பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியேறியது

பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தம்: அமெரிக்கா வெளியேறியது
Jun 2, 2017

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  வியாழனன்று தன்னுடைய நிர்வாகம் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

“பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு மிக மிக நியாயமற்றது. ஆகவே நாம் வெளியேறுகிறோம்”, என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் முடிவு அவரது தேர்தல் பிரச்சார வாக்குறுதியை பூர்த்தி செய்வதுடன், குடியரசு கட்சியினரின் உலகளாவிய காலநிலை ஒப்பந்த எதிர்ப்பினை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ் உடன்பாட்டின் விமர்சகர்கள் அது பொருளாதாரத்தைப் பாதிக்குமென வாதிடுகின்றனர், ஆனால் ஆதரவாளர்கள் அது எதிர்காலத்தில் புதிதாக வேலைகளை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

“பாரிஸ் ஒப்பந்தம் நமது பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்; அது நம்மை நிரந்தரமாக அனுகூலமற்ற நிலைக்கு  உட்படுத்துகிறது.” என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப்பின் அறிவிப்பிற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.  இவ்வொப்பந்தம் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று டிரம்ப் கூறியதை மூன்று முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் மறுத்தனர்.