிர பிரிட்டன் ஒப்புதல்

மான்செஸ்டர் தாக்குதல் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் மீண்டும் பகிர பிரிட்டன் ஒப்புதல்
May 28, 2017

மான்செஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐக்கிய ராஜ்யத்தின் காவல்துறை அதிகாரிகள் உளவுத்தகவல்களை அமெரிக்க அதிகாரிகளுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மான்செஸ்டர் சம்பவ விசாரணை விவரங்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு கசிந்ததை அடுத்து, ஐக்கிய ராஜ்யத்திற்கும் அமெரிக்காவுக்கும் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து புதிய உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, புலனாய்வு பகிர்வு மீண்டும் தொடங்கியது என பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் மூத்த அதிகாரியான மார்க் ரோலே தெரிவித்தார்.

முன்னதாக,அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் கசிவிற்கு பொறுப்பான தனி நபர்கள் மீது வழக்கு பதியப்படவேண்டும் என்றார். இந்த விவகாரத்தை நீதித்துறை மற்றும் பிற நிறுவனங்களின் பரிசீலனைக்கு உத்தரவிட்ட்டுள்ளதாக அவர் கூறினார்.