பிளாட்பாரத்தில் உறங்கிய 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

Jul 10, 2017

தலைநகர் டெல்லியில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி, துப்புரவு தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள கான்னாட் என்ற பகுதியில் வீடு இல்லாமல் அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் துப்புரவு பணி செய்து வரும் நபர் ஒருவர் மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்நபர் சிறிது நேரம் கழித்து சிறுமியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற நபர் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.
