நீச்சல் போட்டி: இங்கிலீஷ் கால்வாயை தாண்டி 66 வயது பாட்டி சாதனை

Jun 22, 2017

ஒவ்வொரு வருடமும்  கால்வாய் நீச்சல்  அசோசியேஷன்(Channel Swimming Association ) சர்வதேச அளவில் நீச்சல் போட்டி நடத்தி வருகிறது.  இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த வருடம் சி.எஸ்.ஏ நடத்திய நீச்சல் போட்டியில் ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பட் ஹலண்ட் ஷார்டீ  வெற்றி பெற்றுள்ளார்.66 வயதான இவர் பல தடைகளை  மீறி வென்றுள்ளார். நீரின் வெப்பம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. மேலும் அவர் முகத்தில் ஜெல்லி பிஷ் கடித்தது. இதையும் மீறி அவர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நீந்தும் வழியில் பெரிய சன் பிஷ் பார்த்ததாக கூறியுள்ளார்.

சி.எஸ்.ஏ. மூதாட்டியின் சாதனையை உறுதி செய்துள்ளது. ஓய்வு பெற்ற செவிலியரான ஷார்டீ  வெஸ்ட்புருக் பகுதியை சேர்ந்தவர். இவர்  இங்கிலாந்தில் இருந்து மார்குயே,பிரான்ஸ் வரை நீந்தி சென்று கடந்த சனிக்கிழமை தனது போட்டியை முடித்துள்ளார்.

இதனை கடக்க இவர் 18 மணி நேரம் எடுத்துக்கொண்டார். கடுமையான நீரோட்டம் காரணமாக கடைசி 3 மைலை கடக்க மூன்று மணி நேரம் ஆகியது. இதற்கு முன் 2011ஆம் ஆண்டு தனது 60 வது வயதில் இப்போட்டியில் பங்கு பெற்றார்.ஆனால் அதில் அவர் தோல்வி கண்டார்.இந்த முறை 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயதான சுயி ஒல்தம் செய்த சாதனையை முறியடித்துள்ளார்.