பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

Jul 30, 2017

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார்.
அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அடுத்தவாரம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.
