நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உடனே மூடப்பட வேண்டும் : நீதிமன்ற ஆணை

Jul 12, 2017

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், அது உடனே மூடப்பட வேண்டும் என நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது.
நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் சரத் இனிகோ என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.
