போலீசில் ஆஜராக டெல்லி சென்றார் டி.டி.வி.தினகரன்

போலீசில் ஆஜராக டெல்லி சென்றார் டி.டி.வி.தினகரன்
Apr 22, 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கட்சி இரு அணிகளாக பிரிந்து போட்டியிட்ட நேரத்தில், இரட்டை இலை சின்னத்தை தமது அணிக்குப்பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மீது டில்லி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, டில்லி போலீசார் முன்பு தினகரன் இன்று ஆஜராகிறார். அவரை கைது செய்ய டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரனையும், அவரது குடும்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஒன்று சேருவதற்கான முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேரில் ஆஜராவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டு தினகரன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது . ஆனால் அவகாசம் அளிக்க டில்லி போலீசார் மறுத்து விட்டனர். இப்படிப்பட்ட பரபர்ப்பான சூழ்நிலையில், இன்று அவர் ஆஜராகும்பட்சத்தில், தினகரனை கைது செய்து காவலில் எடுக்கவும் டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.